Monday, October 04, 2004

தமிழ்ச்சாரல்

இந்தப் பதிவை விளம்பரம் என்று வகைப்படுத்த இயலக் கூடும். ஆனால், இந்த விளம்பரத்தால் எனக்கோ என் குடும்பத்துக்கோ எந்தவிதமான ஆதாயமும் இல்லை என்றும் சொல்லி வைக்கிறேன் :-)

தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட பெயர் வையவன். கல்கியில் நிறைய எழுதியிருக்கிறார். எனவே, கல்கி வாசகர்களுக்குப் பரிச்சயமான பெயராகக் கூட இருக்கலாம். அவர் தம் நண்பர்களுடன் இணைந்து தமிழ்ச்சாரல் என்கிற இணையதளத்தைத் தொடங்கி இருக்கிறார். இணையதளத் தொடக்க விழா செப்டம்பர் 11 அன்று, வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது என்று அறிகிறேன். இணையதளத்தின் முகவரி http://www.tamilchaaral.com

நான் சென்று பார்த்தபோது ஆசிரியர் குழு, குறிக்கோள்கள், முன்னுரை என்று சில பக்கங்களே இருக்கின்றன. நாளாக நாளாக கனமான அல்லது கவனம் ஈர்க்கிற உள்ளடக்கம் வருமென்று உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். எனவே, இணைய உலா வரும் நண்பர்கள் இந்தப் பக்கமும் எட்டிப் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

பின்குறிப்பு: வையவன் எங்கள் குடும்ப நண்பர். அதைத் தவிர இத்தளத்துக்கும் எனக்கும் வேறெந்தத் தொடர்பும் இல்லை என்ற Disclosureம் பின்னால் எனக்கு உதவக்கூடும் என்பதால் இப்போதே முன்ஜாக்கிரதையுடன் சொல்லி வைக்கிறேன் :-)

2 comments:

Jayaprakash Sampath said...

இப்போதுதான் அந்த இணையத்தளத்தை சென்று பார்த்தேன். முகவரியை பார்த்ததும் ஆச்சர்யம். என் இல்லத்தில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் தான் இருக்கிறது.

வையவன் எழுத்துக்களை கல்கியில் நிறையப் படித்திருக்கிறேன். 'ஜமுனா' நினைவிருக்கிறதா? அற்புதமான கதை. ஹோட்டல் வைத்திருக்கும் ராவ், அதில் ஆர்வமில்லாமல் கிரிக்கெட் ஆசையுடன் இருக்கும் அவர் மகன், கிரிக்கட் ஆர்வமேற்படுத்தும் டிஎ·ப்ஓ, ஹோட்டல் சிப்பந்திகள், மாஸ்டரின் பெண் ஜமுனா, ஜமுனாவின் காதல், கிரிக்கெட் ஆசையைத் துறந்து விட்டு, ஓட்டல் தொழிலை ஏற்று நடத்தும் அவர் மகன் என்று படித்த போது உள்ளத்தை கொள்ளை கொண்ட கதை. [ஆனால் இப்போது படித்தால் எப்படி இருக்கும் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது :-)]புத்தகமாக வெளிவந்த போது, ஆனந்த மடம் ( அல்லது ஆனந்த விலாஸ்) என்ற பெயரில் வந்தது. எனக்குத் தெரிந்து யாரும் இந்தக் கதையைப் படித்ததாகவோ, அல்லது நல்லகதைகளில் ஒன்றாகவோ இதைக் குறிப்பிட்டதில்லை. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்த போது, சா.கந்தசாமியுடன் ஏற்பட்ட ஒரு மோதலின் போது, காலம் சென்ற சு.சமுத்திரம் இதனைக் சிறந்த கதைகளில் ஒன்றாகச் சொன்னார். கல்கியில் தொடராக வந்த ' ஜங்ஷனில் ஒரு மேம்பாலம் ' என்ற கதையும் நல்ல படைப்பு.

இவர் எங்கே என்று தேடியிருக்கிறேன். பார்த்தால் மூக்குக்கு கீழேயே இருக்கிறார். அடையாளங்காட்டியதற்கு நன்றி PKS.

PKS said...

Hi Prakash, you are welcome. In 60 short stories that Sivasankari compiled as collection for her 60th Birthday one of Vaiyavan's stories is also there. Its titled "Tractor" FYI. Thanks and regards, PK Sivakumar