Tuesday, November 02, 2004

தீர்ப்பு அறியும் நேரம்

நவம்பர் 2, 2004 - மாலை 6 மணி EST

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் நிறைவுறுகிறது. எந்த மாநிலத்தில் எப்போது நிறைவுறும் என்பதை இங்கே காணலாம். ஒரு மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்த சில மணித்துளிகளிலேயே எல்லா தொலைகாட்சிகளும் அம்மாநிலத்தை வெல்லப் போகும் ஜனாதிபதி வேட்பாளர் விவரத்தை எக்ஸிட் போல் அடிப்படையில் வெளியிட உள்ளன. முடிவுகளை வெளியிடுவதில் 2000 வருட இழுபறி, சிக்கல் ஆகியவை நேராமல் இருக்க பலவிதமான முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அறிகிறோம். முடிவுகள் வெளியான சில மணித்துளிகளில் செய்தி ஊடகங்களின் இணைய தளங்களிலும் அவ்விரங்களைக் காண முடியும்.

பென்சில்வேனியா மாநிலத்தில் புரவிஷனல் பாலட்கள் (பெயர் இல்லை என்பது போன்ற காரணங்களால் வாக்களிக்க முடியாதவர்கள் அளிக்கிற வாக்கு. பின்னர் இது வாக்களித்தவர் பற்றிய விவரங்களைச் சரிபார்த்தபின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்) பற்றாக்குறை என்ற தகவல்.

www.cnn.com, www.cbsnews.com, www.nytimes.com, news.yahoo.com, www.ap.org, www.drudgereport.com, www.salon.com, www.msnbc.com, www.reuters.com ஆகிய இணையதளங்கள் தேர்தல் செய்திகளுக்காக கவனிக்கப்பட வேண்டியவை. பாக்ஸ்நியூஸ் சேனலின் பாரபட்சமின்மை பற்றி எனக்குக் கேள்விகள் இருப்பதால் அதைக் குறிப்பிடவில்லை. மேலே சொன்ன செய்தி ஊடகங்கள் பாரபட்சமற்றவை என்றும் நான் சொல்ல மாட்டேன்.

No comments: