Sunday, November 21, 2004

மூன்று வார்த்தைகள்

நேற்றைய வார்த்தை: அனுப்பிரவேசம். பொருள்: தொடர்ந்துபுகுகை (Entering after another). உதாரணம்: இராமன் வழியில் இலக்குவனும் அனுப்பிரவேசித்தான்.

இன்றைய வார்த்தை: இரண்டுபடுதல். பொருள்: பிரிவுபடுதல் (to disagree, dissent, become opposed), ஐயுறுதல். உதாரணம்: ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

நாளைய வார்த்தை: எதிர்மொழி. பொருள்: மறுமொழி (Answer, reply), மறுப்புரை (rejoinder, counter-argument). உதாரணம்: ஜெயேந்திரர் கைது குறித்த இந்துத்துவா சக்திகளின் கருத்துகளுக்குப் பொதுமக்கள் பெரும்பான்மையான அளவில் எதிர்மொழி அளித்து வருகிறார்கள்.

எதிர்மொழிக்குப் பதிலாக நாம் பெரும்பாலும் எதிர்வினை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். (நானும் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆனால், சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, எதிர்வினை என்ற சொல்லுக்கு எதிர்காலத்துக் காரியம் (future events) என்ற பொருள் தருகிறது. உதாரணமாக, கணியெனைக் கூறிய எதிர்வினை யெல்லா மெஞ்சா யெய்தி என்ற பாடல் வரியையும் தருகிறது.

எனக்குள் எழும் கேள்விகள்:

1. அப்படியென்றால், எதிர்வினை என்ற சொல்லை மறுமொழிக்கும் மறுப்புரைக்கும் பயன்படுத்துவது தவறா?
2. இல்லை, காலப்போக்கில் எதிர்வினையின் பொருள் மறுமொழி, மறுப்புரை என்றும் மாறிவிட்டதா?
3. அல்லது, எதிர்வினைக்கு இன்னொரு பொருள் மறுமொழி, மறுப்புரையா?

விடை தெரிந்தவர் உதவ வேண்டுகிறேன். விடை தெரியும்வரை, தேவையான நேரங்களில் எதிர்மொழி அல்லது எதிர்வாதம் என்ற சொல்லைப் பயன்படுத்த உத்தேசம்.

4 comments:

இராதாகிருஷ்ணன் said...

இன்று rejoinder-க்கு நல்ல தமிழ்ச் சொல்லை தேடிக்கொண்டிருந்தேன், நன்றி!
சென்னைப் பல்கலைக்கழக அகராதி தற்போது கடைகளில் கிடைக்கிறதா?
உங்கள் வலைப்பதிவின் 'இன்றைய வார்த்தை' பகுதியில் கலைச்சொற்கள் ஏதேனும் வந்தால், அதை http://ta.wiktionary.org-யிலும் போடமுடியுமா என்று பாருங்கள்.

PKS said...

Hi Radhakrishnan, You can buy all the volumes of Tamil Dictionary from Madras University. There are 6 volumes and 1 supplement volume. I think each volume costs around 90 Rupees. I bought it with the help of the bookshop Writer Dilipkumar runs. He can be contacted at dilipbooks at eth.net Hope this helps. Thanks, PK Sivakumar

இராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவகுமார்!

ச.முத்துகுமார் (Muthukumar.S) said...

நானும் கத்துகுட்டிதான். சேர்ந்தே கற்போமே ;)

எதிர்வினை
"ஜெயேந்திரரை கைது செய்தால் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தெரிந்தே ஜெ. இந்த முடிவை எடுத்தார். "

வழக்கு வாதம் தொடர்பாக வரும்போது எதிர்மொழி பயன்படுத்தலாமென்று நினைக்கிறேன்.

எதிர்மொழி

தம்பி என்னை போலில்லை அப்பா எது சொன்னாலும் எதிர்மொழி பேசுவான்.

இப்படி பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது :-).



எனக்கு தோன்றுவது ( தவறாகவும் இருக்கலாம் ;) )

1. தவறு. எதிர்வினை எதிர் வினைதான்.