Monday, November 29, 2004

கொண்டாட்டங்களின் காலம்

இங்கே நவம்பரும் டிசம்பரும் கொண்டாட்டங்களின் காலம். விடுமுறையின் காலம். பரவசத்தின், அன்பின், பண்பின், மன்னிப்பின், பெருந்தன்மையின், நன்றி சொல்லுதலின் காலம். பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுகிற காலம். போகிற ஆண்டை வழியனுப்பி விட்டு, வருகிற ஆண்டுக்காக ஆடிப் பாடித் தயாராகிற காலம். பெருங்குளிர்ப் பிரதேசங்களில், வானம் நினைக்கிற போதெல்லாம் பூமிக்குப் பனிப்புடவை கட்டிப் பார்க்கிற காலம். வேலையினூடே உண்டும், உண்பதுவே வேலையாகவும் வாழ்ந்து பார்க்கிற விருந்துகளின் காலம்.

எழுதுவதும், வாசிப்பதும், சிந்திப்பதும் வாழ்வைக் கொண்டாடுவதற்குத்தானே. வாழ்க்கையே கொண்டாட்டமாகக் கொஞ்ச நாள் இருக்கப் போகிற இந்நாட்களில் எழுதாமல் வாழ்க்கையைக் கொண்டாடலாமா என்று தோன்றுகிறது. வாழ்க்கைக்கு என்னால் வேறென்ன செய்ய முடியும். அதை எழுதவிட்டுவிட்டு நான் வாசிப்பதைத் தவிர.

No comments: