Tuesday, November 30, 2004

எ.சுப்ராயலு நேர்காணல்

நவம்பர் 2004 காலச்சுவடில் வெளியாகியுள்ள கல்வெட்டியல் மற்றும் வரலாற்றியல் பேராசிரியர் எ.சுப்ராயலுவின் இந்த நேர்காணல் கவனத்துக்குரியது. அந்தக் காலத்தில் ஜாதிகள் இருந்த நிலை, ஜாதீய ஆதிக்கம் மாறி வந்துள்ள நிலை, தொழிலையும் ஜாதிகள் காலப்போக்கில் மாற்றிக் கொண்ட முறை, குடவோலை முறை, சமயங்களின் செல்வாக்கு என்று பல சுவையான தகவல்களைக் கல்வெட்டியல் அடிப்படையில் பேராசிரியர் விளக்குகிறார். ஆதாரங்கள் எதுவுமின்றி அரசியல் மற்றும் தனிப்பட்டக் கொள்கைகளின் அடிப்படையில் வெறும் கையில் தமிழ் வரலாற்றை முழம் போடுகிற காரியம் இத்தகைய கல்வெட்டியல் வளருவதால் நின்று போகும். எனவே, இத்தகைய துறைகள் தமிழில் மேலும் வளர்வது இன்றியமையாதது. இவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் கிடைக்குமா என்று தேடுகிற எண்ணத்தை இந்த நேர்காணல் என்னுள் எழுப்பியது. வெங்கடாசலபதியும் ரவிக்குமாரும் கண்ட நேர்காணல் இது.

No comments: