இன்றைக்கான வார்த்தை: கன்னைபிரித்தல். பொருள்: விளையாட்டில் இருகட்சி வகுத்தல் (to divide a company into two parties for a game). உதாரணம்: அம்பானி சகோதரர்களுக்கிடையேயான பிரச்னையால் ரிலையன்ஸ் நிறுவனமே கன்னைபிரியும் வாய்ப்பிருக்கிறது. (உதாரணம் சரியா என்று தெரியவில்லை.)
வல்லின ஒற்று மிகும் இடம்: அப்படி, இப்படி, எப்படி ஆகியவற்றின் பின்னால் வல்லின ஒற்று மிகும்.
உதாரணங்கள்: அப்படிக் கூறினான், இப்படிக் கூறினான், எப்படிக் கூறினான், அப்படிச் செய்தான், இப்படிச் செய்தான், எப்படிச் செய்தான், அப்படித் திணறினான், இப்படித் திணறினான், எப்படித் திணறினான், அப்படிப் பார்த்தான், இப்படிப் பார்த்தான், எப்படிப் பார்த்தான்
பி.கு: என்னிடம் நன்னூலுக்கு இருவர் எழுதிய உரைகள் உள்ளன. சிங்கப்பூர் சித்தார்த்தன் எழுதிய இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் என்ற புத்தகமும் இருக்கிறது. இவைகளைப் பின்னர் வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ள முயல்வேன். இப்போது வல்லின ஒற்று மிகும் இடங்களை விவரிக்க, "பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி?" (எழுதியவர்: பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன்) பயன்படுத்துகிறேன். இந்தப் புத்தகத்தை பற்றி இணையக் குழுவொன்றில் முனைவர் நா. கணேசன் எழுதியதன் மூலம் அறிந்தேன். பின்னர் வாங்கினேன். ஒற்று தொடர்பான விதிகளை இந்தப் புத்தகம் சொல்கிற விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒற்று மிகும், மிகா இடங்களை அறிய இப்புத்தகத்தை நானும் இணையக் குழு நண்பர்களுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment