Friday, December 17, 2004

என் பன்னிரண்டு

முன்குறிப்பு: பெரியாரைப் பற்றியும், இந்து மதம், பிற மதங்களைச் சிலர் பார்க்கிற பார்வை பற்றியுமான பரஸ்பர சாடல்கள் மரத்தடியில் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. என் பங்குக்குக் கீழே இருக்கிற மடலைப் போட்டேன். அதை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.

(சொரங்கு பிடித்த கை சும்மா இருக்காது என்று எங்கள் ஊர்ப் பக்கத்தில் சொல்வார்கள். அந்த மாதிரிதான் பேனா எடுத்த கையும். துறுதுறுவென்று நமைச்சல் எடுக்கிற கைகளை எவ்வளவு நேரம் கட்டிப் போடுவது? :-) அதனால், ஒரே ஒரு மடலாவது எழுதி வைப்போம் என்று ஆரம்பித்தேன்.

"என் பத்து" என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து, பன்னிரண்டாகி விட்டது. இதில் இருக்கிற ஒவ்வொரு பாயிண்ட்டையும் விரிவாக விரித்து விவரமாக எழுதவும் முடியும். இன்னும் சில பாயிண்டுகளை விட்டிருக்கலாம். என் நோக்கம் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து, எவரையும் போட்டுத் தாக்குவதில்லை. ஒன்றுமே சொல்லாமல் போவதைவிட, ஒன்றிரண்டு வரிகளில் என் சிந்தனையைத் தொகுக்கலாம் என்று ஆரம்பித்தேன். அதுவே இவ்வளவு பெரிதாகி விட்டது.

இந்த மடலுக்காக இந்துத்துவவாதிகள், பெரியார் ஆதரவாளர்கள், இடதுசாரி நண்பர்கள், முஸ்லீம் நண்பர்கள், மற்ற நண்பர்களால் பதில் மடல்களாலும் அல்லது நேரிடையான/மறைமுகமான விமர்சனங்களாலும் நான் பலமாகத் தாக்கப்படலாம். அவரவர் விரும்புவதை அவரவர் செய்வதை யார் தடுக்க முடியும்? ஆனாலும், என் கருத்துகள் இவை என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. சுயேச்சையான கருத்துகள் இருந்தால் மட்டும் போதாது. அவை வலுவுள்ளவையாகவும் இருக்க வேண்டும். ஜெயகாந்தன் அப்படிப்பட்ட சுயேச்சையான, வலுவான கருத்துகளுக்கான உதாரணம். என் சுயேச்சையான கருத்துகளில் வலுவிருக்கிறதா இல்லையா என்பதைவிட நியாயமும், என் குறையைப் பார்ப்பதுபோல பிறர் குறையைப் பார்க்கிறேனா என்ற எண்ணமும் இருக்கின்றன என்று தெளிவாகச் சொல்ல முடியும்.

இந்த மடலுக்கு வரும் பதில்களுக்கு பதில் சொல்லவும், அவை குறித்தான விவாதங்களில் ஈடுபடவும் முடியாமல் போவதற்காக இந்த மடலை ஆதரிப்பவர்களும், விமர்சிப்பவர்களும் மன்னிக்கவும். இன்ஷா அல்லா?, இறைவன் எல்லாருக்கும் பெருந்தன்மையையும், நல்ல புத்தியையும் கொடுக்கட்டும். இதைப் படித்துவிட்டு, குழம்பிப் போகிறவர்களையும், கோபம் கொள்கிறவர்களையும் அதே இறைவன் காப்பாற்றட்டும்.

அன்புடன், பி.கே. சிவகுமார்.)

1. எல்லா மதங்களைப் பற்றிய விவாதமும் விமர்சனமும் தேவைதான். ஆனால், பாதி அல்லது அதற்கு மேற்பட்ட வாசகர்களுக்கு இருக்கிற கேள்வி (இவர்களில் மௌனமாக வாசிப்பவர்களும் அடக்கம்) நேச குமார், அரவிந்தன் நீலகண்டன், ஆசாரகீனன் போன்றோர் "வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தர்ம அடி போடு" என்கிற மாதிரி, இஸ்லாத்தை மட்டுமே குறிவைத்து விமர்சிப்பது ஏன் என்பதுதான். பாதி அல்லது அதற்கு மேற்பட்ட என்று எந்த அடிப்படையில் சொல்கிறாய், ஏதேனும் ஆய்வு செய்தாயா என்று கேட்காதீர்கள். இதை நம்ப விருப்பமில்லையென்றால், இந்தக் கேள்வி எனக்கும் என்னைப் போன்ற "அற்ப அறிவுஜீவமற்ற சில பதர்களுக்கும்" இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்தக் கேள்வியை ஒருவர் கேட்டாலும் கோடானுகோடி கேட்டாலும், இந்தக் கேள்வியில் இருக்கிற நியாயத்தை யாரும் மறுத்துவிட முடியாது.

2. பெரியாரின் பிரச்னை சமூகத்தில் புரையோடிப் போயிருந்த புண்களுக்கும் ஜாதிக் கொடுமைகளுக்கும் காரணமாக பிராமணர்களை மட்டுமே குற்றம் சாட்டியது. அதனாலேயே பெரியாரின் நோக்கம் (ஜாதிகளை ஒழிப்பது, மூடநம்பிக்கைகளை ஒழிப்பது முதலியன) நல்லதாக இருந்தாலும், அவர் சொன்ன வழிமுறைகளும் தீர்வுகளும் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை. இந்தக் கருத்தை இன்றைக்குப் பிராமணர்களில் பலரும், இடதுசாரிகளில் பலரும்கூட சொல்கிறார்கள். ஏன் நேசகுமாருக்கும், ஆசாரகீனனுக்கும், அரவிந்தன் நீலகண்டனுக்கும் கூட இந்தக் கருத்து ஏற்புடையதாக இருக்கக் கூடும். இதே தர்க்கத்தை வைத்து - எல்லா மதங்களிலும் புண்களும் விமர்சிக்கப்பட வேண்டியவையும் இருக்கின்றன. ஆனால், நீங்கள் இஸ்லாத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்கிப் பெரியார் செய்த அதே தவறைச் செய்கிறீர்களே என்பதுதான் நேசகுமார்களுக்கு என் கேள்வி. பெரியாரை எந்தக் கருத்தின் அடிப்படையில் ஒதுக்குகிறேனோ, அதே கருத்தின் அடிப்படையில்தான் நேசகுமார்களையும் நான் ஒதுக்குகிறேன். அதுதான் கன்சிட்டன்ஸி மற்றும் நேர்மையான செயலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

3. இந்துத்துவா சக்திகள் அடிக்கடி மேற்கோள் காட்டுகிற நபராக விவேகானந்தர் இருக்கிறார். (இதெல்லாம் விபத்துதான். இப்படி நேரவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பதில் நான் உட்பட மதச்சார்பின்மை பேசுகிற அனைவருக்கும் பங்குண்டு. இப்படியே போனால் ம?¡த்மா காந்தி உட்பட அனைவரும் இந்துத்துவாவை ஆதரித்தார்கள் என்ற ஒரு பிம்பம் இந்துத்துவவாதிகளால் கட்டமைக்கப்படலாம். இதற்குப் பின்னர் வருகிறேன்.) விவேகானந்தரை இந்தியாவின் துறவியாக நான் பார்க்கிறேன். இந்துத்துவ துறவியாகப் பார்க்கவில்லை. (சிறுவயதில் படித்தது. எனவே, நினைவிலிருந்து எழுதுகிறேன்.) பிராமணர்களை விமர்சிப்பதற்கு முன் அவர்களிடமிருக்கிற கற்றுக் கொள்ளத் தகுந்த, தேவையான விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்று விவேகானந்தர் சொன்னதாகப் படித்திருக்கிறேன். இந்த மேற்கோள் பிராமணர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் பிடித்தமான மேற்கோளாக இருக்கும். இதே தர்க்கத்தை நேசகுமார்கள் ஏன் இஸ்லாத்துக்குப் பயன்படுத்துவதில்லை. இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு முன், இஸ்லாத்தில் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவற்றைப் பற்றிப் பேசலாம். அதன்பிறகு இஸ்லாத்தை விமர்சித்தாலாவது அவர்களின் நோக்கம், நேர்மை குறித்து நம்ப முடியும்.

4. பிராமணர்களை விமர்சிப்பதன் மூலமும், பிராமணர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் சமூக மாற்றம் வந்துவிடும் என்று பெரியார் நினைத்தது எவ்வளவு சரியில்லையோ, அவ்வளவு சரியில்லை, முஸ்லீம்களை விமர்சிப்பதன் மூலமும், பயங்கரவாதத்தை நம்புகிற இஸ்லாமியர்கள் சிலரை மேற்கோள்களில் காட்டிப் பேசுவதன் மூலமும், பயங்கரவாதத்தை ஒழித்துவிடலாம் என்பதும். பயங்கரவாதம் என்ற நோய் தான் பற்றிப் படர பல்வேறு வழிகளைக் கையாளும். சில நேரங்களில் அது மதம் என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது விடுதலை என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது மொழிப்பற்று, நாட்டுப் பற்று என்ற பெயர்களில் கூட வரும். அந்த மாதிரி நேரங்களில் பயங்கரவாதம் எந்தக் காரணத்தைப் பயன்படுத்துகிறதோ, அந்தக் காரணத்தைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கிற வியூகமாக இருக்க முடியும். ஆனால், இந்துத்துவா நண்பர்கள் அதற்கு மாறாக இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற பிரசாரத்தை மிகவும் சாமர்த்தியமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்து வருகிறார்கள். இது பயங்கரவாதத்தை முறியடிக்க உதவாது. மாறாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையவர்களை இன்னமும் அந்நியப்படுத்தவே இது உதவும்.

5. இந்து மதத்தில் குறைகளும் உண்டு. நிறைகளும் உண்டு. ஆனால், இந்து மதம் இந்துத்துவவாதிகளுக்குச் சொந்தமானதல்ல. நாத்திகர்கள் கூட இந்துக்கள்தான். இந்து மதம், மதமே கூட இல்லை. அது வாழ்ககை முறை அல்லது ஒரு கலாசாரம். அதனால்தான், ஸாரே ஜ?¡ன் ஸே அச்சா (பாடல் வரிகள் தவறெனில் மன்னிக்கவும்) எழுதிய இஸ்லாமியக் கவிஞர் கூட அல்லாமா இக்பால் அந்தப் பாடலில் - "?¢ந்துஸ்தான் அமாரா" (மறுபடியும் வரியில் தவறெனில் மன்னிக்கவும்) எழுதியிருக்கிறார். எனவே, இந்தியாவில் வாழ்கிற எந்த முஸ்லீமுக்கும் கூட இது அவர்களுடைய இந்துஸ்தான் தான். இதை நீ சொல்லலாம், இக்பால் போன்ற சிலர் சொல்லலாம். எல்லா முஸ்லீம்களும் சொல்கிறார்களா என்று இந்துத்துவவாதிகள் கேள்வி எழுப்பலாம். எப்படி பாரதிக்குப் பின் வந்தவர்கள் அனைவரும் - அவர்கள் பாரதியை ஏற்றுக் கொண்டாலும் இல்லையென்றாலும் - பாரதியின் வாரிசுகள் தான் என்கிறோமோ, அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும். மேலும் தேசப்பற்று, மதச் சார்பின்மை, பெருந்தன்மை போன்றவற்றுக்கு வியாக்கியானங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே, இந்துத்துவ சக்திகளின் வியாக்கியானப்படி முஸ்லீம்களை அளப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக, பிறரிடமிருந்து முஸ்லீம்களை விமர்சித்து எழுகிற விமர்சனங்களை நான் மதிக்கிறேன், படிக்கிறேன். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்தான். ஆனால், விமர்சிப்பவர் எத்தகைய அளவுகோல்களை எல்லாருக்கும் பயன்படுத்துகிறார் என்பதை வைத்தே விமர்சகரைப் பற்றிய மதிப்பீடு எனக்கு உருவாகிறது.

6. நாகூர் ரூமியை எடுத்துக் கொள்வோம். சூபியிஸத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது/இருக்கிறது என்று அறிகிறேன். அவர் பெண்களைப் பற்றியும், பிற விஷயங்களைப் பற்றியும் முன்வைக்கிற கருத்துகள் பிற்போக்கானவை. அவற்றை நான் ஆதரிக்கவில்லை. கண்டிக்கிறேன். ஆனால், இணையத்தில் எழுதுகிற நாகூர் ரூமி போன்றவர்கள் இஸ்லாத்தின் பேரால் நடக்கிற குற்றங்களைக் கண்டிக்கிறார்கள். நாகூர் ரூமி போன்றவர்களை, தன் மதத்தில் நம்பிக்கையுடைய மிதவாதிகள் எனலாம். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களுடன் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை நடத்துவதன் மூலம், அவர்கள் மதம் குறித்த விமர்சனங்களை அவர்களை உணரச் செய்யலாம். அல்லது, முஸ்லீம் மதம் குறித்த ஒரு விவாதத்தை முஸ்லீம்களிடையேகூட தொடங்க உதவலாம். ஆனால், பெரியார் எப்படி எல்லா பிராமணர்களும் மோசம் என்ற ரீதியில் எல்லாரையும் போட்டுத் தாக்கினாரோ, அப்படி, நாகூர் ரூமி போன்றவர்கள் ஏதேனும் கருத்துச் சொன்னாலே, அவரை வ?¡பிஸ்டு என்றும் தீவிரவாதி என்றும் சித்தரிக்கவே முயற்சிகள் நடைபெறுகின்றன. எந்தச் சமூகத்தையும் அல்லது இனக்குழுவையும் சீர்படுத்த முயல்கிற எவரும் முதலில் அந்தச் சமூகத்தின், இனக்குழுவின் நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டும். இஸ்லாமைப் பற்றி விமர்சனங்கள் வைக்கிற நேசகுமார்களும் அந்த நம்பிக்கையைச் சம்பாதிக்க முயலவில்லை. பிராமணர்களை மட்டுமே பெரிதும் விமர்சித்த பெரியாரும் முயலவில்லை. இது தவறான வழிமுறை. இந்துத்துவ சக்திகள் முஸ்லீம்களைப் பற்றிய வெறுப்பைப் பரப்புவதன் மூலம் அவர்களை ஆக்கபூர்வமாக விமர்சிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டால், அது பம்மாத்து தவிர வேறில்லை.

குரானிலிருந்து மேற்கோள்கள் காட்டி இஸ்லாம் மோசமென்று நிரூபிக்க நண்பர்கள் முயல்கின்றனர். இந்து மதத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி இந்து மதம் மோசமானது என்று நிரூபிப்பது அதைவிடச் சுலபம். எந்த ஒரு கருத்தையும், அது வெளிவந்த காலம், அப்போதைய வாழ்க்கைமுறை, சூழல் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிட வேண்டும். அப்படி மதிப்பிட்ட பின்னரே கொள்ள வேண்டியதைக் கொண்டு தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும். பெண்கள் ஜாக்கெட் போட ஆரம்பித்துவிட்டதால்தான் துணி விலை உயர்ந்து விட்டது என்று பெரியார் ஒருமுறை சொன்னாராம். இந்தக் கருத்தை அதன் பொருள் அளவில் ஒதுக்கிவிடுவது மேம்போக்கான புத்திக்குக் கூட சுலபமானது. ஆனால், பெரியார் எந்தச் சூழ்நிலையில், எதற்காக அப்படிச் சொன்னார் என்று அறிந்த பிறகு, அந்தச் சூழ்நிலையிலும் அப்படிச் சொல்வது சரியில்லை என்று உணர்ந்தபின்னே இக்கருத்தை நான் தூக்கி எறிவேன். இந்து மதத்தை விமர்சித்த பெரியாரும், இஸ்லாமை விமர்சிக்கிற இந்துத்துவவாதிகளும் இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான விமர்சனம்தான் செய்தார்களா, செய்கிறார்களா என்பதை அவரவர் முடிவுக்கு விட்டு விடுகிறேன். மனு சாஸ்திரத்தில் மோசமான விஷயங்கள் இருக்கின்றன என்றால், எல்லா இந்துக்களும் அதைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் அதனால் மோசமானவர்கள் என்று ஆகிவிடாது. வேதத்திலும் மோசமான விஷயங்கள் உள்ளன. அதை மீறி அவற்றின் நல்ல விஷயங்களூக்காக வேதத்தை நாம் கொண்டாடுகிறோம். வேதத்தைத் திருத்தி எழுது என்று எந்த இந்துத்துவவாதியும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால், இவர்களுக்காக முதலில் குரானை திருத்திவிட வேண்டுமாம். குரானில் இருக்கிற பிற நல்ல விஷயங்களுக்காகக் குரானைக் கொண்டாடுதல் தவறாம். நல்ல நியாயம்தான்.

7. சமூகத்தில் வாழ்கிற மக்களிடையே விதவிதமான கருத்துகள் இருக்கலாம். விதவிதமான நம்பிக்கைகள் இருக்கலாம். விதவிதமான மூடநம்பிக்கைகளும் இருக்கலாம். விதவிதமான கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், எந்தக் கருத்து வேறுபாட்டையும் முன்வைக்கிற அல்லது விவாதிக்கிற எந்த முயற்சியும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவோ, ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதாகவோ இருக்கக் கூடாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இப்படிப்பட்ட காரியம் நடந்தால் அதைப் Profiling என்று சொல்லி மனித உரிமை அமைப்புகள் போராடுகின்றன. ஆனால், இந்தியாவிலும் இணையத்திலும்தான் இப்படி ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையோரின் மதத்தில் நடக்கிற குறைபாடுகளை மட்டும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துத் தாக்குகிற காரியத்தையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் செய்பவர்கள் இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் திண்ணை போன்ற இதழ்களும் இவற்றுக்கு இடம் கொடுத்து வருகின்றன. கருத்துச் சுதந்திரத்தை ஒருவர் இப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்துவிட்டால், பத்திரிகைகளும் இணையக் குழுக்களும் வேறு என்னதான் செய்யும் பாவம்! இலக்கியத்தின், பத்திரிகை நடத்துவதின், இணையக்குழு நடத்துவதின், வாழ்க்கையின் நோக்கம் harmonization ஆக இருக்க வேண்டும். ஆனால், விமர்சனம் என்ற பெயரிலும் நகைச்சுவை என்ற பெயரிலும் இடதுசாரிகளையும் பிற மதத்தினரையும் முகமூடிகளுக்குள் புகுந்து கொண்டு தாக்குகிற வீரர்களை அனுமதிப்பது எந்தவகையான பத்திரிகை தர்மமும் இல்லை. உதாரணமாக, திண்ணையில் சில மாதங்களூக்கு முன் இஸ்லாமியப் பெயரில் ஒருவர் இஸ்லாமை ஆதரித்து, அபத்தமான கருத்துகளை வைத்திருந்தார். இஸ்லாமின் பெயரைக் கெடுக்க விரும்புகிற இந்துத்துவவாதி ஒருவரே இஸ்லாமியரின் பெயரில் அக்கடித்தத்தை ஏன் எழுதியிருக்க முடியாது? இத்தகைய சந்தேகங்களைக் களைய இணைய பத்திரிகைகளூம், இணையக் குழுக்களூம் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, சென்சிடிவான தலைப்புகள் சார்ந்த விவாதத்தில் எழுத விரும்புவோர், தங்களைப் பற்றிய முழுவிவரங்களைப் பொதுவில் சொல்ல விருப்பமில்லை என்றாலும், அவர்கள் எழுதுகிற பத்திரிகை ஆசிரியருக்கோ இணையக் குழுக்களின் மட்டுறுத்துனர்களுக்கோ மட்டுமாவது சொல்ல வேண்டும் என்ற முறையைப் பின்பற்றலாம்.

8. பெரியார் போன்றவர்கள் எப்படி இந்து மதத்தில் இருந்த நல்லவற்றைக் கூட ஏறெடுத்துப் பார்க்க விரும்பாமல் அதைத் தூக்கி எறிய விரும்பினார்களோ, இந்து மதத்தின் மீது வெறுப்பைப் பரப்பினார்களோ, அப்படி நேசகுமார் போன்றவர்கள் இஸ்லாத்தில் இருக்கிற நல்லவற்றைப் பார்க்காமல் (நல்லவை என்று ஒருசில கூட இல்லாமல் ஒரு மதம் இவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியாது. இவ்வளவு மக்களால் மனமுவந்து பின்பற்றுவதாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.) இஸ்லாத்தின் குறைகளை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இஸ்லாத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள். பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் இல்லை. நேசகுமார் போன்றவர்கள் தங்கள் வாதத்தை அறிவுபூர்வமானதாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் அறிவு, வாதத்திறன், பொறுமை, விழுமியம், அனைத்தையும் ஒரு மதத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதிலேயே காட்டுகிறார்கள். எனவே, இன்றைய இடதுசாரிகளுக்கு பெரியாரியத்தைப் பின்பற்றுபவர்களை எதிர்ப்பதைவிட முக்கியமான கடமை இந்துத்துவவாதிகளை எதிர்ப்பதில் இருக்கிறது. இந்துத்துவத்தைப் பெரியாரைக் கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. இந்துத்துவத்தை இந்து மதத்தைக் கொண்டே எதிர்க்க முடியும். அதை இடதுசாரிகள் செய்ய வேண்டும். நாராயண குரு, விவேகானந்தர், மற்றும் இந்து மதத்தில் இருக்கிற நல்ல விஷயங்கள், ஞானிகள் துணை கொண்டே இந்து மதத்தை இடதுசாரிகள் மீட்டெடுக்க வேண்டும். உதாரணமாக, ஆரம்பத்தில் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக ம?¡கவி பாரதியைத் திராவிட இயக்கங்கள் கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கு திராவிட இயக்கத்தினர் மட்டுமல்ல, பாரதியைப் பிடிக்காதவர்கள் கூட அவரைக் கொண்டாடுகிற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு இடதுசாரிகளின் பங்கு மிகவும் பெரியது. எப்படி பாரதியை இடதுசாரிகள் மீட்டெடுத்தார்களோ அப்படி இந்து மதத்தையும் இந்துத்துவா சக்திகளிலிருந்து மீட்டெடுக்கிற கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது.

9. நேசகுமார் ஆரம்பிக்கும்போது மிகவும் பொறுமையாக இஸ்லாத்தின் மீது கரிசனம் காட்டுபவராக ஆரம்பித்தார். இன்றும் சொல்கிறேன். எல்லா மதங்களும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் படத்தக்கவையே. அதனாலேயே, புனைபெயரில் ஒளிந்து கொண்டு நேசகுமார் எழுதினாலும், அவர் கருத்துகள்தான் முக்கியமென்று மரத்தடியில் அவர் எழுத வேண்டுமென்று நான் விரும்பினேன். ஆனால், போகப் போக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுபோல, லலைப்பதிவில் அவர் கூட்டணி வைத்திருக்கிற சில பெயர்களைப் பார்க்கும்போது அவர் நோக்கத்தையும், அவர் செய்ய விரும்புகிற அரசியலையும் சந்தேகிக்கவே வேண்டியிருக்கிறது. இஸ்லாத்தில் இருக்கிற - முக்கியமாக மதச்சார்புடைய இஸ்லாம் நாடுகளில் இருக்கிற பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற நண்பர்கள், மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் அரசியலும் ஆட்சியும் புரிந்த/புரிகிற இந்துத்துவா சக்திகளின் பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க மதம் சார்பான நடவடிக்கைகளைப் பற்றி எப்போது எழுதப் போகிறார்கள். ஜெயேந்திரர் என்ற இந்துத்துவத் துறவி கைதானதற்கு வாயைத் திறக்காத அல்லது அவர் பழிவாங்கப்படுகிறார் என்று புலம்புகிற அல்லது அவருக்கு சந்தேகத்தின் பலனை அளிக்க விரும்புகிற நண்பர்கள், ஜெயேந்திரருக்குப் பதில் அத்தகைய கொலை குற்றச்சாட்டொன்றில் முஸ்லீம் மதத் தலைவரோ, கிறித்துவ மதத் தலைவரோ சம்பந்தப்பட்டிருந்தால், எத்தனைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டாடியிருப்பார்கள் என்பது தெரிந்ததுதானே. ( இன்னொரு பக்கம், ஜெயேந்திரர் இந்து மதத்தின் பிரதிநிதி என்றும் பிராமணர்களின் பிரதிநிதி என்றும் நினைத்துக் கொண்டு, ஜெயேந்திரரைத் தாக்குவது இந்து மதத்தைத் தாக்குவது என்று நினைத்துப் பெரியாரின் சீடர்கள் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறார்கள். முதலில், ஜெயேந்திரரை இந்து மதத்தின் பிரதிநிதி என்றெல்லாம் பெரியாரின் சீடர்கள் போல் அழைத்து அவருக்கு முக்கியத்துவம் தர நான் விரும்பவில்லை. ஜெயேந்திரன் இந்து மதத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொண்டாலும், ஒரு இந்து செய்கிற தவறு எப்படி இந்து மதத்தின் தவறாக முடியும். கம்யூனிஸ்டு தவறு செய்தால் அது கம்யூனிசத்தின் தவறு இல்லை என்பதைப் போலத்தானே இதையும் பார்க்க வேண்டும்! கருணாநிதியும் அண்ணாதுரையும் செய்த தவறுகளுக்கெல்லாம் பெரியார் பொறுப்பாகிவிட முடியுமா என்ன? இது வேறு விஷயம். அதனால் இதற்குள் இங்கு அதிகம் நுழைய விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தோமானால், இஸ்லாமின் பெயரைச் சொல்லி நடைபெறுகிற பயங்கரவாத காரணங்களுக்குக்கூட இஸ்லாமைக் காரணம் சொல்ல முடியாது என்றும் புரிந்து கொள்ளலாம்.)

10. சூர்யாவின் எழுத்தை நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படிப்பதுண்டு. இலக்கியம் குறித்த அவர் கருத்துகளை நான் மதித்து வாசிக்கிறேன். உடன்படுகிறேனா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. என் கருத்தில் மாறுபடுபவர்களைப் படிப்பது கூட என்னைக் கூர்மையாக்கிக் கொள்ள எனக்கு உதவும். அதனால், முடிந்தவரை எனக்கு ஆர்வம் உண்டாக்குகிற பொருள் தொடர்பான எல்லா எழுத்துகளையும் படிக்க முயல்கிறேன். ஆனால், இந்தியாவில் முஸ்லீம்கள் main stream-ல் கலப்பதில்லை. தனித்தனி குழுவாகவே இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் மீது கரிசனம் பொங்க சூர்யா திண்ணையில் ஒருமுறை எழுதியிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை நடைபெற்று வருகிற முஸ்லீம்களூக்கு எதிரான கலவரங்களையும், கோஷங்களையும் பார்க்கும்போது அவர்கள் குழுவாக இருப்பதில் என்ன தவறு? அவர்கள் main stream-ல் கலப்பதில்லை என்றால் அது அவர்களின் தவறு மட்டுமே தானா? சொல்லப் போனால், இப்படிக் குழுவாக இருப்பது முஸ்லீம்களின் குணாதிசயம் அல்ல. அது எல்லா மைனாரிட்டி மக்களின் குணாதிசயம்தான். அமெரிக்கா பொன்ற வெளிநாடுகளில் இதை நான் இந்தியர்களிடமே பார்க்கிறென். நியூ யார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்கள், கலிபோர்னியா, டெக்ஸாஸ் என்று இந்தியர்கள் அதிகமாக இருக்கிற மாநிலங்களில் இந்தியர்கள் - இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் கூட - இந்தியர்கள் அதிகம் வசிக்கிற இடங்களிலேயே வசிக்க விரும்புகிறார்கள். கறுப்பின மக்கள் அவர் இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், சீனர்கள் சீனா டவுன் எனப்படும் பகுதிகளிலும் வசிப்பதைச் சொல்ல முடியும். Main Stream-ல் கலப்பதில்லை என்ற குற்றச்சாட்டை இவர்கள் மீதும் வீச முடியும். தாங்கள் மைனாரிட்டியாக இருக்கிற ஒரு சூழலில், பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் உணர எல்லா மைனாரிட்டிகளும் செய்வதுதான் இது. இதையெல்லாம் வைத்து முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டுவது சரியில்லை. அமெரிக்காவில் இருந்து எழுதுகிற எத்தனை இந்துத்துவா நண்பர்கள், main stream-ல் கலக்கிற சமூக நோக்கத்துடன், இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்காமல், வெள்ளையர்கள், கறுப்பர்கள், சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்கிறார்கள்? அமெரிக்க இந்துக்களுக்கு ஒரு நியாயம், இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு நியாயமா? அரசாங்கத்தின் மறைமுக ஆதரவில் மதக் கலவரங்கள் நிகழாத அமெரிக்காவிலேயே, மைனாரிட்டிகள் தனியாகவும், குழுவாகவும், தம்மினத்தவர் வாழும் பகுதிகளிலும் வசிக்க விரும்புகிறபோது, குஜராத் போன்ற மாநிலங்களில் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் மதக் கலவரங்கள் நடந்த வரலாறு இருக்கிற இந்தியாவில், அப்படி இருப்பதில் என்ன தவறு?

11. இந்துத்துவ சக்திகளை எதிர்க்க இன்னொரு பெரியார் தேவை என்பது சரியில்லை. இந்துத்துவ சக்திகளும், பெரியாரும், அவர்கள் ஆதரவாளர்களூம் அடிப்படையில் ஒரே தவறைச் செய்பவர்கள்தான். தங்கள் கொள்கை என்று நம்புகிற ஒன்றைத் தூக்கிப் பிடிக்க இன்னொன்றின் மீது வெறுப்பைப் பரப்புவது. ஒன்றைப் பழிப்பது மட்டுமே விமர்சனம் இல்லை. ஒன்றைப் பழிப்பதே புரட்சி என்ற சித்தாந்தத்தைப் பெரியார் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். அதை இப்போது தேசிய அளவில், பிற மதங்களைப் பழிப்பதே பயங்கரவாத எதிர்ப்பு, கருத்துச் சுதந்திரம் என்ற பெயர்களில் இந்துத்துவவாதிகள் செய்கிறார்கள். பெரியாரிடம் திட்டவட்டமான கொள்கை, கொள்கைகளை அடைய வழி என்று எதுவும் இல்லை. பெரியாரின் கருத்துகள் - உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல் அவர் அடிக்கடிப் பயன்படுத்திய சொல்லான - வெங்காயமாகப் போய்விடக் கூடியவைதான். ஆனால், இந்துத்துவம் அப்படியில்லை. அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம், இந்தியாவை ஓர் இந்து நாடாக ஆக்குவது. அதற்கான விரிவான செயல்திட்டமும் வரைமுறையும் அவர்களிடம் இருக்கிறது. எதைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் கருத்தை நிரூபிக்கவே முயல்வார்கள். அந்தக் காரணத்தினாலேயே, இந்துத்துவ சக்திகள், தாரிக் அலி போன்ற இடதுசாரிகளைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. ஒரு பக்கம் இடதுசாரிகளை தரம் தாழ்ந்த வகையில் திட்டிக் கொண்டே, இன்னொரு பக்கம், இப்போது தாரிக் அலியைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நாளைக்கு வேறொருவரை வைத்துத் தேவைப்பட்டால் தாரிக் அலியையும் அடிப்பேன் என்று வெட்கமின்றிச் சொல்லிக் கொள்கிற அரசியலை அவர்கள் செய்ய முயல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இஸ்லாம் என்கிற மதத்தின் மீது எத்தகைய வெறுப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தகவல் யுகத்தில், எந்தத் தகவலையும் செய்தியையும் தனக்கேற்ற விதத்தில் திரிக்கிற, பயன்படுத்திக் கொள்கிற உத்தி அது. அதைத் தடுக்க இடதுசாரிகளால் முடியும். அதை இந்துத்துவவாதிகள் அறிந்திருக்கிற காரணத்தினாலேயே, இடதுசாரிகளையும் வெகுவாக எதிர்க்கிறார்கள். ஏனென்றால், இந்துத்துவவாதிகள் தலையெடுப்பதற்கு முன் காலம் காலமாகவே அறிவுஜீவிகள் என்று அறியப்பட்டு வருபவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள். இந்துத்துவவாதிகள் அறிவுபூர்வமான வாதம் என்ற பெயரில் பரப்பி வரும் விஷமங்களுக்கு, இடதுசாரிகள் உண்மையாகவே அறிவுபூர்வமான பதிலைத் தரமுடியும். ஆனால், அவர்கள் அந்தப் பதிலுக்குப் பெரியாரைத் துணைக்கழைக்கிற அந்தக் கணத்தில் வீரியமிழந்து போகிறார்கள். எனவே, இந்தியாவை இந்துத்துவவாதம் என்கிற பேராபத்திலிருந்தும், பெரியார் என்கிற வெங்காயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டிய கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் இன்னும் முனைப்பாக - இணையம் போன்ற ஊடகங்களில் - இதைச் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து செய்கிற அளவுக்கான அறிவுத் திறனோ, புத்தகங்களோ, நேரமோ, பிற resources-ஓ என்னிடம் இல்லை என்பதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

12. பிராமணர்கள் மீது பெரியார் வைத்த விமர்சனங்கள் சமூகத்துக்கு உதவியதோ இல்லையோ பிராமணர்களுக்கு ஓரளவு உதவியது என்று சொல்லலாம். பிராமணர்களின் குறைபாடுகள் என்று பெரியார் பட்டியலிட்டவை தம்மிடம் இருந்தால் அவற்றைப் பெரும்பாலான பிராமணர்கள் களையவோ குறைத்துக் கொள்ளவோ முயன்றார்கள். உதாரணமாகப் பெண் விடுதலையைப் பற்றி எடுத்துக் கொள்வோம். பெரியாரிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிற பிராமணரல்லாத என் நண்பர் ஒருமுறை சொன்னார்: "தற்காலத்தில் பிராமணர்கள் தங்கள் மனைவிமார்களுக்கு எந்த அளவுக்குச் சுதந்திரம் தருகிறார்களோ அந்த அளவுக்குப் பிற ஜாதியினர் தங்கள் மனைவிகளுக்குச் சுதந்திரம் தந்தால் பெண் விடுதலை வந்துவிடும்." மேலும், தங்கள் குறைகளைக் களைய விரும்பாத பிராமணர்கள் கூட, அக்குறைகளைத் தனிவாழ்வில் வைத்துக் கொண்டு, பொதுவாழ்வில் அவை தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில், நிறவெறியில் நம்பிக்கையுள்ளவர்கள் கூட அது ஒரு குற்றம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் பொதுவாழ்வில் அவற்றைப் பின்பற்றாமல் பார்த்துக் கொள்வதுபோல. ஆனால், பெரியாரின் கருத்துகளைக் கேட்டப் பிற ஜாதியினர், அவர் பிராமணர்களைத்தான் திட்டுகிறார், நம்மையல்ல என்று எடுத்துக் கொண்டார்கள். அதன் விளைவு, இன்றும் இரட்டை டம்ளர் முறையும், பாப்பாப் பட்டியும், கீரிப்பட்டியும் இன்னபிற பிற ஜாதியினர் செய்கிற ஜாதிக் கொடுமைகளும். பிராமணர்கள் பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டு பெரியாரைத் தோற்கடித்த இம்மாதிரி, முஸ்லீம் நண்பர்களும் இந்துத்துவ சக்திகள் முன்வைக்கிற விமர்சனங்களில் இருக்கிற வெறுப்பை ஒதுக்கிவிட்டு, தங்களை சுயதரிசனம் செய்து கொண்டால், தங்கள் குறையென்று தாங்களாகவே உணர்வதைத் திருத்திக் கொண்டால், இந்துத்துவ சக்திகளை வைத்தே அவர்களைத் தோற்கடித்த பெருமை முஸ்லீம் நண்பர்களுக்கும் கிட்டும்.

வணக்கத்துடனும், ஒரு காலைப் பொழுதை இதை எழுதுவதில் செலவளித்தது சரிதானா என்ற விசனத்துடனும்,
பி.கே. சிவகுமார்

10 comments:

Jayaprakash Sampath said...

Excellent!!

Arun Vaidyanathan said...

அன்பு சிவக்குமார்,
இந்த முறையும் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். உங்களது பல கருத்துக்களோடு நான் கட்டாயம் உடன்படுகிறேன்..நேசக்குமாரின் மீது வைக்கும் விமர்சனம் உட்பட! மிக மிக நல்ல கட்டுரை. விசனப்படவெல்லாம் அவசியமே இல்லை, நல்ல முறையிலேயே காலை நேரத்தை செலவழித்து, எனது மதிய நேரத்தையும் நல்ல கட்டுரை படித்த திருப்தி தந்தது உங்கள் எழுத்து மற்றும் சிந்தனை என்று 'இங்கு' சொல்லிக்கொள்கிறேன்.

- அருண் வைத்யநாதன்

Srikanth Meenakshi said...

I definitely second Arun's opinion above. Well written, honest presentation of your thoughts. Thanks, Srikanth

துளசி கோபால் said...

அன்புள்ள பி.கே.எஸ்.

உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கின்றன. பலவற்றோடு நானும் ஒத்துப் போகின்றேன்.

அருமையான கட்டுரை.

என்றும் அன்புடன்,
துளசி.

ROSAVASANTH said...

கண்ணுபட்டுரகூடாதுன்னு திருஷ்டி மாதிரி என் கருத்தை ஹோலோஸ்கான் கமெண்டில் தந்திருக்கிறேன்.

SnackDragon said...

இன்றைக்கு பெரியார் தேவைல்லை என்று நீங்கள் எழுதும் சூழல் உருவாகியது கூட பெரியார் (என்கிற காருத்தாக்கம்) நிலவியாதால் தான் என்று எண்ணுகிறேன். பெரியாரின் அனுகுமுறையை 'கடப்பாரை அனுகுமுறை' என்று சொல்லும் ஜெயமோகன் கூட இன்றைக்கு பெரியார் தேவையில்லை என்று சொல்லத் துணியமாட்டார் என்றே தோனுகிறது. இன்றைக்கு ஒரு இன்னும் புத்திசாலியான பெரியார் தேவை என்பதுவே சரி என நினைக்கிறேன். இக்கட்டுரையில் ஏதும் "வழி" இருப்பதாய் தெரியவில்லை, நீங்கள் சொன்னது போன்ற மட்டையடி மறுப்பு மட்டுமே இருப்பதாவே நினைக்கிறேன். இது போன்ற மட்டையடி கட்டுரைகளும் ஒரு சூழலின் நேரடி வெளிப்பாடாகவே நினைத்துக் கொள்கிறேன். மேற்கொண்டு பார்ப்பனிய வாத-அக்கால-பார்ப்பனிய-பெரியார்- வாததுக்குள் நுழைவது சலிப்பையும் நேரவிரயத்தையுமே த்ரும் எந் தோன்றுகிறது.

Abu Umar said...

நல்ல கருத்துகளை கூறியமைக்கு நன்றி

Anonymous said...

«ýÒ ¿ñÀÕìÌ ¾í¸Ç¢ý ¸ðΨà ÀÊò§¾ý Å¢Âó§¾ý. ¯í¸û «È¢× ÁðÎÁøÄ ÁÉÓõ Å¢º¡ÄÁ¡É¾¡¸§Å ¯ûÇÐ. þóÐ Á¾ò¾¢ø ¯ûÇ ¿øÄ Å¢„öí¸¨Ç ±ý §À¡ýÈ ÓŠÄ£õ¸ÙìÌ ¦¾Ã¢Å¢ì¸ «È¢Å¡Ùõ ¸ò¾¢Ôõ §¾¨Å¢ø¨Ä. «§¾ §À¡ø þŠÄ¡Á¢Â Áò¾¾¢ø ¯ûÇ ¿øÄ Å¢„öí¸¨Ç ¦¾Ã¢Å¢ì¸ ¦ÅÊÌñÎõ, ÐôÀ¡ì¸¢Ôõ §¾¨Å¢ø¨Ä. ¿¡ý Á¾¢ìÌõ ¿õÒõ Á¾ò¨¾ ¯í¸Ç¡ø ²ü¸ ÓÊÂÅ¢ø¨Ä ±ýÈ¡ø «¨¾ ¿øÄ Å¡÷ò¨¾¸Ç¢ø ¦¾Ã¢Å¢ì¸Ä¡õ. ¿øÄ Å¡÷ò¨¾¸ÙìÌ ¿¢îºÂÁ¡¸ Àïºõ þø¨Ä ±ý§È ±ñϸ¢§Èý. ¯í¸û ¸ðΨà Á¾í¸¨Ç ÒâóÐ ¦¸¡ûÙí¸û ±ýÚ ÁÉí¸ÙìÌ ¸ð¼¨Ç¢θ¢ÈÐ. «ýÒì ¸ð¼¨Ç. «Æ¸¡É ¸ð¼¨Ç.
¿ýÈ¢.
«.Ó†õÁÐ þŠÁ¡Â¢ø
dul_fiqar@yahoo.com.sg

ROSAVASANTH said...

இப்படி சொரிந்து கொடுக்கும் கருத்துகளை சொல்வதற்கு எதற்கு 'பேசா பொருளை பேச துணிந்ததாக, பீற்றிகொள்ளவேண்டும்?

abdul said...

good