Friday, May 20, 2005

ஜெயகாந்தன் பேச்சின் ஒளிவடிவம்

ஏப்ரல் 28, 2005 (வியாழன்) அன்று மாலை ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு ஒரு பாராட்டு விழாவைச் சென்னையில் நடத்தினார்கள். ராணி சீதை மன்றத்தில் இவ்விழா நடைபெற்றது. கவிதா, ஸ்ரீசெண்பகா, வர்த்தமானன் பதிப்பகங்களும் ஜெயகாந்தனின் நண்பர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனும் முன்னின்று நடத்திய விழா இது. விழாவுக்குச் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஸ்ரீ செண்பகா சண்முகம், கவிதா சொக்கலிங்கம், விஜயா வேலாயுதம், வர்த்தமானன் சந்திரன், இயக்குனர் பாலசந்தர், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், சி.பி.ஐ.யின் ஏ.எம்.கோபு (தா.பாண்டியன் கலந்து கொள்ள இயலாததால் அவருக்குப் பதில் கலந்துகொண்டு பேசினார்.), இளையராஜா உள்ளிட்டப் பலர் பேசினார்கள். முடிவாக ஜெயகாந்தன் ஏற்புரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்தின் பேச்சுகளை ஒளிவடிவில் தருவதற்கு முயன்று வருகிறோம்.

அதன் முதற்கட்டமாக ஜெயகாந்தன் பேச்சின் வீடியோவுக்கான சுட்டிகளைத் தருகிறோம். சுமாரான தரம், மேம்பட்ட தரம் என்று வீடியோவின் தரத்துக்கேற்ப இரு பிரதிகளை உருவாக்கியிருக்கிறோம். சுமாரான தரம் கொண்ட வீடியோ கோப்பு ஏறக்குறைய 15.9 MB அளவுள்ளது. மேம்பட்ட தரம் கொண்ட வீடியோ சுமார் 49 MB அளவுள்ளது. இரண்டுக்குமான சுட்டிகளையும் இங்கே இணைத்துள்ளேன்.

இந்த வீடியோக்களின் வி.சி.டி.யைத் தந்து உதவிய கவிதா சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி. என்னுடைய வேலை வி.சி.டி.யை வாங்கி வந்து எனதருமை நண்பர் துக்காராம் கோபால்ராவ் அவர்களிடம் தந்தது மட்டுமே. எந்த அளவில், எந்த வடிவில் ஒளியும் ஒலியும் நன்றாக உள்ளன என்பது போன்ற ஆராய்ச்சிகளை எல்லாம் மேற்கொண்டு, அவற்றை வலையேற்றிக் கொடுத்து உதவியவர் நண்பர் துக்காராம் அவர்கள்தான். இதன்பொருட்டு அவர் செலவழித்த மணிகளுக்காகவும் ஆற்றல்களுக்காகவும் அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்கிறேன்.

இவ்விழாவில் ஜெயகாந்தன் ஏற்புரையை முடிவாக நிகழ்த்தினார். பிற பேச்சாளர்கள் அவருக்கு முன் பேசி முடித்து விட்டனர். எனவே, ஜெயகாந்தனின் பேச்சை முழுமையாகப் புரிந்து கொள்ள பிறரின் பேச்சுகளையும் கேட்க வேண்டும். பிறரின் பேச்சுகளையும் வலையேற்ற நண்பர் துக்காராம் முயன்று வருகிறார். அம்முயற்சி வெற்றியடையும்போது அவற்றுக்கான இணைப்புகளையும் தருகிறேன். எனவே, ஜெயகாந்தனின் பேச்சை இப்போது ஒருமுறை கேட்பவர்கள், பிறரின் பேச்சுகளைக் கேட்டபின் இன்னொருமுறை கேட்பது உதவும்.

இவ்விழா ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் நடத்தியது. அப்பதிப்பகங்களில் பலவற்றுக்கு AnyIndian.com இணையத்தில் முன்னுரிமை பெற்ற விற்பனையாளராக இருக்கிறது. எனவே, அப்பதிப்பகங்களில் ஒப்புதலுடன் இந்த ஒளிப்பதவை இணைய வடிவில் AnyIndian.com வழங்குகிறது. எனவே, இப்பேச்சுகளின் ஒளி மற்றும் ஒலி வடிவங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிற அன்பர்கள் கவிதா சொக்கலிங்கம் அவர்களிடமோ, AnyIndian.com இடமோ முன்அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பேச்சுகளின் வீடியோவை உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் பார்த்தும் கேட்டும் மகிழும் பொருட்டு, தங்கள் தளத்தில் வலையேற்றுவதற்கான இடம் கொடுத்து வலையேற்றுகிற முயற்சிகளையும் எடுத்த AnyIndian.com-ன் மேலாண்மைக் குழுவுக்கு ஜெயகாந்தனின் வாசகனாக என் நன்றிகள்.

ஜெயகாந்தன் பேச்சு - சுமாரான தரமுள்ள வீடியோ (15.9 MB)

ஜெயகாந்தன் பேச்சு - மேம்பட்ட தரமுள்ள வீடியோ (49 MB)

6 comments:

குழலி / Kuzhali said...

ஜெயகாந்தனின் ஜல்லியடிப்பு

Arun Vaidyanathan said...

Gr8 speech...
Will write a detailed post on this!

Mey said...

நன்றி பிகேஎஸ். வெறுப்பை கக்கும் உலகின் நடுவில் நல்ல பேச்சு!!!

-/சுடலை மாடன்/- said...

அப்படி ஜெயகாந்தன் என்ன புதிதாகப் பேசிவிட்டார் என்று புல்லரிக்கிறீர் என்று தெரியவில்லை.

அவர் கூறிய அறிவுரைகள் எல்லாம் சரியானவையே, அவற்றில் யாருக்கும் ஒரு பிரச்சினையுமில்லை. பிரச்சினையென்னவென்றால் அவருக்கு எதிரணியில் உள்ள நாய்களுக்கு மட்டுமே போதனைகள் வழங்குவதை விடுத்து, பின்னணியில் உள்ள நாய்களுக்கும் கொடுத்தால் நல்லது.

ஒருவேளை அவரது பின்னால் இருக்கும் இந்து மத வெறியர்களும், சாதிய வெறியர்களும், இந்திய தேச வெறியர்களும், தமிழை நீசபாசை என்று கூறி வரும் சமஸ்கிருத வெறியர்களும் கண்ணுக்குத் தெரியவில்லையோ.

கம்யூனிஸத்தையும், கம்யூனிஸ்டுகளையும் சும்மா பொத்தம் பொதுவில் பாராட்டி விட்டால், ஜெயேந்திரருக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் வால் பிடித்து அலைவதைக் கம்யூனிஸ்டுகள் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்ற சாதுரியம் பாராட்டப் படத்தான் வேண்டும்!

PKS & அருண், உங்களைக் கேட்கிறேன் - நாங்கள் எல்லாம் தான் எங்களையே நக்கித் திரியும் சுயநல நாய்கள். அவர் ஒப்புக்குப் பாராட்டும் கம்யூனிஸத்தையும், பிரம்மோபதேசத்தில் கூறும் பிராமணியத்துவங்களையும் ஒரு சதவிகிதமாவது உங்கள் வாழ்வில் கடைப் பிடித்ததுண்டா?
அவற்றுக்கு மாறாக வெறும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எல்லோரும் கடனே என்று செய்து களிக்கிறீர்கள். பின்னர் எதுக்கு இந்த பாவலாத்தனமும், ஊருக்கு உபதேசமும்? உங்களுக்கும், நீங்கள் விமர்சிக்கும் திராவிடக் கட்சியாளருக்கும் என்ன வேறுபாடு? உங்கள் ஜெயகாந்தனுக்கும், வீரமணிக்கும் தான் என்ன வேறுபாடு? எல்லாமே சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று.

நன்றி - சொ. சங்கரபாண்டி

அன்பு said...

நன்றி.

jack said...

thanxs for uploading the vidoe.