ரோசா வசந்த்தின் கழுதைப்புலி வாழுமிடத்தில் பதிவில் சொர்ணம் சங்கரபாண்டி பின்வரும் கமெண்ட்டை எழுதியிருக்கிறார்.
சொர்ணம் சங்கரபாண்டி எழுதியது:
"// எதிராளி பலவீனமானவனாய் இருந்தால் அல்லது பலவீனப்படும் போது எல்லாவகையிலும் தாக்குவது (அதையும் கூட திரித்து தன்னை யோக்கியமாய் காட்டிகொள்வது -பார்க்க சங்கரபாண்டி பற்றி அவர் எழுதியுள்லது), பிரச்சனை வரும்போது மூச்சுவிடாமல் மௌனமாகி ஒளிந்துகொள்வது என்ற அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். //
வசந்த் - நான் பலவீனமாகவோ அல்லது பலவீனப்பட்டோ பி.கே.சிவக்குமாருடைய பதிவில் விவாதம் செய்வதிலிருந்து விலகவில்லை. நீங்கள் அப்படிச் சொல்ல வரவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை சிவக்குமார் என்னைப் பற்றி அப்படி நினைத்திருக்கலாம் என நீங்கள் சொல்கிறீர்கள் என்று கருதுகிறேன்.
பி.கே.சிவக்குமாருக்கே தெரியும் பலவீனப்பட்டவர் அவர்தான் என்று. சிவக்குமாரின் வாசிப்பனுபவத்தை உயர்வாகக் கருதுவதாக ஏற்கனவே அவரிடம் வாதம் செய்யும் பொழுதே சொல்லியிருக்கிறேன். எனவே அ. மார்க்ஸின் எழுத்துக்களைப் பல ஆண்டுகளாகப் படித்து வந்திருக்கிறார் என்று நம்புகிறேன். அப்படியிருக்க அ. மார்க்ஸ் கட்டுரைகளில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன்னுடைய கருத்துக்களை அல்லது ஜெயகாந்தனிடம் இரவல் பெற்றவற்றை வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தும் நேர்மையின்மையை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினேன். அது கூட பி.கே.சிவக்குமாரைப் புரியவைக்க வேண்டுமென்று செய்யவில்லை. அந்த நம்பிக்கை அவர் தனது நண்பர் சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதத்தை படித்தவுடனேயே போய் விட்டது.
சிவக்குமாரின் நேர்மையின்மையையும், அதன் நோக்கத்தையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டுமென்றுதான் அவருடன் விவாதித்தேன். இறுதியில், சிவக்குமாரின் பதிவில் மட்டும் இனிமேல் எழுத முடியாது என்றுதான் வெளியேறினேன், மற்ற பதிவுகளில் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதற்குக் காரணம் என்னுடைய பலவீனமல்ல, சிவக்குமாரின் கீழ்த்தரமான செயலினால்தான்.
என்னுடம் மறுப்புத் தெரிவிக்க முடியாமல் பலவீனப்பட்டுப் போன சிவக்குமார் கீழ்த்தரமான ஒரு செயலை அவருடைய பதிவில் செய்தார். என்னுடைய தந்தையாருடைய பெயரிலுள்ள சாதிப் பெயரைச் சுட்டி நான் சாதிப் பற்றாளன் என்று கூற விரும்பினார் என்றாலும் மற்றவர்கள் தன்னை அநாகரிகமாகக் கருதி விடுவார்கள் என்று ஒரு பயம், அதனால் என்னுடைய துறந்த சாதிப் பெயரை வெறும் புள்ளிகள் போட்டு (சொர்ணம் ...) என்று எழுதினார். ஆனால் திரும்பவும் அதையே வெளிப்படையாகச் சொல்லி என்னை சாதிப் பற்றாளன் என்று காண்பித்து வாதத்தை திசை திருப்ப வேண்டும் என்று அவருடைய மூளை பரபரத்தது. கண்டுபிடித்தார் ஒரு கீழ்த்தரமான வழியை.
அவரே சூச்சு என்ற பெயரில் ஒரு அனாமத்து பெயரை உருவாக்க(கி) வைத்து அந்த சூச்சு வாயிலாகத் தான் சொல்ல நினைத்ததைச் செய்தார். அதுமட்டுமல்லாமல், அப்படியெல்லாம் என்னுடைய சாதிப் பெயரைச் சொல்லி எழுதுவது அனாகரீகம் என்று கருதுவதாகவும் சூச்சுவைக் கண்டித்து என்னை மன்னித்து என்னுடைய மரியாதையையும், கவுரவத்தையும் மீட்டுக் கொள்ள வேண்டுமானால், நான் அவரிடம் வேண்டினால் சூச்சுவின் பின்னூட்டத்தை நீக்கி விடுவதாகச் சொன்னார். மேலும் இந்த வண்டவாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக டோண்டுவின் பதிவிலும், மூர்த்தியின் பதிவிலும் சென்று அனாமத்தாக எழுதுவது எவ்வளவு நாகரீகமற்ற செயல் என்று சாத்தானின் வேதம் வேறு.
இதை சிவக்குமாருடைய பதிவுகளையும், என்னுடைய பின்னூட்டங்களையும், அவருடைய பின்னூட்டங்களையும் முழுவதும் படித்தால் உணர்ந்து கொள்ளலாம். அவருடைய கீழ்த்தரமான செயலை வெளிப்படையாகச் சொல்லாமல், அவருடைய பதிவுகளை முழுவதும் படிக்குமாறு மற்றவர்களைக் கூறிவிட்டு வெளியேறினேன்.
அவர் என்னுடைய தந்தையாரின் பெயரிலுள்ள சாதியைக் கண்டுபிடித்துக் கூறியதால் பலவீனப்பட்டு வேளியேற வில்லை. நான் ஏற்கனவே வலைப் பதிவுப் பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். எனக்கும் இளவயதில் என்னுடைய சாதியின் மேல் நம்பிக்கையிருந்தது. எங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் நிலவி வந்த பொதுமைப் படுத்தல்களை (stereotypes) நானும் நம்பியிருக்கிறேன். பெரியாரையும், இடதுசாரி நூல்களைப் படித்த போது கூட அவை குறைந்து போயின ஆனால் மறைந்து போகவில்லை. தலித்திய நூல்களைப் படித்த பிறகுதான் அவை உண்மையிலே கரைந்து போய்க் கொண்டிருக்கின்றன, அதன் எச்சங்களை இன்னமும் சில நேரங்களில் உணரமுடிந்தாலும். என்னுடைய சாதியை நான் துறந்து விட்டதுமல்லாமல் அச்சாதியினரின் பார்ப்பனிய - சாதிய நம்பிக்கைகளை கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறேன். இங்கு கூட என்னுடைய எந்தப் பின்னூட்டத்தை வேண்டுமானாலும் போய்ப் பார்க்கவும், பார்ப்பனர்களை மட்டும் தனிமைப் படுத்தி விமர்சித்ததில்லை.
எனவே சிவக்குமாரோ, அவரது சூச்சுவோ என்னுடைய சாதியை கண்டுபிடித்து என்னைப் பலவீனப்படுத்தியதால் அவருடைய பதிவிலிருந்து வெளியேறவில்லை. இதைச் செய்வதற்கு கூட நேர்மையில்லாமல் கீழ்த்தரமான செயலில் இறங்கியதால் அவருடைய பதிவில் மேலும் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று நினைத்துதான் வெளியேறினேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
By சுடலை மாடன், at 6/6/2005 1:01 PM"
வலைப்பதிவு நண்பர்களுக்கு!
1. நான் இணையப் பத்திரிகைகளிலும், குழுமங்களிலும், வலைப்பதிவிலும் என் சொந்தப் பெயரிலேயே எழுதியும் கமெண்ட்டுகள் இட்டும் வருகிறேன். என் கருத்துகளும் நானும் எவ்வளவு மோசமாகத் திட்டப்பட்டாலும், எதைச் சொல்வதென்றாலும் அதை என் சொந்தப் பெயரிலேயே சொல்கிற "ஆண்மையும் ஆன்ம பலமும்" எனக்குண்டு என்பதை தொடர்ந்து என் எழுத்துகளைப் படித்து வருபவர்கள் அறிவர்.
2. இதற்கு முன் ஒருமுறை, யாரோ ஒருவர், வை.கோ.வைத் அளவுமீறி திட்டி என் பதிவில் எழுதியிருந்தபோது கூட, வை.கோ.வின் கொள்கைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லாதபோதும் அதை நான் கண்டித்திருக்கிறேன். வலைப்பதிவில் பலரும், "எங்கள் கமெண்ட்டுகளில் எழுதப்படுபவைகளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது" என்கிற டிஸ்கிளெய்மர்களுடன் தப்பித்துக் கொள்கிறார்கள். பா.ராகவனைப் பற்றி மோசமாக தன் பதிவில் கமெண்ட்டுகள் எழுதப்பட்டபோது மதி கந்தசாமி இப்படிப்பட்ட ஒரு டிஸ்கிளெய்மருடன் நிறுத்திக் கொண்டார். சுந்தரவடிவேலும் இதே மாதிரி ஒரு டிஸ்கிளெய்மருடன் அவர் பதிவில் ஒருமுறை நிறுத்திக் கொண்டார். எனவே, தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி அனாமத்துகள் மோசமாக எழுதினாலும் மௌனமாக அமர்ந்து ரசிக்கிற போக்கு வலைப்பதிவுகளில் இருக்கிறதோ என்ற கேள்வி எழும்படியே பலரும் நடந்து கொள்கிறார்கள். ஆனால், என் வலைப்பதிவில் வருகிற கமெண்ட்டுகள் நான் கருத்து ரீதியாக உடன்படாதவரை தனிப்பட்ட அவதூறு செய்வதாக இருந்தால் நான் அதைக் கண்டித்தே வருகிறேன். அக்கண்டிப்பை உடனுக்குடன் எழுத்து ரீதியாகவும் பதிவு செய்து வருகிறேன். என் வலைப்பதிவைத் தொடர்ந்து படிப்பவர்கள் இதை அறிய முடியும்.
3. அப்படியே சூச்சூ என்ற பெயரில் சொர்ணம் சங்கரபாண்டியைப் பற்றிய கமெண்ட் வந்தபோதும் நான் அதைக் கண்டித்தேன். ஜாதியைச் சொல்லி அவர் மற்றவர்களைத் திட்டுவதுபோல நானும் திட்ட வேண்டுமென்றால், எனக்கு பெண் பெயர்களோ, புனைபெயர்களோ அவசியமில்லை. யாருடைய கருத்தை விமர்சிப்பதற்கும் அவர் ஜாதியையும் மதத்தையும் தேடி அலைகிற ஆசாமிக்கள் இருக்கிறார்கள். நான் கருத்து ரீதியாக மட்டுமே விமர்சனங்கள் வைப்பதை விரும்புகிறேன். என் கருத்துகளில் கடுமை இருக்கலாம், நையாண்டி இருக்கலாம், கிண்டல் இருக்கலாம், கூர்மை இருக்கலாம். ஆனால், ஜாதி, மத, மொழி, இன துவேஷங்கள் இருக்காது.
4. ஆனால், மேலே உள்ள கமெண்ட்டில் சொர்ணம் சங்கரபாண்டி சூச்சூ என்கிற பெயரில் ஓர் அனாமத்தை உருவாக்கி நானே அவர் ஜாதியைப் பற்றி எழுதியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அல்லது நானே சூச்சூ என்ற அனாமத்தை உருவாக்க வைத்தேன் என்றும் சொல்கிறார். இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டாகும். சொந்தப் பெயரில் மட்டுமே எழுதி வருகிற எனக்குக் களங்கம் கற்பிக்கவும், என் புகழைக் கெடுக்கவும், என்னை ஜாதி வெறியன் என்று குற்றம் சாட்டவும் வழிவகுக்கிற குற்றச்சாட்டுமாகும். அப்படிக் குற்றம் சாட்ட அவருக்கு உரிமை இருக்கிறதென்றால், என் பெயரையும் credibility-ஐயும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, அதை நிரூபியுங்கள் என்று அவரிடம் கேட்கிற உரிமை எனக்கும் இருக்கிறது.
5. சூச்சூ என்கிற பெயரில் எழுதுகிற நபர் என் பதிவில் மட்டுமில்லை, பிற பதிவுகளிலும் கமெண்ட் போட்டிருக்கிறார். ஆனால், எந்த ஆதாரமுமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கில் என் மீது சொர்ணம் சங்கரபாண்டி அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறார். அதனால், சொர்ணம் சங்கரபாண்டியிடம் நான் கேட்பது இதுதான். சூச்சூ என்ற பெயரில் எழுதியது நான் அல்லது சூச்சூ என்ற பெயரை உருவாக்க வைத்தது நான் என்கிற உங்கள் குற்றச்சாட்டை, பழியை, அபாண்டத்தை சந்தேகத்திற்கிடமின்றி ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்.
6. சொர்ணம் சங்கரபாண்டிக்கு ஒரு வாரம் டைம் தருகிறேன். நான்தான் சூச்சூ அல்லது சூச்சூவை உருவாக்க வைத்தது நான் என்று அவர் சொல்லியிருப்பதை அவர் சந்தேகத்திற்கிடமின்றி ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால், அவர் அந்தக் கமெண்ட்டை எழுதிய ரோசா வசந்த் பதிவிலும், இந்தப் பதிவின் கமெண்ட்டிலும் "சூச்சூ பி.கே.சிவகுமார் இல்லை. சூச்சூவை பி.கே.சிவகுமாரும் உருவாக்கவில்லை. அவர் என்று ஆதாரமின்றியும் தவறுதலாகவும் எழுதியது என் தவறு. அதற்காக மன்னிக்க வேண்டும்" என்று நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்க வேண்டும்.
7. சொர்ணம் சங்கரபாண்டி நான் தான் சூச்சூ என்றோ சூச்சூவை நான் உருவாக்கினேன் என்றோ நிரூபித்தால், நான் என்ன செய்வேன் என்று கேட்கிறீர்களா? ரோசா வசந்த் வலைப்பதிவின் கமெண்ட்டிலும், இந்த வலைப்பதிவின் பின்னூட்டத்திலும் நிபந்தனையற்ற மன்னிப்பை நான் கேட்கிறேன்.
8. ஒரு வார நேரத்தில், சொர்ணம் சங்கரபாண்டி தன் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால், அதற்காக பொதுவில் "நீங்கள் சூச்சூ இல்லை. சூச்சூவை நீங்கள் உருவாக்கவும் இல்லை. ஆதாரமின்றியும் தவறுதலாகவும் குற்றம் சாட்டியதற்கு மன்னியுங்கள்" என்னும் பொருள்பட மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், என் பெயரையும் credibility-ஐயும் reputation-ஐயும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, நான் மேற்கொண்டு சட்டபூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கிற வழிகள் இருக்கிறதா என்று ஆராய்கிற நிலைக்கு அவரால் தள்ளப்படுவேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.
9. நேரடியாக என்னையும் என் கருத்துகளையும் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் இன்னும் சிலரும் இப்படி என்னை "abuse and discriminate" தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களில் சொர்ணம் சங்கரபாண்டி ஒருவர் என்பது மேலே அவர் என் மீது வைத்துள்ள அபாண்டமான குற்றச்சாட்டிலிருந்தும் விளங்கும். எனவே, இவர்களைத் திருத்துவதற்காக அல்லாமல், என் மானத்தையும், பெயரையும், புகழையும், மன அமைதியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டி இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்கு இவர்கள் என்னைத் தள்ளினால், அதுகுறித்து வருந்த வேண்டியவர்கள் அவர்களே.
ஒருவாரம்... இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது. அடுத்த திங்கள் (ஜூன் 13, 2005) உடன் முடிவடைகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
தமிழ்மணத்தில் இது 'கோர்ட்.. கேஸ்.. வாரமா..?!'
போட்டுத் தாக்குங்க பி.கே.எஸ்..!!
மாயவரத்தான், என்மீது அபாண்டமாகப் பழிசொல்லப்படுவதை நிறுத்தவும், என்னை தற்காத்துக் கொள்வதற்கும், என் பெயருக்கும், புகழுக்கும், credibility-க்கும் களங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், நான் எடுக்கிற முறையான, சாத்வீகமான முயற்சிகளையும் "போட்டுத் தாக்குங்க" என்று ஒரே வரியில் பொருள் மாற்றுகிற மாதிரி எழுத எங்கே கற்றுக் கொண்டீர்கள். யாரையும் இதன்மூலம் நான் தாக்கவில்லை. நான் தாக்கப்படுவதற்கு நியாயம் கேட்கிறேன். அவ்வளவுதான். - பி.கே. சிவகுமார்
ஐயையோ பி.கே.எஸ்... 'போட்டுத் தாக்குங்க'விற்கு அப்படியும் ஒரு அர்த்தம் இருக்கிறதோ?! கண்டிப்பாக நான் எந்த தவறான அர்த்ததிலும் சொல்லவில்லை. உங்களது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படாமல் இருக்க இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் நீங்கள் இறங்கியதை தான் 'போட்டுத் தாக்குங்க' என்று கூறினேன். அதை தவறாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஓ.கே.வா?!
முட்டை இடுற கோழிக்குத்தானே வலி தெரியும்.
//சிவக்குமார், டோ ண்டு, ரஜினி ராம்கி போன்ற சில அசடுகள் //
போகிற போக்கில் 'எங்கள் ஊர்க்காரரை' ஒரு இடி இடித்திருப்பதை 'மாயுரம் மாபியா' சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
என்ன சொல்ல வற்ரீங்க ஞானபீடம்?
சிவக்குமார் கேட்கும் நியாயத்தை கண்டிப்பாக அவருக்கு அளிக்க இருக்கிறேன். அலுவலகத்தில் இருப்பதால் விவரமாக எழுத அவகாசமில்லை. இன்றிரவிற்குள் ஓய்வு நேரத்தில் அதைச் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
அதுவரை நண்பர்கள் பொறுமை காக்க வேண்டுகிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
அய்யா சாமி சூச்சூ! நம்ம தலையை உருட்டுவதற்கென்றே வரீங்களா? இணையத்தில் ஆயிரம் பெயரிலிகள் (I mean anyonymous) அடுத்தவரைப் பற்றி மோசமாக எழுதுவதெற்கென்றே அவதாரம் எடுத்துள்ளன. அவர்களைப் புகழ்ந்து பிழைக்கிறவர்களும் இருக்கிறார்கள். கடந்த பல வருடங்களாக இப்படி அடுத்தவரைப் பற்றி மோசமாகவும் கேவலமாகவுமே பெரும்பாலும் எழுதிப் பிழைக்கிற anonymous-கள் இணையத்தில் உண்டு. அவர்களுக்கு மட்டுமே நான் எழுதியவை பொருந்தும். மற்றபடிக்கு புனைபெயரில் எனக்குத் தெரிந்து பொறுப்புடன் எழுதுகிறவர்கள் நிறைய உண்டு. எனக்குத் தெரிந்து டைனோ போன்றவர்கள் இதுவரை அப்படி பொறுப்புடன் எழுதி வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சுதந்திரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்தாதவர்களைப் பார்த்து வருகிற எரிச்சலில் நான் எழுதியது, எல்லாப் பெயரிலிகளையும் (anonymous) குறிப்பிடுவது போல தோன்றினால் மன்னிக்கவும். மேலும், நான் சொந்தப் பெயரில் மட்டுமே எழுதுகிறேன் என்பதை வலியுறுத்தச் சொன்ன வாக்கியம் நான் தம்பட்டம் அடித்துக் கொள்வதாகத் தோன்றியிருக்கக் கூடும். அதற்கும் வருந்துகிறேன்.
மேலும் நீங்கள் பெயரிலியாக (anonymous) பொறுப்புடன் எழுதுகிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பிரச்னை கொண்டு வருகிற மாதிரி எழுதுகிறீர்கள் என்று மட்டும் சொல்ல முடியும்.
மற்றபடி உங்களின் பிற கருத்துகளுக்கு என் இப்போதைய பதில், No Comments.
- பி.கே. சிவகுமார்
முட்டை = வலைப்பதிவு
கோழி = வலைப்பதிவர்
வலி = வலி !
தெரியும் = தெரியும் !!
அதாவது, மாயவரத்தாரே
முட்டை போடுறப்ப கோழிக்கு ரொம்ப வலிக்கும்.
ஆனா, அது அந்த கோழிக்குத்தானே தெரியும்.
அதுமாதிரி, தன்னைப்பற்றி இழிசொற்களைக் கேட்பவருக்குத்தான் அது வலிக்கும். அதனால அவரு Mr.p.k.s போல சட்டப்பூர்வமான நடவடிக்கைக்குத் தயாராவார். அது தெரியாம 'போட்டுத்தாக்கு' அப்டீன்னு கொரலு விட்டா, வாங்கி கட்டிக்க வேண்டியதுதான்.
இந்த 'மாயவரம் மாஃபியா'வில் ஒரு காஃபி ஆற்றுகிற வேலையாவது எனக்குக் கிடைக்குமா?
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
மதிப்புக்குரிய திரு.சிவகுமார் வணக்கம்!
உங்கள் தளத்தில் நடைபெறுவது விவாதமா?
இல்லை!
வெறும் காழ்ப்புணர்வு.
தமிழர்களில் அதிகமானவர்கள் உணர்ச்சியினது உந்துதலுக்குப் பலியாகிறார்கள்.இதனாற்றாம் நம்மால் ஒருமித்தகூட்டுணர்வை உருவாக்கமுடியவில்லை.இந்தக் கூட்டுணர்வால் ஒருவரையொருவர் அரவணைத்துக்கொண்டு சமுதாய முன்னேற்றுத்துக்கு,மாறத்துடிக்கும் சமுதாயத்துக்கு உருப்படியாக ஆய்வுகள்,அறிவியற் கண்டுபிடிப்புகளை முன்வைக்கலாமே! அதோ மேலை நாடுகளைப் பாருங்கள்! எம்மைவிட அனைத்துத் தளத்திலும் ஒருகிணைந்த செயற்பாட்டோடு வெற்றி கொள்கிறார்களே! எத்தனை முறைகள் நம்மையவர்கள் படையெடுத்து அடிமைப்படுத்தினார்கள்!இந்த வலியிலிருந்து இன்னும் நாம் மீளமுடியாதிருக்கே.எதனால் நாம் சில வெள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டோம்?எப்படி நமது கெட்டித்தனங்கள் தோல்வி கண்டன?.இன்றும் 18ஆம் நூற்றாண்டு மனவுணர்வுகளுடன்தாம் நாம் விவாதிக்கின்றோம்.இந்தச் சமூக உளவியலானது நமது எண்ணங்களில் பெருமிதத்தையும்,தனிநபர்வாதத்தையும் ஏற்படுத்தி ,நம்மைக் காவுகொள்கிறது.இதனால் நமது அறிவியற்பலம் நம்மையும்,நமதுவீராப்பையுஞ் சுற்றி,எமது சமுதாயப்பலத்தை வேரோடு பிடுங்கி வீதியில் எறிந்துள்ளது.
இதனால்,நீ பெரியவரோ-நான் பெரியவரோ? கேள்வி,வராலாறுபூராகவும் தொடர்கிறது.
ஐயா,சங்கர பாண்டி,சிவகுமார்,இந்தப் பிடுங்குப்பாட்டைவிட்டுத் தொலைத்துவிட்டு, உருப்படியான ஆய்வுகள்மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு பொருளாதார வளத்தைச் செய்ய முனையலாமே? உங்களெல்லோரிடமும் மகத்தான ஆற்றலுண்டு.ஆனால் அதைப் பயன்படுத்தும் திறன் அறவேயில்லை.இதனாற்றான் இத்தனை அடிபாடு!
ஏதோ பட்டுத் தொலையுங்கள்!வீடு இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தாம
வாசகர்களே,
உங்கள் நேரத்தை இப்படிப் பட்ட தனிநபர் அவதூறு விவாதங்களில் வீணாக்குவதற்கு மன்னிக்கவும். சிவக்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றும் முன், இங்கு எழுதப்படும் ஒவ்வொரு வரியையும் தவறாமல் படித்து விட்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து யாரும் எனக்காகப் பரிந்து பேச வேண்டாம். என் மேல் விமர்சனமிருந்தால் கட்டாயம் பதிவு செய்யுங்கள். ஆனால் உங்களுக்கு மறுப்பு எழுதி கண்டிப்பாக உங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டேன்.
நான் வலைப்பதிவில் எழுதியவற்றை திரித்து என் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக என்னைத் தாக்கி தன் மரத்தடி நண்பருக்கு கடிதம் எழுதி அதை தன் பதிவிலும் போட்டார் சிவக்குமார். எனக்குப் பதில் எழுதும் அளவுக்கு நான் தகுதியில்லாதவன் என்று வேறு கூறிக்கொண்டார். இந்த முரண்பாடான அவரது நேர்மையின்மையையும், அவர் எழுதிய விசயங்கள் குறித்தும் தர்க்கித்து நான் ஒரு பின்னூட்டத்தை அவரது பதிவில் எழுதினேன். நான் எழுதிய பின்னூட்டத்துக்கு மறுமொழியாக, அவர் ஒரு பதிலை தன்னுடைய பின்னூட்டத்தில் கீழ்வருமாறு எழுதினார் (தேவையான சிறு பகுதி மட்டும், முழுமையாக வேண்டுமெனில் இங்கு கிளிக்கவும்):
//
At 1:25 PM, PKS said...
சொர்ணம் சங்கர பாண்டிக்கு,
நமஸ்காரம்.
உம் பெயரை சுடலைமாடன் என்று மாற்றிக் கொண்டதால் ஜாதியை ஒழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தீர் என்றால் நீவிர் நீடூழி வாழ்க. உம்முடைய பெயர் சொர்ணம் ... சங்கரபாண்டியாகவே தொடர்ந்திருந்தால்கூட உம்மை ஜாதி வெறியர் என்று சொல்கிற உம் தரத்துக்கு இறங்க எனக்கு விருப்பமில்லை. சுடலைமாடன் என்று பெயர் வைத்துக் கொண்டதால் நீர் உம்முடைய ஜாதீய சிந்தனையிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டீர் என்றால் அந்த சுலபப் புரட்சி உலகெங்கும் செழிக்க என் வாழ்த்துகள்!
//
நான் 'சுடலை மாடன்' என்ற பெயரில் blogspot ID உருவாக்கி வைத்திருந்தாலும், எல்லா இடங்களிலும் மறக்காமல் என்னுடைய பெயரை "நன்றி - சொ. சங்கரபாண்டி" என்று எழுதிப் பின்னூட்டம் விட்டு வருகிறேன். என்னுடைய தந்தையார் பெயரை வெறும் இனிசியலாக (சொ.) மட்டுமே பயன் படுத்தி வந்திருக்கிறேன். கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் இணைய மடலாடற்குழுக்கள் அனைத்திலும் நான் எழுதிய அனைத்தையும் படித்து வருபவர்களுக்கு என்னை சொ. சங்கரபாண்டி என்றோ அல்லது S. Sankarapandi என்றோதான் தெரியும்.
அமெரிக்காவுக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்த உடனே தமிழர்களுக்குத் தம்முடைய அலுவல் சம்பந்தமான பெயர்களில் குழப்பம் ஆரம்பித்த விடுவதுண்டு. அதனால் அப்பா பெயர்களும், நம் பெயர்களும் படாத பாடு படுவதுண்டு. இவை அனைவருக்கும் விளங்கும், குறிப்பாக சிவக்குமாருக்கு விளங்கும். ஆனாலும் வேண்டுமென்றே என்னுடைய தந்தையார் பெயரை இழுத்து எழுதியது அவருடைய சாதிப்பெயரை குறிப்பிடவேண்டுமென்பதே அவர் நோக்கம். இருந்தாலும் சிவக்குமார்தான் இங்குள்ள அனைத்து பதிவர்களையும் விட நாகரீகம் அதிகமானவராயிற்றே. அதனால் என்னுடைய சாதி அடையாளத்தை (அல்லது சாதிப்பற்றை) உலகுக்கு உணர்த்துமாறு சொர்ணம்பிள்ளை என்ற அப்பா பெயரினைச் சொல்ல வந்தவர் சொர்ணம்... என்பதோடு நாக்கைக் கடித்துக் கொண்டார். இதுதான் தங்களை நாகரீகத்தின் சிகரம் என்று பிரகடணப் படுத்திக் கொள்பவர்களின் நாகரீகம்.
நான் அதைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் அவருடைய கருத்துக்களையும், அதன் அடிப்படையான கொள்கைகளையும், அவற்றுக்கு ஆதரவாக தொடர்ந்து அளித்து வந்த நேர்மையற்ற ஆதாரங்களையும் சுட்டிக் காட்டி எதிர்த்து வந்தேன். ஒவ்வொரு முறையும் அவருக்கு என் மீது ஏற்பட்ட தனிப்பட்ட கோபத்தின் உக்கிரத்தை அவருடைய பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். அதனுடைய வெளிப்பாடுகளாக வாதத்துக்குத் தொடர்பே இல்லாமல் என்னைப் புலிகளின் ஆதரவாளர் என்று முத்திரை குத்துவது போல பயமுறுத்துவது போன்றவற்றைத்தான் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தார். "நீர் கழிப்பதையும் துப்புவதையும் உம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளும். என் வலைப்பதிவு வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்." என்றெல்லாம் எழுதிப் பார்த்துவிட்டார். என்றாலும் என்னுடைய தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு என் சாதி முகமூடியைக் கிழிப்பதில் மட்டும் அவரது ஆர்வம் குறையவில்லை. அப்பொழுது தோன்றியதே இந்த சூச்சு என்ற அனாமத்து, அதுவரை சூச்சு என்ற பெயரில் யாரும் எங்கும் எழுதியதாக நினைவில்லை. அந்த சூச்சு எழுதியதை அப்படியே கீழே தருகிறேன்.
//
At 7:03 PM, Choochu said...
"அதை விட்டு அந்த மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்று அறிய முயலுங்கள். அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வில்லை என்று ஆதாரப் பூர்வமாகச் சொல்லுங்கள்,"
சொல்லவிட்டாத்தானுங்களே?
ரைட் ராயலா அண்ணன் சொல்லிட்டீங்க. இதையே கொஞ்சம் போய், குழந்தைகள் பின்னால ஒளிஞ்சிக்கிற மாவீரர்ட்ட சொல்லி ஏகே47 இல்லாத ஒரு தேர்தலை நடத்தச் சொல்லிருங்க. ஒப்புக்கு நிக்கிற எதிர்கட்சிக்காரங்களைக் கூட காக்கா மாறி சுட்டுத்தள்ளிடராங்களாம். ஆனந்த சங்கரிங்கரவர் பொலம்பரார்.
சொர்ணம் பிள்ளை சங்கரபாண்டி அண்ணன் தமிழ்நாட்டில கூட்டணி கேக்கறதும் ஈழத்துல புலிக்கு சொம்படிக்கிறதும் ஒரே காரணத்துக்குத்தான். அண்ணனுக்கு எப்பவும் தீவிரவாதம் புடிச்ச ஒன்னு. இங்க கூட்டணி இருந்தாத்தான் மதிமுக மாதிரி தீவிரவாதிகளுக்கு அரசு கிடைக்கும். அங்க, புலியை விட ஏது இவங்களுக்கு புடிச்ச கொலைகாரக்கும்பல்?
//
அனாமத்து சூச்சு கருத்து ரீதியாக என்னைத் தாக்கியிருக்கிறார். ஆனால் அநாகரீகமாக அல்ல. அவர் என்னை "சொர்ணம் பிள்ளை சங்கரபாண்டி" என்று சாதாரணமாகக் குறிப்பிட்டதற்கும், சிவக்குமார் என்னை மேலே சொன்னபடி "சொர்ணம் ... சங்கரபாண்டி" என்று கூறியதற்கும் எந்த வேறுபாடுமில்லை. இன்னும் சொல்லப் போனால், சிவக்குமார் என்னுடைய சாதிப்பற்றை பற்றி குறிப்பிடும் தொணியில் என் தந்தை பெயரை சொன்னதை விட சூச்சு அகஸ்மாத்தாகத்தான் சொல்லியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து உடனேயே சிவக்குமார் எழுதிய இரண்டு பின்னூட்டங்களைப் பாருங்கள், அப்படியே தருகிறேன்.
//
At 7:18 PM, PKS said...
சூச்சூ! நீங்கள் யாரென்று தெரியவில்லை. உங்கள் கருத்துகளில் நியாயமான கேள்விகள் உள்ளன. ஆனாலும், சங்கரபாண்டியை ஜாதி என்கிற குறுகிய வட்டத்துக்குள் அடக்கி, அவர் செய்கிற அதே தவறைச் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்தான் மேட்டிமைத்தனத்துடன் அடுத்தவரை ஜாதி சிந்தனையுடையவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால், அதே தவறைத் தாங்களும் செய்ய வேண்டுமா? எனவே, அவரை ஜாதிக்குள் அடைக்க முயல்கிற முயற்சியை நான் செய்ய மாட்டேன். அப்படிப்பட்ட முயற்சிகளை அவர் போன்றவர்கள் என்மீது செய்தாலும், ஜாதியைச் சொல்லி அவரை விளிப்பதை நான் கண்டிக்கிறேன். சொல்லப் போனால், என் சொந்த வாழ்வில் நான் எப்படியிருக்கிறேன் என்பதைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமலேயே, என் ஜாதிய பின்புலம் என்று சங்கரபாண்டி போன்றவர்கள் லகுவாகக் குற்றம் சாட்டினாலும், தங்கள் சொந்த வாழ்வில் அவரைப் போன்றவர்கள் ஜாதி வெறியற்றும் ஜாதிய சிந்தனையற்றுமே இருக்கிறார்கள் என்பதையே நான் நம்ப விரும்புகிறேன்.
அடையாளம் தெரியாமல் புனைபெயரில் எழுதுவது கருத்துகளைச் சொல்வதற்கும், சொந்த பாதுகாப்பிற்கும் என்றால் புரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி எழுத வேண்டாமே.
அவரிடம் நான் காட்டுகிற கடுமையும் கோபமும் அவர் மீதுள்ள வெறுப்பினால் அல்ல. அவர் பின்பற்றுகிற கொள்கைகள் மீதுள்ள வெறுப்பினாலும் அல்ல. மின்னஞ்சல்களிலும் நேரிலும் அவருக்கு நான் தந்து வந்திருக்கிற தனிமனித மரியாதைகளையும் பரஸ்பர புரிந்து கொள்ளுதலையும்கூட புரிந்து கொள்ளாமல் கொள்கைக்கு சிங்கி அடித்துக் கொண்டு மனிதத்தையும் நட்பையும் தொலைத்துக் கொண்டு வருகிறாரே என்பதால்தான்.
"ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கமாகும்" என்று சொன்னவர் பெரியார். அவர் கருத்துகளுடன் உடன்படாவிட்டாலும், பரஸ்பர மரியாதையுடனும் அன்புடனும்தான் சங்கரபாண்டியை நான் நடத்தி வந்திருக்கிறேன். என்ன செய்வது, பெரியார் புகழ் பாடுவதாகச் சொல்லிக் கொள்கிற அவராலோ மற்றவர்களாலோ இப்படி அடுத்தவரை நடத்த முடியவில்லை என்றால், அது என் பிரச்னையில்லை.
எனவே, உங்கள் கமெண்ட்டை நீக்கி விடலாமா என்று இதன்மூலம் சங்கரபாண்டியிடம் கேட்கிறேன். அவர் சரியென்றால் உங்கள் கமெண்ட்டை நீக்கி விடுவேன். வேண்டுமென்றால், சங்கரபாண்டியின் கொள்கைகளைக் கிழிகிழியென்று கிழித்து இதே கருத்துடன் இன்னொரு கமெண்ட் போடுங்கள். சரியா?
நாமாவது முன்மாதிரியாக இருப்போம். இல்லையென்றால், அடுத்தவரைக் குறை சொல்கிற அருகதை அற்றவர்களாகிவிடுவோம்.
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
- பி.கே. சிவகுமார்
At 7:36 PM, PKS said...
சொல்ல மறந்து போனது. கடந்த சில பின்னூட்டங்களில் சங்கர பாண்டியிடம் நான் அவர் பாணியிலேயே பேசியது (கடுமையாகவும் தாட்சண்யமின்றியும்), பெரியார் சொன்னதுபோல, அவர் என்னை நடத்துவது மாதிரி அவரை நான் நடத்தினாலாவது அவருக்குப் புரியுமா என்ற ஆசையால்தான். ஆனால், அவரோ முற்றும் தெளிந்த ஞானி போல பேசுவதாகவும், நான் மட்டுமே கோபத்தில் பேசுவதாகவும் வழக்கம் போல பழி சொல்கிற வேலையிலேயே இருக்கிறார். எப்படிப் பேசினாலும் அவருக்குப் புரியப் போவதில்லை என்று நிரூபித்து வருகிறார். அவ்வளவுதான்.
- பி.கே. சிவகுமார்
//
வாசகர்களே நீங்களே இப்பொழுது முடிவு செய்யுங்கள்.
சிவக்குமார் என் தந்தை பெயரை எழுதிய முறைக்கும், சூச்சு எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டையும் பாருங்கள். சிவக்குமார் சூச்சுவைக் கண்டிக்க வேண்டுமா அல்லது சூச்சு சிவக்குமாரைக் கண்டிக்க வேண்டுமா?. உள்ளுக்குள் எவ்வளவுதான் அநாகரீகமாக எண்ணினாலும், கோபங்கொண்டாலும், நடந்து கொண்டாலும், வெளியே நாகரீகமாகக் காட்டிக் கொள்ள வேண்டுமே. ஏசுநாதரின் மலைப் பிரசங்கங்களையொத்த வலைப் பிரசங்கங்களின் மூலம் தன்னை நாகரீகவாதியாகப் பிரகடணப் படுத்திக் கொள்வதால், திரை மறைவில் இப்படி நாடகங்கள் தேவைதான்.
மிகச் சாதாரணமாக சூச்சு என்னை "சொர்ணம் பிள்ளை சங்கரபாண்டி" என்று எழுதியது சிவக்குமார் எழுதியதை விட பெரிய குற்றமில்லை. அதைப் பற்றி நான் வேண்டுமானால் உறுத்தலாகக் கருதலாம். சூச்சு அகஸ்மாத்தாகக் கூறிய என் தந்தையாரின் பெயரைப் பயன் படுத்தி தன் நாகரீக பிம்பத்தை கட்டியெழுப்ப அவருக்கு ஒரு நீண்ட எச்சரிக்கையும், எனக்கு ஒரு பொது மன்னிப்பும் சிவக்குமாரிடமிருந்து கிடைத்தன.
இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டதால்தான், இறுதியாக ஒரு பின்னூட்டத்தை அளித்து விலகினேன். கீழே அந்தக் கடைசிப் பின்னூட்டத்தையும் அப்படியே தருகிறேன்.
//
At 11:33 PM, சுடலை மாடன் said...
எனக்கு இந்தப் பதிவில் நடப்பதைப் பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது. நாகரீகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்று!
இந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் புதியவர்களுக்கு, நான் சொல்வது புரிய வில்லையென்றால், தெரிந்தே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் பொறுமையாக இந்தப் பதிவுக்கு முந்தைய மூன்று பதிவுகளையும் பின்னூட்டங்களையும், உள்ளே கொடுக்கப் பட்டிருக்கும் சுட்டிகளையும் படித்து விட்டு, இந்தப் பதிவையும் பின்னூட்டத்தையும் படியுங்கள். அப்படியும் புரியவில்லையென்றால் திரு. சிவக்குமார் சொல்வதை ஏற்றுக் கொண்டு, விட்டு விடுங்கள், ஒன்றும் குடி முழுகப் போவதில்லை. எனக்கு எனது பிம்பத்தைப் பற்றிக் கவலையுமில்லை. எந்த மரியாதையும் தேவையுமில்லை. அதை யாரும் பிச்சையாக அளிக்கவும் முன்வரவேண்டாம்.
சில நேரங்களில் சில மனிதர்கள்!
இங்கு திரும்பி வரப் போவதில்லை என்று விடை பெறுகிறேன், நன்றி, திரு.பி. கே. சிவக்குமார்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
//
இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டு விடத்தான் நினைத்தேன். பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டன. திடீரென்று ரோசா வசந்தின் பதிவைப் பார்த்ததும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் பலவீனப்பட்டுப் போனதாய் அவர் எழுதியிருந்ததைப் பார்த்த பொழுது எனக்குப் பலம் வந்து விட்டது :-( பழையனவற்றை கிளரிப் போட்டுவிட்டேன். ஸ்ரீரங்கன் ஐயா கூறியுள்ளது போல் பலருடைய நேரத்தை வீணடிப்பதற்கு வருந்துகிறேன்.
இறுதியாக, இந்தப் பிரச்சினையை இந்த மட்டில் முடிப்பதற்காக--
மேலே கொடுக்கப் பட்ட ஆதாரங்களைத் தவிர வேறு எந்த பலமான ஆதாரங்களும் இல்லாத நிலையில், அவற்றைத் தேடுவதற்கான தொழில்நுட்பத்திறமையும், நேரமும் இல்லாத நிலையில், சிவக்குமார் குறிப்பிட்டுள்ள சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பயந்த கோழையான நான், அவர் கேட்டுள்ள கோரிக்கையை நிறைவேற்றுகிறேன்.
உலகத்தில் நடக்கும் குற்றங்கள் அனைத்துக்கும் ஆதாரங்களை பாதிக்கப் பட்டுள்ளவர்கள் கொடுக்க முடிகிறதா என்ன? எதிரியைப் பலவீனப் படுத்த உலக நாடுகளின் உளவு நிறுவனங்கள் நடத்தும் நாடகங்களையெல்லாம் வெளிக் கொணரத்தான் ஆதாரமுண்டா? "நடுனிலைப் பத்திரிகையான" திண்ணையிலிருந்து எழுத்தாளர் ஞாநி போன்ற நேர்மையாளர்களை அவமானப் படுத்தி வெளியேற்ற நடந்த நாடகங்களுக்குத் தான் ஆதாரங்கள் உண்டா?
எனவே, வலைப் பதிவு உலகத்தில் அனைவர் முன்னிலையிலும் சொல்கிறேன் -
"திரு. பி. கே. சிவக்குமார் அவர்களே, நீங்கள் சூச்சூ இல்லை. சூச்சூவை நீங்கள் உருவாக்கவும் இல்லை. ஆதாரமின்றியும் தவறுதலாகவும் குற்றம் சாட்டியதற்கு மன்னியுங்கள்"
ஆனால், என்னுடைய உள்ளத்தின் நம்பிக்கைகளுக்கு நீங்கள் சட்டப்பூர்வமான தடை போட இயலாது. இதற்கு மேலும் நீங்கள் எது வேண்டுமானால் செய்யுங்கள், வலைப்பதிவில் இதுவே என்னுடைய கடைசி விளக்கம்.
உண்மையுடன்,
நன்றி - சொ. சங்கரபாண்டி
சொ.ச.பா,
தாங்கள் சூச்சுவை PKS என்று (யூகங்களின் அடிப்படையில்) எண்ணியதும், அதன் தொடர்ச்சியாக நடந்தேறிய கசப்பான நிகழ்வுகளும் தேவையில்லாதவை என்பது என் கருத்து. நிற்க.
நீங்கள் மிகவும் மதிக்கும் இந்த "ஸ்ரீரங்கன் ஐயா" ஒரு முறை என் பதிவு ஒன்றில் தேவையில்லாமல் எல்லாத்
தமிழர்களையும் தரம் தாழ்ந்த சொற்களில் வசை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://balaji_ammu.blogspot.com/2005/05/no1.html#comments
சிவகுமார், திண்ணையிலோ எங்கோ உங்கள் பதிவொன்றைப் படித்த போது விவாதத்தை வேதத்தின் ஒரு அம்சமென்றவாக்கில் நீங்கள் எழுதியிருந்ததிலிருந்தும், அதன் பின்னர் நீங்கள் என் வலைப்பதிவிலும் மற்றோரது வலைப்பதிவுகளிலும் ஈடுபடும்/ஏற்படுத்தும் வாதங்களிலிருந்தும் 'விவாதத்தின்' மீது உங்கள் ஆர்வம் எத்தகையது என்பதைத் தொடர்ந்து கண்டு கொண்டே இருக்கிறேன். இதை மற்ற வலைப்பதிவோரும் கண்டுகொண்டே இருக்கிறார்கள். சரியாக எழுதுவது வேறு, சரியாக எழுத வேண்டும் என்று முயன்று எழுதுவது வேறு என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எந்த ரகம் என்று எனக்கு ஓரளவு புரிய ஆரம்பித்திருக்கிறது. இது மற்றவர்களுக்கும் புரியலாம். அப்போது உருப்படியான வேலைகளைச் செய்ய நினைப்போர் விவாதம் என்ற பெயரில் நடக்கும் திரிப்புகளில் தங்கள் சக்தியை இழக்க வேண்டியிராது. எனக்கும் எனையொத்தவர்களுக்கும் சக வலைப்பதிவர்களைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பையளித்த உங்களுக்கும், ரோசாவசந்த், சங்கரபாண்டி ஆகியோருக்கும் என் நன்றி. நீங்கள் அவசியம் தொடர்ந்து எழுதவும்!
//சங்கரபாண்டியை மன்னிப்புக் கோரச் சொன்ன நீங்கள், உங்கள் தவற்றை உணர்ந்து விசிதாவிடமும் ரவி ஸ்ரீனிவாஸிடமும் மன்னிப்புக் கோருவீர்களா? இல்லை சங்கரபாண்டிக்கு ஒரு நியதி உங்கள்ளுக்கொரு நியதி என, உங்கள் நேர்மையின் பாலும் நடுவுனிலைமையின் பாலும் (fஐர்னெச்ச்) வலைப் பதிவு வாசகர் ஐயங்கொள வைப்பீரா?//
பிகேஎஸ்,
இப்படித்தான் புதிதாக வருபவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வெகுநாளாகாது எனப்தை புரிந்து கொள்ள, உங்களை வேண்டுகிறேன்.
மேற்சொன்ன பின்னுட்டம் வந்து மூன்று நாட்கள் ஆகியும் , பதில்
சொல்லாமல் இருப்பதற்கு என்ன அர்த்தம். இது பெருமெளனமா? அல்லது
மோனத்தில் மூழ்கிவிட்டீர்களா? வேறு யாராவ்து உங்களை எங்காவது "ஆதரப் பூர்வமில்லாமல்" எழுதினால் தான் ஞானக்கணனை திறந்து , நீதி கோரி பதிவு இடுவீர்களோ?
மேற்சொன்ன காரணங்களுக்காகத்தான் உங்கள் பதிவுக்ளை வாசிப்பதை நிறுத்தி வைக்கிறேன். என்ன செய்வது? இப்படி உங்கள் நேர்மையின்மையும் காட்டுவதும் ஒரு வேலைதானே அதை ஆறு மாசத்துக்கொருதரம் செய்வதில் ஒன்னும் எனக்கு கெட்டுப் போய்விடாது.
பின்னூட்ட இடம் அளித்ததற்கு நன்றி. ஜெய காந்த குறித்த உங்கள் ஒளிபதிவுக்கும் அருண் பதிவில் நன்றி சொல்லியிருந்தேன்.
ஆறு மாசம் கழித்து வருகிறேன்.
KarthikRamas,
Thanks for not reading what I write for 6 months. I will be more happier if you choose not to read what I write at all.
Then, If Wichita has any problems in what I wrote, let her raise at whereever she/he wants and I will face it.
You or anonymous-es need not worry about it.
GOOD BYE.
- PK Sivakumar
Hello Wichita,Please get a life and grow up. Or be brave enough to write with your real name and real identities. Until you do so, you are just yet another anonymous to me who has no credibility in my dictionary.
GOOD BYE to you too. Please dont waste your time and my time by writing here.
People like you who use anonymous facility to attack others have no morality and ethics. That itself shows who is pervert.
I thought you have some brains to understand what I wrote. My comments clearly says "koku maaka purinthu kolla vendaam." However, if you understood it in a kokku maaku way, please feel free to take any legal action against me and I will meet you there. That way, atleast I can expose your real name and identities to the world.
GOOD BYE.
- PK Sivakumar
Post a Comment