Friday, October 21, 2005

நண்பர்களுக்கு

நண்பர்களுக்கு,

"யார் அவர் யாரோ" என்ற என் பதிவு குறித்துச் சிலர் உளறுவதற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சூச்சூ என் பதிவில் மட்டும் எழுதவில்லை. பல பதிவுகளில் எழுதியிருக்கிறார். ஏன், பெயரிலியின் பதிவிலும் சூச்சூ எழுதியிருந்தாரே. அவரிடமே சூச்சூ யாரென்று கண்டுபிடித்து இப்போது நான் எழுதியது மாதிரி எழுதச் சொல்லட்டுமே. அதை நான் வரவேற்கிறேன்.

அதே மாதிரி, ஸ்ரீகாந்த் மீனாட்சி மற்றும் முகமூடியின் பதிவுகளில் எழுதுவது யாரென்று என்னைக் கண்டுபிடிக்கச் சொல்பவர்கள் கண்டுபிடித்து இதே மாதிரி ஆதாரத்துடன் வெளியிடட்டுமே. நான் எதற்கு அதைச் செய்ய வேண்டும். நான் என்ன இப்படி என்னைக் கேட்பவர்களின் வீட்டு வேலைக்காரனா? அல்லது ஸ்ரீகாந்த்தோ முகமூடியோ மற்றவர்களோ தங்கள் பதிவுகளில் எழுதுகிற அனானிமஸ்கள் யாரென்று தெரிந்தால் வெளியிடலாமே. எனக்கொன்றும் பிரச்னையில்லை. எல்லா இடங்களிலும் எப்படிப்பட்ட கருத்தாக இருந்தாலும் என் சொந்தப் பெயரில் எழுதுவேன் அல்லது வாயை மூடிக் கொண்டிருப்பேன். அதுதான் என் வழக்கம்.

காசியின் பதிவில் நான் தமிழ்மணத்தைப் பற்றிக் கேள்வி கேட்டபோது அதை திசைதிருப்புகிற மாதிரி ராம்வோச்சர் வேறு பெயரில் எழுதினார். மரத்தடியைப் பற்றிப் பிரச்னை என்றால் மரத்தடியில் கேட்காமல் வேறொரு பிரச்னையைப் பற்றிப் பேசும்போது எழுதுவது திசைதிருப்பும் தந்திரமே அல்லாமல் வேறு அல்ல. அதுவுமில்லாமல் அதில் மரத்தடியைவிட்டு மதி போனதோடு என்னையும் இணைத்து வேறு. இக்கேள்விகள் இருப்பவர்களை வெளிப்படையாக் இவற்றை மரத்தடியில் எழுதாமல் நான் ஒரு கேள்வி கேட்கும்போது மட்டும் சொல்வது விஷயத்தை திசை திருப்புவது ஆகும்.

அப்புறம் போலி promise-this-is-not-a-spam வந்ததும் கமெண்ட்டில், "At least Kasi knows who is who, and who is NOT who. That's enough for me at this moment." என்று எழுதினார். இதைப் படித்ததும் காசிக்கு யார் அந்தப் பெயரில் எழுதியது என்று அப்போதே தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. என் பெயரில் போலியாக ஒருவர் எழுதியபோது அதை நீக்கச் சொல்லிக் காசியிடம் வேண்டிக் கொண்டும் காசி நீக்கவில்லை. போலியாக என் பெயரில் எழுதுகிறவர்கள் சொல்கிற பொய்களை எல்லாம் உட்கார்ந்து ரசிக்கிற நிலையில் சிலர் வேடிக்கை பார்க்கிறார்களோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மேலும், மேற்கண்ட இரண்டையும் பார்க்கும்போது, தமிழ்மணத்தின் உள்விவகாரங்கள் தெரிந்த ஒருவர், காசியின் தமிழ்மணத்தைப் பற்றி நான் கேள்வி கேட்பதால் இப்படி எழுதுகிறார்களோ என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பிருக்கிறது. மேலும், குசும்பனை நீக்கிவிட்டார்களா என்று முகமூடி மன்றத்தில் கேட்ட ஒரு கேள்வியை வைத்தே, குசும்பனை நீக்கிவிட்டதாக ராம்வோச்சர் வேறு பெயரில் எழுதுகிறார் என்றால், ஒன்று அவர் தமிழ்மண விவகாரங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும் அல்லது புரளி கிளப்புவராக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இதை நான் என் கமெண்ட்டில் எழுதியும் இருக்கிறேன். என்னுடைய பெயரில் போலியாக எழுதப்பட்ட பதிவுகளைக் காசி நீக்காததால், அதை எழுதியவர் யார் என்று அறிய முற்பட்டேன். அதற்காக எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான வழியையும் நான் பயன்படுத்தவில்லை. அதனால் நானே அறிந்து கொண்டேன். என் சந்தேகமும் தீர்ந்தது. காசிக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், ராம்வோச்சர் என்மீது இருக்கிற பழைய பழி, வன்மம் இவற்றைத் தீர்த்துக் கொள்ள இப்படி ஒளிந்து கொண்டு விளையாடுகிறார் என்று அறிந்து கொண்டேன். அவ்வளவுதான். ராம் வோச்சர் பலரின் ஐ.பிஐ. இப்படி வேறு பெயரில் எடுத்துப் போட்ட பெருவரலாறு உடைய முன்னோடி. அவர் வழியிலேயே நானும் அவர் ஐ.பி.ஐ எடுத்துப் போட்டேன்.

1. என்னைப் பற்றி எழுதியவர் யாரென்று கண்டுபிடிப்பதுதான் எனக்கு முக்கியம். அதை நான் செய்தென். ஊருக்கும் உலகுக்கும் நான் போலீஸ்காரன் அல்ல. என் வீட்டுக்குத் திருட வருகிற திருடனை பிடிக்க முடிந்தால் பிடித்துத் தருவேன். அதற்காக, ஊரில் உலகில் இருக்கிற திருடர்களை எல்லாம் பிடித்துத் தா என்று கேட்பது அபத்தம். இதைக்கூட, என் பெயரில் போலியாக எழுதப்பட்ட கமெண்ட்டை நீக்கச் சொல்லியும் காசி நீக்காததால் செய்தேன். அப்போது ஒரிஜினல் promise-this-is-not-a-spam யார், போலி promise-this-is-not-a-spam யார் என்று நான் அறிந்து கொண்டேன். ஆனால், போலி promise-this-is-not-a-spam ராம்வோச்சர் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய burden-of-proof ராம்வோச்சருக்குத்தான் உண்டு. என்னைக் கேட்டால், ராம்வோச்சர் சொந்தப் பெயரில் எழுதாமல் இப்படி அனானிமஸாக என்னைக் குற்றம்சாட்டி எழுதியதாலேயே, போலிகள் அதை இன்னும் வளர்த்தெடுத்தார்கள் என்ற மட்டில் அவர் மீது எனக்கு எரிச்சல் என்பது ஒருபுறம் (இது பெரிய விஷயமில்லைதான்).

2. இன்னொரு பக்கம் காசியின் பதிவில், அதே ஒரிஜினல் promise-this-is-not-a-spam பின்வருமாறு எழுதினார்.
"I leave to the readers' own interpretation on the intention of the poster, who posted the third post under the same net-name I used earlier. I have no more to say except briging to one pattern to their attention; go and scrutinize any blog where Mr. Sivakumar gives a feedback in his own name, with someone - in his/her own name or in net-name - replies contradicting Mr. Sivakumar. There will be a retort to the second poster to discredit him/her. I will not defend the second poster in other case as I have nothing to say. However here, I strongly condemn a person impersonate in the same name I used, but have no other way to discard. However I strongly believe the readers are intelligence to understand really what is going on."

இங்கே ராம்வோச்சர் என்ன சொல்கிறார். "சிவகுமாரின் பெயரைப் பயன்படுத்தி எழுதுகிறவருக்காகப் பேசமாட்டேன். ஏனென்றால், எனக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம், என் பெயரைப் பயன்படுத்தி எழுதுபவரை கடுமையாகக் கண்டிக்கிறேன்" என்கிறார். இவர் தனக்கு என்று மட்டும் வரும்போது கண்டித்துக் கொள்வாராம். இதே விஷயம் சிவகுமாருக்கு நடந்தால் சிவகுமாரின் பெயரைப் பயன்படுத்துகிறவரை ஆதரிக்காவிட்டாலும் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டாராம். எப்படி இருக்கிறது நியாயம். சும்மா நாலு வார்த்தை எழுதி இதைக் கண்டிக்கிறேன் என்று சொல்வதைக் கூட மற்றவர்களுக்காக இவர் செய்ய மாட்டாராம். (உடனே, நான் அதைக் கண்டித்தேன், இதைக் கண்டித்தேன் என்று diaper போட்ட காலத்திலிருந்து எடுத்து ஒரு பதிவு வரும் பாருங்கள் :-) நான் சொல்வது, இங்கே என் விஷயத்தில் அவர் எழுதியிருப்பது. அதுதான் எனக்கு முக்கியம்.) இத்தகைய தார்மீகத்தையும் நேர்மையையும் தன்னுள் வைத்துக் கொண்டு, இவர்கள் நான் இவர்களுக்காக சூச்சுவைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றும், பிறரைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றும், போலி promise-this-is-not-a-spam-ம் ராம்வோச்சரும் வேறு என்று சர்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
போலி promise-this-is-not-a-spam வேறு ஆள் என்று கட்டாயம் நான் முன்னரே சொல்லியிருப்பேன். ஆனால், மேலே அவர் எழுதிய வரிகள், தன்னை மட்டும் காத்துக் கொண்டு, அடுத்தவரைப் பற்றி என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாரே, அந்த வழியின்படி நான் சொல்லவில்லை. உங்கள் நடத்தையை உங்களுக்கே காட்டும்போது கசக்கிறது என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

அடுத்ததாக, ஊர் உலகில் அனானிமஸாக எழுதுகிறவர்கள் எல்லாம் யார் என்று கண்டுபிடிப்பது என் வேலை அல்ல. அதைச் செய்ய பிறரால் முடியவில்லை என்றால், அப்படி அனானிமஸாக எழுதுகிறவர்களால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் சட்டத்தின் எல்லா வழிகளையும் அணுகவும் பயன்படுத்திக் கொள்ளவுமே நான் பரிந்துரைப்பேன். அப்படி நீங்கள் சட்டரீதியான வழிகள் மூலம் நிவாரணம் தேடுவதை நான் வரவேற்கவும் செய்கிறேன். அப்போது பல உண்மைகள் வெளிவரும். பலரின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும்.

என்னுடைய பதிவில் அனானிமஸ்கள் எழுதலாம் - கருத்துகள் நாகரீகமாக இருக்கும்வரை. என்னைத் தாக்கி எவ்வளவு மோசமாக வந்தாலும் விட்டு வைக்கிறேன். மற்றவர்களைத் தாக்கி வரும்போது, நீக்கி விடுவேன் என்று சொல்லியிருந்தாலும், இதுவரை எதையும் நானாக நீக்கியதில்லை. என் பதிவை எந்தவிதமான சட்டபூர்வமான விசாரணைக்கும் உட்படுத்திக் கொள்ள நான் தயார். சட்டம் கேட்கும்போது அதைச் செய்வேன். இந்த மாதிரித் தங்கள் பதிவைப் பற்றிச் சொல்வதற்கு என் மீது குற்றம் சாட்டுபவர்கள் தயாரா என்பதை அவரவர் தம் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளட்டும். எனவே, சும்மா திரும்பத் திரும்ப வந்து ஆதாரமில்லாமல் என் மீது குற்றம் சாட்டுகிற சங்கரபாண்டி போன்ற நபர்களுக்குப் பதில் சொல்ல என்னிடம் இதற்கு மேல் எதுவும் இல்லை. ஆதாரம் இல்லாமல், ஆத்திரத்தின் உச்சியில் அடுத்தவர் மீது குற்றச்சாட்டுகள் வைப்பது சங்கரபாண்டிக்குப் புதிதில்லை. இதைப் பல உதாரணங்கள் கொண்டு என்னால் விளக்க முடியும். அந்த நிலைக்கு என்னை அவர் தள்ளாமல் இருப்பார் என்று நம்புகிறேன்.

நியோ என்ற பெயரில் எழுதியவர் மீது வந்த எரிச்சலில் பயன்படுத்திய வார்த்தைக்குக் கூட அவரிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டிருக்கிறேன். ஆனால், அதே நியோ, நான் பயன்படுத்திய பொருள் தருகிற வார்த்தைகளையே எனக்குத் திருப்பிப் பயன்படுத்தினார். அதுகுறித்து அவர் மன்னிப்பு கேட்காதது மட்டுமில்லை (அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்), அதை ஒரு விஷயமாக இன்றைக்கு எடுத்து வருகிற சங்கரபாண்டியின் நேர்மையைப் பாருங்கள். சங்கரபாண்டி உள்ளிட்ட இன்னும் சிலரின் பிரச்னை - என் மீதான கண்மூடித்தனமான தனிப்பட்ட வெறுப்பு. இவர்களுக்குக் கொள்கை மண்ணாங்கட்டியெல்லாம் எதுவும் கிடையாது. என்னை அடிக்க எதையும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி அவர்கள் என்னை அடிக்கும்போது, என்னைத் தற்காத்துக் கொள்ளவும், அவர்களின் தோலுரித்துக் காட்டவும் எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், பதிலுக்கு இவர்கள் என்ன சொன்னாலும் நான் போய் கமெண்ட் எழுதிக் கொண்டோ, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவர்களைத் தாக்கிக் கொண்டோ இருப்பதில்லை என்பதையும் வாசகர்கள் அறிவார்கள். ரோசா வசந்த்கூட சிலரை பாஸ்டர்ட்ஸ் என்று திட்டி எழுதியிருக்கிறார். அதில் நானும் இருக்கலாம். எனக்கு அவையெல்லாம் கொள்கை முடிவெடுக்க உதவுகிற காரணி இல்லை. கோபத்தில் ஆயிரம் பேர் ஆயிரம் பேசுகிறார்கள். அதை மீறி என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்க்கிற மனப்பக்குவம் எனக்கு வந்துவிட்டது. நான்கெழுத்து ஆங்கில வார்த்தையை உபயோகிக்காத சராசரி அமெரிக்கர்கள் அதிகம் இல்லை என்று நான் இங்கே பார்க்கிறேன். அதற்காக, ரோசா என்னையோ யாரையோ பாஸ்டர்ட்ஸ் என்று திட்டினார் என்பதற்காக, இன்றைக்கு ரோசாவுக்குக் கூட குஷ்புவைப் பற்றிப் பேசுகிற தகுதி இல்லை என்றும், ரவி ஸ்ரீனிவாசை விமர்சிக்கிற உரிமை இல்லை என்றும் சொல்கிற தைரியம் சங்கரபாண்டிக்கு இருக்கிறதா? அப்படிக் கேட்பது எவ்வளவு பெரிய உளறல் என்று சங்கரபாண்டி அறிய மாட்டாரா? நியோ விஷயத்தில் நான் நாகரிகமாக வசையை எழுதினேன். நாகரீகமான வசை எப்படி பலரின் வாழ்வின் அங்கமாகியிருக்கிறது என்று அங்கே எடுத்துக் காட்டினேன். ஆனாலும், மன்னிப்பு கேட்டிருக்கிறேன். ஆனால், அப்படி நியோவை எழுதியதாலேயே, ரவி ஸ்ரீனிவாசைப் பற்றியோ குஷ்பு விஷயம் பற்றியோ பேசக் கூடாது என்று சொல்வது பைத்தியக்காரத்தனமாக இல்லை? Sankarapandi, Get a Life!

மரத்தடியைப் பற்றி மற்ற நண்பர்களுக்கு ஒரு விளக்கம்: மரத்தடி குறித்து இவர்கள் என்னைப் பற்றிச் சொல்கிற கருத்துகளுக்காகவே, நான் அவர்கள் மீது அபாண்டமாகப் பொய் சொல்கிறார்கள் என்று நிரூபிக்க முடியும். ஆனால், மரத்தடி விஷயங்களை மரத்தடிக்கு வெளியே பேசுவதில்லை என்று இருக்கிறேன். மேலும் மரத்தடியில் என்ன நடந்தது என்பதை அறிந்த மரத்தடியின் மற்ற உரிமையாளர்கள் குமரேசன், பிரசன்னா, அப்போது இன்னொரு உரிமையாளராக இருந்த ஜெயஸ்ரீ (இப்போதும் இவர் மட்டுறுத்துனர்), மேலும் மரத்தடி ஆலோசனைக் குழுவின் பிற உறுப்பினர்களான, பரிமேலழகர், நம்பி, ப்ரியா சிவராம கிருஷ்ணன் என்று பலர் இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தெரியும். இவர்களில் ஒருவரும்கூட "மதி ஏன் மரத்தடியை விட்டுப் போனார்" என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்களை இன்னமும் பொதுவில் வைக்கவில்லை. அதனால் பழி சுமத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று நானும் சும்மா இருக்கிறேன். எனவே, மரத்தடியின் உரிமையாளர்கள் உண்மைகளைப் பொதுவில் வைக்கிற நாள்வரை இக்குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாமல் மட்டுமே நான் இருக்கப் போகிறேன். யாரும் என்னை காயப்படுத்திவிட முடியாது என்பதை நன்கறிந்தவன் நான். யாரும் என்னைக் காயப்படுத்திவிட முடியாது என்பதை நன்கறிந்த காரணத்தினாலோ என்னவோ, மரத்தடியின் மற்ற உரிமையாளர்களும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் கூட, என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முன்வந்து எந்தப் பதிலையும் அளிப்பதில்லை என்று நினைக்கிறேன். உண்மை என்றைக்கு வெளிவரப் போகிறதோ அன்றைக்கு என்மீது குற்றம் சொன்னவர்களின் பவுசு ஊருக்கும் உலகத்துக்கும் தெரிந்துவிடும். அப்போது, என் தரப்பையும் ஆதாரபூர்வமாக நானும் முன்வைக்கிறேன். இன்றைக்கும் சொல்கிறேன். மரத்தடியைப் பற்றி எந்தக் கேள்வி யாருக்கு இருந்தாலும் அதை வெளிப்படையாக மரத்தடியில் கேளுங்கள். யாரும் அதற்காக உங்கள் தலையை வாங்கிவிட மாட்டார்கள். ஆனால், நான் என்ன எழுதினாலும், அதில் மரத்தடியை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துவது சிறுபிள்ளைத்தனம்.

இந்த இழையில் இதுதான் என் முதலும் கடைசியுமான பதில். இவர்களுக்குப் பதில் சொல்வதைவிடச் செய்வதற்கு உருப்படியான வேலைகள் பல இருக்கின்றன. என் பதிவுகளைத் தொடர்ந்து படிப்போர் என்னை அறிவர். இதைப் படிக்க நேர்ந்ததற்காக என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

2 comments:

ஜெ. ராம்கி said...

என்னமோ போங்க... :(

-/சுடலை மாடன்/- said...

சுருக்கமாகவும் இறுதியாகவும்...

1. பி. கே. எஸ் தன் கடைசி பதிவில் நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், தரம் இழந்து வேறெங்கோ பின்னூட்டங்கள் இட்ட ராம் வாச்சர் எழுதியவற்றோடு கலந்து எழுதியதால், என் கேள்விகளை நீர்த்துப் போக வைக்க முயற்சித்திருக்கிறார். நான் கேட்ட கேள்விகளைப் படிக்க பி. கே. எஸ்ஸின் இந்தப் பதிவுக்குச் செல்லவும்.

http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post_20.html

2. அவர் குழப்பிய விசயங்களில் முக்கியமான ஒன்று -

//என்னைப் பற்றி எழுதியவர் யாரென்று கண்டுபிடிப்பதுதான் எனக்கு முக்கியம். அதை நான் செய்தென். ஊருக்கும் உலகுக்கும் நான் போலீஸ்காரன் அல்ல. என் வீட்டுக்குத் திருட வருகிற திருடனை பிடிக்க முடிந்தால் பிடித்துத் தருவேன். அதற்காக, ஊரில் உலகில் இருக்கிற திருடர்களை எல்லாம் பிடித்துத் தா என்று கேட்பது அபத்தம்.//

சரி சங்கரபாண்டியையும் மற்றவர்களையும் பற்றி அசிங்கமாக எழுதியவர்களை விட்டு விடுங்கள். அது தேவையுமில்லை. ஆனால் உங்களைப் பற்றியும், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பற்றியும் அசிங்கமாக ஸ்ரிகாந்த் பதிவில் எழுதியவர்களின் இணைய எண்ணை வெளியிடலாமே. அப்படியல்லாவிடின் உங்களுக்கு எதிராகவும், ஜார்ஜ் ஹார்ட்டுக்கு எதிராகவும் நீங்களோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களோ எழுதிக் கொண்டீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் அதைச் சாக்காக வைத்து என்னையும், ஈழத்தமிழர் அனைவரையும் அசிங்கமாக எழுதியுள்ளார். ஐ.பி. கண்டுபிடிக்கும் விவரங்கள் எனக்குத் தெரியாது. ஸ்ரீகாந்துக்குத் தெரிந்தால் அவர் வெளியிடாமல் இருக்க மாட்டார்.


3. அவர் குழப்பிய விசயங்களில் முக்கியமான இன்னொன்று -
//ரோசா வசந்த்கூட சிலரை பாஸ்டர்ட்ஸ் என்று திட்டி எழுதியிருக்கிறார். அதில் நானும் இருக்கலாம். எனக்கு அவையெல்லாம் கொள்கை முடிவெடுக்க உதவுகிற காரணி இல்லை. கோபத்தில் ஆயிரம் பேர் ஆயிரம் பேசுகிறார்கள். அதை மீறி என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்க்கிற மனப்பக்குவம் எனக்கு வந்துவிட்டது. நான்கெழுத்து ஆங்கில வார்த்தையை உபயோகிக்காத சராசரி அமெரிக்கர்கள் அதிகம் இல்லை என்று நான் இங்கே பார்க்கிறேன்.//

ஆங்கிலத்தில் "பாஸ்டர்ட்" என்றும், தமிழில் "தேவடியா பயல்" என்றும் கெட்ட வார்த்தைகள் பிரயோகிக்கப் படுகின்றன என்றும், அதை பிரயோகிப்பவர்கள் பலர் அதன் அர்த்தத்துக்காக உபயோகிக்காமல், கோபத்தில் ஆத்திரமிழந்து நிந்திப்பதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். அப்படி ஒரு "politically incorrect" கெட்ட வார்த்தையாக பி.கே.எஸ். பயன் படுத்தவில்லை. "தந்தை பெயர் அறியாத தனயர்கள்" என்று கவிதை நடையில் அதன் அர்த்தத்துக்காகவே தெளிவாகத் தெரியுமாறு பயன் படுத்தியுள்ளார். அதன் அடுத்த வரியில் "ஆண்மையின் எந்த வீரியமும் இல்லாதவர்கள்" என்று வேறு திட்டுகிறார். அகத்தில் உள்ளதுதான் புறத்தில் வருகிறது.

இறுதியாக ---

//எல்லா இடங்களிலும் எப்படிப்பட்ட கருத்தாக இருந்தாலும் என் சொந்தப் பெயரில் எழுதுவேன் அல்லது வாயை மூடிக் கொண்டிருப்பேன். அதுதான் என் வழக்கம்.//

இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் உண்மையிலேயே நடப்பதில்லை என்பதுதான் தமிழ் மணத்துக்கு வந்த கேடு. அதிர்ச்சிக்குள்ளான செய்தி என்னவென்றால் மேதாவித்தனமாக எழுதும் பலர் மோசமாக எழுத நினைக்கும் பொழுது மட்டும் அனாமத்துப் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது. நீங்கள் அதற்கு விதிவிலக்கல்ல என்று நான் பேசிய சில நண்பர்களுக்கு அந்த சந்தேகம் உண்டு.

அப்படி இல்லையெனில் உங்களுக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தை ஒரு பதிவாகப் போடுங்கள். எல்லோருமே அதைத் தெரிந்து கொண்டால் அசிங்கமாக எழுதும் அனானிக் கூட்டம் ஒழிய வாய்ப்பு உள்ளது. வீண் சந்தேகங்களையும், சண்டையையும் தவிர்க்கலாமே. மதமோ, சாதியோ அல்லது வேறு எந்த அடையாளமோ தங்களுடைய சொந்தப் பெயரில் எழுதினால் இந்த அளவுக்கு அசிங்கமாக எழுத மாட்டார்கள். உண்மையிலே உங்களுக்கு ஆரோக்கியமான விவாதத்தின் மேல் நம்பிக்கை இருந்தால் நீங்கள் பயன் படுத்திய தொழில் நுட்பத்தை ஒரு பதிவாகப் போடுங்கள்.

அனாமத்துப் பெயர்களில் வந்து அசிங்கமாக பின்னூட்டமிடும் நபர்கள் (இதில் அரசியல், சாதி, மொழி, மதம் இனம் என்றெல்லாம் இல்லை, எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள்) இருக்கும் வரை இதுதான் வலைப் பதிவுகளில் என்னுடைய கடைசிப் பின்னூட்டம். அடக்க முடியாவிட்டால் தனிப் பதிவு ஆரம்பிக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி