Thursday, October 27, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - II

சு.ரா.: ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லணும்னா - அவனுக்கு அவமான உணர்ச்சி இல்லை. நான் ரொம்ப அவமானப்படறேன். இந்த பீலிங் எனக்கு எப்படி வந்தது? நான் டைமை ரியலைஸ் பண்றதாலேதான் இந்த பீலிங் வருது. எங்க போனாலும் எனக்கு அவமானம்தான் இருக்கு. நான் என்றால் நான் இல்லை. என்னுடைய லாங்வேஜுக்கு. என்னுடைய கல்ச்சருக்கு.

(தொடர்ந்து சு.ரா. அமெரிக்காவில் தான் சந்திக்க நேர்ந்த ஒரு தமிழரைப் பற்றி உதாரணமாக விளக்குகிறார். அவரைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்று வந்திருந்தவர்களில் ஒருவர் சொல்கிறார். உடனே, சு.ரா. சிரித்தபடியே "நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க" என்கிறார். சு.ரா.வின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த உதாரணமும், அது குறித்த உரையாடல்களும் கொடுக்கப்படவில்லை.)

ராஜாராம்: This is a bigger problem than this. If the problem is if that person mentioned is having an opinion about Tamil books, then it is ok. ஏன்னா, அவங்க தன்னோட வேலையைப் பார்த்துட்டு - கூட இந்த மாதிரி ஒரு ஒபினியன் மட்டும் வைச்சிருக்காங்க. But, அதுமாதிரி ஆட்கள்தான் - இன்னைக்கு ஒபினியன் மேக்கர்ஸா தமிழ்நாட்டுல இருக்காங்க. அதைத்தான் சு.ரா. சொல்கிறார். அவங்கள மாதிரி disconnected with the presentதான் தமிழ்நாட்டுல இருக்கு என்கிறார்.

துக்காராம்: நீங்க அப்படி பீல் பண்றதுக்கு மெயின் காரணம் - சிறுபத்திரிகை உலகத்துக்கும் இன்றைய தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிற ஒரு பெரிய gap-ஐ பீல் பண்றதாலே அப்படி சொல்றீங்கன்னு நினைக்கறேன்.

சு.ரா.: அந்த ரீசன் மட்டுமே சொல்லலை. பாலிடிசியன்ஸ்கிட்டே பேசினாலும் சரிதான், ரிலிஜியஸ் பீபுள் கிட்டே பேசினாலும் சரிதான், ஸ்காலர்ஸ் கிட்டே பேசினாலும் சரிதான். யார்கிட்டே பேசினாலும் சரிதான். கோயம்பத்தூரிலே சமீபத்திலே ஒரு சாமியாரைப் பார்த்தேன். அவர் பேரு ... (யோசிக்கிறார்.) சரி, பேர் முக்கியமில்லை. ஆனா, அவர் டைம் தெரிஞ்சவரா இருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரைப் பாத்ததுலே ஒரு வேர்ல்ட் டைம் அவருக்குத் தெரியுது. என்னோட டைம் பன்னிரண்டரை. வேர்ல்ட்ல எல்லா இடத்திலும் பன்னிரண்டரை அல்லன்னு அவருக்குத் தெரியுது. இது ஒரு சிம்பிள் விஷயம். தமிழ்நாட்டுல எனக்குத் தெரிஞ்சு ஒருத்தனுக்காவது டைமுக்கும் அவனுக்கும் உள்ள ரிலேஷன் தெரில. அந்த மாதிரி ஒரு இன்டாக்ஸிகேஷன். அந்த இன்டாக்ஸிகேஷன்ல இருந்து அவன் வெளியே வந்து - கண்ணைத் திறந்து - பார்த்தால்தான் - நாம எவ்ளோ பின்னால் இருக்கிறோம் என்று தெரியும்.

பி.கே. சிவகுமார்: இப்படிப்பட்டவங்களுக்குப் புத்தகம் எழுதும்போதுதானே, "விமானம் என்றால் பறக்கற விஷயம்"னு எழுதணும். (பார்வையாளர்கள் சிரிப்பு). அப்படி எழுதினாத்தானே அவங்களுக்குப் புரியும்? அப்படி எழுதறது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும் நாம? உதாரணமா, இந்தியாவிலே விமானத்தையே நேரில் பார்க்காதவங்க எத்தனையோ பேரு இருக்காங்களே.

சு.ரா.: நீங்க அப்படி எழுதுங்க. ஆனால், அப்படித்தான் தமிழன் என்று நீங்கள் assume பண்ணக்கூடாது. ஏனென்றால், கொஞ்சம் சங்கடப்படணும் அவன். சங்கடப்பட்டால்தான் முன்னுக்கு வரமுடியும்.

துக்காராம்: அதான், மனுஷனுக்கு அவமான உணர்வே இல்லை என்கிறார் சு.ரா.

சு.ரா.: இப்ப நான் காசு கொடுத்து வாங்கிய புத்தகம் எதுவும் முதலில் படிச்சா எனக்குப் புரியாது. அதற்கான தகுதி எனக்கு இல்லை. ஆனால் கொஞ்ச கொஞ்சமா சிரமப்பட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கும். ரொம்ப கசங்க வேண்டியிருக்கும். இந்த மாதிரி பிரச்னை தமிழனுக்கு இல்லை இன்னைக்கு. தமிழில் வந்து - இந்த டிரெடிஷன் இருக்கே அது ஒரு பெரிய இன்டாக்ஸிகேஷன். அப்படித்தான் அவன் பாக்கிறான் தமிழை.

சாரதா: ஸ்கூல்லே தமிழ் மீடியத்திலே தமிழ் நல்லா சொல்லித்தராங்களா?

சு.ரா.: தமிழ்நாட்டுலே யாருமே தமிழ் படிக்கறது கிடையாது.

துக்காராம்: அறிவியல் புத்தகம்பற்றிச் சொன்னீர்கள். எனக்கு என்ன குழப்பம் என்றால், நான் 12-ஆம் வகுப்புவரை முழுமையாகத் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன். அதில் கணக்கு வாத்தியார் குத்துமதிப்பாகப் பாடம் நடத்துவார். அவருக்கே கால்குலஸ் புரிந்து நடத்தினாரா என்று தெரியாது. அதனால் நான் என்ன பண்ணேன்னா - காமராஜர் நூலகம்னு திருச்சில ஒண்ணு இருக்கு. அங்கே நிறைய புக்ஸ் இருக்கு. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட புத்தகங்கள். அப்போது அவற்றில் நெடுஞ்செழியன் முன்னுரையில் கையெழுத்திட்டிருப்பார். எல்லாம் தமிழ்ப் புத்தகங்கள். அதுல ரெண்டு மூணு நல்ல புக் இருந்தது. அவற்றைப் படித்துதான் கால்குலஸ் என்றால் என்னவென்று நான் தெரிந்துகொண்டேன். நீங்க அந்த புக்கெல்லாம் தமிழ் ஸ்கூல்லே சொல்லித் தரல என்னும்போது எனக்குப் புரியல. அதனால்தான் இதைச் சொல்றேன்.

பார்னி: The big problem in Tamil Nadu is the elite in Tamil Nadu is losing literacy because they are sending their kids to "English Matriculation" schools.

ராஜாராம்: இந்தப் பிராப்ளம் எல்லாம் பெங்கால், கர்னாடகா, மகாராஷ்டிராவிலே இல்லை. அங்கெல்லாம் அம்மாநில மொழியைப் படிக்காமல் நீங்கள் பட்டம்பெற முடியாது. தமிழ்நாட்டுலே தமிழே படிக்காமல் நீங்கள் கிராஜுவேட் ஆகலாம். சில ஸ்கூல்ஸ்ல தமிழ்ல பேசினாலே fine போடறாங்க. தப்புத்தப்பா என்றாலும் இங்லீஸ்லதான் பேசணும்.

சு.ரா.: தமிழே நீங்கப் படிக்காம டாக்டரேட் வாங்கலாம். பின்ன என்ன? மு.வ.வே இங்லீஸ்லதானே எழுதியிருக்கார். அவர் தீஸிஸை இங்லீஸ்லதான் எழுதியிருக்கார். But, அப்புறம்தான் தமிழில் ட்ரான்ஸ்லேட் பண்ணார். அவர் பீரியட் வரைக்கும் உங்க தீஸிஸை இங்லீஸில்தான் எழுதணும்னு இருந்தது. இதுக்கு நீங்க என்ன புரட்சி பண்ணீங்க.

ராஜாராம்: Now, I will propose something. Lets have a question answer session with Su.Ra. about his works and...

சு.ரா.: இதுவே நல்லா இருக்கே ராஜாராம். எனக்கும் கொஸ்சன் கேக்கறதுக்கு ஒரு opportunity இருக்கே. (சிரிக்கிறார். பார்வையாளர்களும் சிரிக்கிறார்கள்.)

ராஜாராம்: அது நீங்க கேக்கலாம். அதுல பிரச்னை இல்லை.

அண்ணாமலை: தமிழ்நாட்டுல சங்க இலக்கியத்துல ஸ்பெஷலைஸ் பண்ண ஒரு ஆளைக் கண்டுபிடிப்பது என்றால் கஷ்டம்.

சு.ரா.:: உங்களுக்கு அந்தக் கோயம்பத்தூர் சாமியாரத் தெரியலையா. இங்கே எல்லாம் வந்திருக்கார்...

சாரதா: யார் அது? அந்த ஆதிபராசக்தி சாமியாரா?

சு.ரா.: நோ நோ நோ. அவங்க எல்லாம் ரொம்ப out-of-date. இவர் இங்க எல்லாம் வந்து - அவாளுக்கு முக்கியமான பிஸினஸ் இங்கதானே!

ராஜாராம்: ஜக்கி வாசுதேவா?

சு.ரா.: ஆம். அவர்தான். அவர்கிட்டே நான் பேசின உடனே - எனக்கு அவரோட ஐடியாஸ் எதுவும் ஒத்துக்க முடியாட்டாகூட, அவர் எந்தக் காலகட்டத்துலே வாழறோமோ அதுக்கேற்ப வாழ்ந்துட்டு இருக்கார். அதற்குதக்க யோசனைகள், சிந்தனைகள் எல்லாமே அவருக்கு இருக்கு.

துக்காராம்: சுவாமி சின்மயானந்தானு ஒருத்தர்... பாத்து இருப்பீங்களே.

சு.ரா.: பார்த்து இருக்கேன். அவர் ரொம்ப பழைய ஆள். காலமாயிட்டார். கேரளாகாரர். பெரிய வாயாடி (கூட்டத்தில் சிரிப்பு) இல்ல இல்ல, ரொம்ப நல்லா பேசுவார்.

துக்காராம்: நான் ஒரு இங்லீஸ் லெக்சர் கேட்டு, அது புரிந்தது அவர்கிட்டதான்.

சு.ரா.: ஆமா ஆமா.

டெக்ஸன்: பகவத் கீதைக்கு நிறைய அவர் உரை எழுதியிருக்கார்.

சு.ரா.: எக்கச்சக்கமா புஸ்தகங்க எழுதியிருக்கார். (கொஞ்சம் யோசித்துவிட்டு) நான் என்ன சொல்றேன்னா, ரியாலிட்டிவோட நமக்கு கான்டாக்ட் கொஞ்சம் வீக்கா இருக்கு.

ராஜாராம்: இருமொழி திட்டத்தினாலே என்ன பண்ணாங்கன்னா - they did not know the consequences. மும்மொழி திட்டத்திலே - you can make Tamil compulsory. இருமொழி திட்டத்திலே அதைப் பண்ண முடியாது. ஏன்னா, you can choose only two languages.

அண்ணாமலை: தமிழ்ப் படிக்க வர்றவங்களுக்கும் என்ன மாதிரி தமிழ் சொல்லித் தராங்கன்னு பார்த்தா, இந்தக் காலத்துக்கு உதவற மாதிரி தமிழைச் சொல்லிக் கொடுக்கறது இல்லே. தமிழை எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்பது ஒரு பெரிய பிரச்னை.

முருகானந்தம்: What Su.Ra. mentioned is a very philosophical comment. I think, if you want to modernize, the basic pre-requisite is that you have to find fault with it. Then you explore whatever field you are in.

சு.ரா.: ஆமாம்.

சு.ரா.: (சாரதாவைப் பார்த்து) அம்மா சொல்றாங்க. தமிழர்கள் மெட்டீரியலிஸ்ட் ஆயிட்டாங்களா என்று. அவங்க மெட்டீரியலிஸ்ட் ஆயிட்டாங்கன்னா, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, அவங்க மெட்டீரியலிஸ்ட் இல்லை. மெட்டீரியலிஸ்டா இருந்தா, இந்த "அம்மா"வோட ஆட்சியை (ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார்.) ஒருநாள் தாங்குவாங்களா? எப்படித் தூக்கி எறிஞ்சி இருப்பாங்க. கண் முன்னாலே நடக்கற விஷயங்களைக்கூட அவங்களுக்குப் பாக்க முடியலியே. எது அவங்களைத் தடுக்குது?

துக்காராம்: அது இல்லீங்க. கருணாநிதி ஆடுற ஆட்டம் தாங்கலைன்னுதான் எல்லாரும் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடறாங்க. ஜெயலலிதா மேல யாருக்கும் பாசம் கிடையாது. They dont have any viable alternative for Karunanidhi.

சு.ரா.: அப்படிச் சொல்ல முடியாது. கருணாநிதி ஒரு நல்ல பாலிடிஷியன் இல்லை. ஆனா, கருணாநிதியை நல்ல பாலிடிஷியன் ஆக்கக் கூடிய அளவுக்கு இந்த அம்மா மோசமானவங்க. (கூட்டத்தில் சிரிப்பு) வேற யாராலயும் அதைச் செய்ய முடியாது. இந்த அம்மா அதைச் செய்திருக்காங்க.

துக்காராம்: அதே மாதிரி, ஜெயலலிதாவை நல்ல பாலிடிஷியன் ஆக்கக் கூடிய தகுதியும் கருணாநிதிக்குதான் உண்டுன்னு நெனைக்கிறேன்.

சு.ரா.: கேரளாவுலே இது நடக்குமா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. உங்க பக்கத்து மாநிலத்திலே - ஜெயலலிதா மாதிரி ஒரு அம்மா வரமுடியுமா? தூக்கி எறிஞ்சிடுவாங்க. 24 மணி நேரத்திலே தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த ஆட்டங்கள் ஏதாவது அங்க நடக்குமா பாருங்க. நம்ம ஊருக்குப் பக்கத்துல இருக்கற பல இடங்களில் இந்த மாதிரி ஆட்டம் போட முடியாது. அப்படின்னா - இங்க மட்டும் ஆட்டம் போட முடிவதற்கான காரணங்கள் என்ன? அந்த rootsதான் மிக முக்கியமானது. அதை உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா? அப்போதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

துக்காராம்: திராவிட இயக்கம்.

டெக்ஸன்: நமக்கு ஜாஸ்தி சொரணை கிடையாது.

சாமிநாதன்: தமிழ் கல்ச்சரிலேயே அது இருக்கலாம்.

சு.ரா.: ஐயோ, உங்க கல்ச்சர்லே திரும்பத் திரும்ப இந்த விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. உங்க கல்ச்சர் மாதிரி திரும்பத் திரும்ப ஜனங்களுக்காக வாழ்ந்த, பொய் சொல்லாதே, திருடாதே, லஞ்சம் வாங்காதே அப்படீன்னு இரண்டாயிரம் வருஷமா சொல்லப்பட்ட கல்ச்சர் வேற எதுவுமே கிடையாது. Continuous-ஆ சொல்லப்பட்டிருக்கு.

சாமிநாதன்: அது எல்லாம் இருந்ததாலதான், செய்யாதே அப்படீன்னு இரண்டாயிரம் வருஷமா சொல்லிட்டு இருந்தாங்களோ?

ராஜாராம்: இப்ப எல்லா கல்ச்சரிலும் லஞ்சம் இருந்தாலும், அதனுடைய attributes எப்படி இருக்கு என்பது இருக்கு இல்ல. இப்ப வந்து தமிழ்நாட்டுல இது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நிலை ஆயிட்டது. தமிழ்நாட்டுல லஞ்சம் என்பது does not even raise an eyebrow.

சு.ரா.: லஞ்சம் தமிழ்நாட்டுல இப்ப எப்படி இருக்கு என்பது முக்கியமான விஷயம். நீங்க லஞ்சப் பணத்தைக் கையாலேயே தொட வேணாம். சாயங்காலம் அஞ்சு மணிக்கு அவங்க அவங்களுக்கு என்ன ஷேரோ, அது சுத்தமா கைக்கு வந்து சேந்திடும். நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம். வரவங்களுக்கு என்ன காரியம் பண்ணனுமோ அதை நீங்க பண்ணினா போதும். சாயங்காலம் அஞ்சு மணிக்கு உங்க ஷேர் உங்களுக்கு வந்திடும். நீங்க கையால லஞ்சம் வாங்கறதே கிடையாது.

அண்ணாமலை: லஞ்சத்தை நல்லா டெமாக்ரடைஸ் பண்ணிட்டாங்க.

சு.ரா.: ஆமா. அது முக்கியமான விஷயம். ஒரு ஆள் கஷ்டப்படறான். வயத்துக்கு இல்ல அல்லது பொண்டாட்டிக்குப் பொடவை வாங்கிட்டுப் போக நினைக்கிறான். அதுக்காக லஞ்சம் வாங்கறான். அப்படி எதுவும் இல்ல. இன்னொன்னு சொல்றாங்க. லஞ்சம் வந்தபிறகு காரியம் நடக்குது. முன்னாலே நடக்கவே இல்ல என்கிறாங்க. இது அடுத்த ஸ்டெப். முன்னால கவர்மென்ட் ஆபில்ஸ்ல காரியம் நடக்காதாம். அது உண்மை. efficiency வந்திருக்கு.

அண்ணாமலை: அது இந்த நாடு மாதிரி வைக்கணும். பணம் கூட இருக்கறவங்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் இந்த நாட்டுல உண்டு. but, it does not affect service for others.

ராஜாராம்: லஞ்சம் எல்லா இடத்திலும் இருக்கு. இங்கே ஒரு கவர்னர் - யாரோ ஒரு காண்ட்ராக்டர் fixed his home. அவரைப் பிடிச்சிட்ட்டாங்க.

சு.ரா.: இங்க higher level-ல எவ்ளோ வேணும்னா லஞ்சம் இருக்கலாம். ஆனா, lower level-ல கிடையாது. லஞ்சம் இருக்கா இல்லையா என்பதில்லை. ஒரு ஆபிசுக்குள்ளே நுழைஞ்சதுமே, ஒரு மனுஷன் உள்ளே வந்திருக்கான் அப்படீன்ற எண்ணம் இந்த கன்ட்ரிலே இருக்கு. இந்தியாலே கிடையாது. ஸ்டூலை ஒளிச்சி வெச்சுக்கறான் சார். அங்கே உட்காரக் கூடாதுன்னு. முக்கியமான ஆளுங்க வந்தாதான் ஸ்டூலை எடுத்து வருவான்.

அண்ணாமலை: Information is money என்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உண்மை. ஒரு சின்ன இன்பார்மேஷன் கேட்டாலும், பணம் கொடுத்தாதான் கிடைக்கும்.

சு.ரா.: அப்புறம் நீங்க போய் நீங்களே அவன் முன்னாலே உட்கார்ந்துட்டீங்கன்னா, உங்க வேலை நடக்காது.

ராஜாராம்: ஓ! அதெல்லாம் Casteism. Hierarchy!

முருகானந்தம்: எந்த ஆபிஸ் போனாலும் அவமானப்படாம நீங்க வந்தீங்கன்னா அது பெரிசு. அன்னிக்கி நீங்க லக்கி.

சு.ரா.: கரெக்ட்

அண்ணாமலை: இந்தியாலே பணம் கொடுப்பதால் you get things faster என்பது சரியில்லை. You infact slow down what other people get by it. Thats what happens.

சு.ரா.: எனக்காக அவன் செய்ய வேண்டிய காரியத்தை, எனக்கு அவன் உபகாரம் செய்யறதா நினைக்கிறான்.

அண்ணாமலை: தமிழை ஆட்சி மொழியா கொண்டு வரோம் என்கிறோம். அதுக்கு ஒரு முக்கிய காரணம் - மக்களின் மொழியைக் கொண்டு வந்தால், government will become transparent, government will become friendly. Thats the basic point in bringing people's language into the government. But nothing has changed. Only Tamil is used. But the same arrogance ets exists. Then, what is the point in making Tamil official language?

சு.ரா.: இப்ப தமிழ் கிளாசிகல் லாங்வேஜ் ஆனவுடனே, அதை எக்ஸ்ப்ளாய்ட் பண்ற ப்ரோகிராம் எல்லாத்தையும் தமிழ்நாட்டுல யோசிச்சிட்டு இருப்பான்.

சு.ரா.: (அண்ணாமலையைப் பார்த்து) நீங்க சொன்ன ஒரு பாயிண்ட் ரொம்ப கரெக்ட். எனக்கு முதலிலேயே அந்த பாயிண்ட் இருந்தது. ஆனா, அதைச் சொல்ற தைரியமில்லை. நீங்க உங்க தமிழ் பேக்கிரவுண்டிலே அதைச் சொல்லிட்டீங்க. அதாவது, தமிழ் தமிழ்னு சொல்லிட்டு - எதுவுமே செய்யாம ஐம்பது வருஷமா இருந்த குற்றவுணர்ச்சி இருக்கே. அதைத் தீர்த்துக்கறாங்க - இந்த கிளாசிகல் லாங்வேஜ் விஷயத்துலே. தமிழுக்காக எதுவுமே செய்யலை. சி. சுப்ரமணியம் செய்ததுகூட செய்யலை. பக்தவச்சலம் செய்தது கூட செய்யலை. காமராஜ் செய்ததுகூட செய்யலை. சி. சுப்ரமணியம், பக்தவச்சலம் எல்லாம் அவங்களுக்குத் தமிழ் தொடர்பே கிடையாது. அவங்க எல்லாம் வேற பேக்கிரவுண்டிலே இருந்து வந்தவங்க. அவங்க செஞ்ச காரியம் கூட செய்யலை.

அண்ணாமலை: தமிழ் செம்மொழி ஆனதால் தமிழர்க்குப் பெருமை என்கிறார்கள். உண்மை. ஆனால், இந்தப் பெருமையினால் தமிழுக்கு என்ன வருதுன்னு நாம பார்க்கணும் இல்லையா? தமிழ் பெருமையான மொழி என்பதால் ஒரு சதவீதமாவது தமிழ் மீடியத்துக்கு அனுப்பினார்கள் என்றால் தமிழைப் புரிந்து நடக்கிறார்கள் என்று அர்த்தம்.

முருகானந்தம்: அவங்க பசங்க எல்லாம்தான் இங்லீஸ் மீடியத்திலே முதல்லே படிக்கறாங்களே.

சு.ரா.: ஒரு விஷயம். உங்களுக்குத் தெரியுமா தெரியலை. தமிழ்நாட்டுல ரெண்டு விஷயம் நான் தெளிவாப் பாத்து இருக்கேன். ஒண்ணு, நாங்க ஜாதியை விடமாட்டோம். கடைசிவரை விட மாட்டோம். இது மேல இருந்து கீழே வரை எல்லாருக்குமே ஸ்ட்ராங்கா இருக்கு. இரண்டாவது, எங்கக் குழந்தைகள் பொழைக்கணும்னா, அதுங்க தமிழ் படிக்கக் கூடாது. (கூட்டத்தில் சிரிப்பு). இதுல வந்து ஜனங்கள் ரொம்பக் கிளியரா இருக்காங்க. எங்க வீட்டைச் சுற்றி ஒரு பத்து அம்மாக்கள் இருக்காங்க. ஒருத்தி சாப்பாடு கொண்டு வரவங்க, ஒருத்தி வீட்டுல வேலை பாக்கறவங்க, ஒருத்தி கறிகாய் விக்கறவங்க. இப்படி. நான் இவங்க எல்லார்கிட்டேயும் டீடெய்லா பேசியிருக்கேன். ஒருத்திக்காவது தன் குழந்தையை தமிழ் ஸ்கூலுக்கு அனுப்பனும் என்கிற எண்ணம் கிடையாது. செத்தாலும் சரி, நாங்க சாப்பிடாம செத்தாலும் சரி, நாங்க இங்லீஸ் மீடியம் ஸ்கூலுக்குத்தான் அனுப்புவோம். அப்போதான் எங்க குழந்தைகள் பிழைக்கும் என்கிறாங்க.

ராஜாராம்: மிடில் க்ளாஸ்தான் அந்த மாதிரி ஒரு வேல்யூவை உண்டு பண்ணியிருக்கு.

(தொடரும்)

4 comments:

Srikanth Meenakshi said...

//தொடர்ந்து சு.ரா. அமெரிக்காவில் தான் சந்திக்க நேர்ந்த ஒரு தமிழரைப் பற்றி உதாரணமாக விளக்குகிறார். அவரைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்று வந்திருந்தவர்களில் ஒருவர் சொல்கிறார். உடனே, சு.ரா. சிரித்தபடியே "நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க" என்கிறார். சு.ரா.வின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த உதாரணமும், அது குறித்த உரையாடல்களும் கொடுக்கப்படவில்லை.//

Nicely done...

//e big problem in Tamil Nadu is the elite in Tamil Nadu is losing literacy because they are sending their kids to "English Matriculation" schools.//

இதை அவர் தமிழில் சொல்லியிருக்கலாமோ? :-)

Arun Vaidyanathan said...

Very GOOD work PKS.
I believe you are more interested in action than saying blah blah. When most of people are just 'talking' literature, Forward thinking without doing anything for it...you took pain in compiling all these things in a nice format. Great..Very interesting!

This is a nice way of paying respect to Mr.Su.Ra. (This triggers me to read his novels and short stories..will do soon)

Boston Bala said...

பிடித்த கருத்துக்கள்:

ராஜாராம்: இருமொழி திட்டத்தினாலே என்ன பண்ணாங்கன்னா - they did not know the consequences. மும்மொழி திட்டத்திலே - you can make Tamil compulsory. இருமொழி திட்டத்திலே அதைப் பண்ண முடியாது. ஏன்னா, you can choose only two languages.

சு.ரா.: கேரளாவுலே இது நடக்குமா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. உங்க பக்கத்து மாநிலத்திலே - ஜெயலலிதா மாதிரி ஒரு அம்மா வரமுடியுமா? தூக்கி எறிஞ்சிடுவாங்க. 24 மணி நேரத்திலே தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த ஆட்டங்கள் ஏதாவது அங்க நடக்குமா பாருங்க. நம்ம ஊருக்குப் பக்கத்துல இருக்கற பல இடங்களில் இந்த மாதிரி ஆட்டம் போட முடியாது. அப்படின்னா - இங்க மட்டும் ஆட்டம் போட முடிவதற்கான காரணங்கள் என்ன? அந்த rootsதான் மிக முக்கியமானது. அதை உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா? அப்போதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

சு.ரா.: இங்க higher level-ல எவ்ளோ வேணும்னா லஞ்சம் இருக்கலாம். ஆனா, lower level-ல கிடையாது. லஞ்சம் இருக்கா இல்லையா என்பதில்லை. ஒரு ஆபிசுக்குள்ளே நுழைஞ்சதுமே, ஒரு மனுஷன் உள்ளே வந்திருக்கான் அப்படீன்ற எண்ணம் இந்த கன்ட்ரிலே இருக்கு. இந்தியாலே கிடையாது. ஸ்டூலை ஒளிச்சி வெச்சுக்கறான் சார். அங்கே உட்காரக் கூடாதுன்னு. முக்கியமான ஆளுங்க வந்தாதான் ஸ்டூலை எடுத்து வருவான்.

Gurusamy Thangavel said...

Dear Mr. PKS,
Thank you very much for publishing SuRa's Interview. Hats off to you.

Thangavel