Wednesday, November 02, 2005

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - III

அண்ணாமலை: மிடில் க்ளாஸ்தான். மிடில் க்ளாஸ்தான் மாடலா இருக்காங்க. They think ... (நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேச முயல்கின்றனர். அண்ணாமலை தொடர்ந்து சொல்வது சரியாகப் பதிவாகவில்லை.)

ராஜாராம்: ஆமாம். மிடில் க்ளாஸ்தான். இப்போ சாமிநாதனை வேலைக்காரி பார்க்கும்போது இவர்மாதிரி நான் வரணும்னா என்ன பண்ணனும்னு - இவர் இங்லீஸ் பேசறார், இங்லீஸ் படிக்கறார் அப்படீன்னா - தன் குழந்தைகளும் அப்படி இருக்கணும்னு நெனைக்கும் இல்லையா?

சு.ரா.: அப்படீன்னு நீங்க சொல்றீங்க. எந்தப் ப்ரோகிராமும் நடைமுறைல collapse ஆயிட்டாக்க, மனுஷாள் அதை continue பண்ண முடியாது. நான் இப்போ உங்களை நம்பி இங்கே வரேன். நீங்க எல்லாம் சேர்ந்து என்னை ஒரு மொத்து மொத்திட்டேள்னா, நான் திரும்ப உங்ககிட்டே வரமாட்டேன். (கூட்டத்தில் சிரிப்பு) அந்த அறிவு எனக்கு உண்டு சார். அந்த அறிவு எனக்கு உண்டு. அப்போ - தமிழ்நாட்டுல - குழந்தை தொடர்ந்து இங்லீஸ் மீடியத்துக்குப் போறதுன்னா, அவங்க சைடுல ஏதும் நியாயம் இருக்கான்னு நீங்க கொஞ்சம் யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. கருணாநிதி தமிழ் மீடியம் கொண்டு வரணும்கறதுக்குப் பயப்படறார். ஏன்னா, அவருக்கு ஓட்டுப் போயிடுமோன்னு பயமா இருக்கு.

துக்காராம்: அதைவிடப் பெரிய விஷயம் என்ன தெரியுமா? கருணாநிதி வந்து அப்படிப் பேசிட்டு, தன் பிள்ளைகளை இங்லீஸ் மீடியத்திலயும் ஹிந்தி மீடியத்திலயும் சேர்க்கறதாலதான், மக்கள் அதையே ஒரு tool-ஆ use பண்றாங்க. "கலைஞரே புள்ளையை அனுப்பறார். நாங்க மட்டும் ஏன் அனுப்பக்கூடாது"ன்னு.

அண்ணாமலை: கலைஞருக்கு மட்டும் இல்லை. பொதுவாகவே தமிழ்நாட்டுல our public posture is different from our private choice. (சு.ரா. சிரிக்கிறார்.) இப்போ private choice-னு வரும்போது கல்யாணமோ, ஜாதியோ எதுனாலும், public-ல ஜாதி வேணாம்னு எல்லாரும் பேசுவாங்க. ஆனா, private life-க்கு வரும்போது வேற மாதிரி. அதே மாதிரி நாங்க சர்வே எத்தனையோ பண்ணியிருக்கோம். அந்த சர்வேல தமிழ் மீடியம் வேணும்னுதான் மெஜாரிட்டி சொல்வாங்க. ஆனால், குறிப்பா உங்க பிள்ளையை எங்கே அனுப்புவீங்கன்னா, வேற மாதிரி பதில் வரும். பொதுவா - தமிழ் மீடியம் வேணுமான்னா, வேணும், வேணும், வேணும். Symbolic-ஆ சொல்லும்போது எல்லாம் ஒத்துக்குவாங்க. ஆனால், private action-னு வரும்போது we behave differently.

முருகானந்தம் & டெக்ஸன்: ஆமா, ஆமா.

சாரதா: In all, it looks like, the mental health is not right. ஒரு ஆரோக்கியமான எண்ணங்களும், ஆரோக்கியமான வாழ்க்கையும் வாழற அளவுக்கு - forget about Tamil - இல்லையோ? mental health நல்லா இருந்தால் தமிழ்கூட அப்போ நல்லா வருமா?

அண்ணாமலை: Mental Health-னு நான் சொல்ல மாட்டேன் because I believe every humanbeing is rational. They take rational decisions. அவங்க நினைக்கறது that is true also. English opens many doors. இல்லையா? அவங்க நினைக்கறது - ஏன்னா அவங்க நம்மளையெல்லாம் பாக்கறாங்க - "இவங்க வெளிநாட்டுக்குப் போறாங்க. அங்க போய் பணம் பண்றாங்க." அதனால இங்லீஸ் இல்லாம இருக்க முடியாது. அது மாதிரி நம்ம புள்ளைகளையும் வளர்த்துடலாம்னு நினைக்கறாங்க. அத நாம மாத்தணும்னா, தமிழ்மூலம் அவங்களுக்கு என்ன economic benefit இருக்கு? What doors Tamil opens to them-னு ஒண்ணு வரணும். When they see Tamil closes all doors and English opens all doors then they will naturally go for English. I will go, you will go, everybody will go. I mean, man is not self-destructive.

சாரதா: அப்போ நீங்க சொல்றது பார்த்தா, இதுல தப்பு இருக்கற மாதிரி தெரியலையே.

அண்ணாமலை: நான் individual-கிட்டே தப்பு இருக்குன்னு சொல்ல மாட்டேன். நம்ம society-ல தப்பு இருக்கு. Society-ல நம்ம language priority தப்பா போச்சு. அதனாலதான் ஜனங்க பண்றாங்க.

சாரதா: சரி, ஒரு language-ஐ வந்து ஒரு God மாதிரி நினைச்சுப் பயப்படணுமா? இல்லன்னா, அது ஒரு பெரிய விஷயம்னு நினைச்சு cherish பண்ணிட்டே இருக்கணுமா? Language is for enjoyment. Enjoyment for mind and soul. So, it touches your soul when communication is about quality issues. அப்படியிருக்க, why are we obsessed with language?

ராஜாராம்: இல்ல, we are obsessed with language because இங்க வந்து இங்லீஸ் படிக்கறது மூலமா - நம்ம எல்லாக் கல்வியாளர்களும் என்ன சொல்றாங்கன்னா - அவங்க எந்த language-ல natural-ஆ பேசிட்டு இருக்காங்களோ - அந்த language-ல சப்ஜெக்ட் படிக்கும்போதுதான், input அதிகமாகுது, குவாலிட்டி அதிகமாகுதுனு சொல்றாங்க which is proven everywhere. O.K.? இப்ப இங்க இருக்கறவங்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) ஜெர்மன்ல படிச்சாதான் புரியும்னு யாரும் ஜெர்மன்ல சொல்லித் தரது கிடையாது. And, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தப்போ எல்லாரும் சொன்னாங்க - ஹிந்தி படிச்சா நிறைய வேலை கிடைக்கும்னு. அதுமாதிரி இங்லீஸ் படிச்சா மட்டுமே எல்லாருக்கும் வேலை கிடைக்கும்னு சொல்றாங்க. This is not the truth. அதுமாதிரி, ஒரு இமேஜ் கிரியேட் ஆகியிருக்கு.

அண்ணாமலை: That is the image created.

சு.ரா.: அப்படியில்லை. ப்ராடிகலா நீங்க அங்கப் பார்த்தேள்னா, ஒருத்தனுக்குத் தமிழ்ல எவ்ளோ ஸ்காலர்ஷிப் இருக்குன்னாலும், அவன் சொஸைடில - தமிழ் சொஸைடில - மதிக்கப்படறதே இல்லை. அவனுக்கு இங்லீசும் தெரியணும். இங்லீஸ்லே எவ்வளவு தெரியும்? தமிழ் ஸ்காலர்ஸ் அவ்வளவு பேரும், அவங்களுக்கு இங்லீஸ் தெரியலைன்னு பயங்கரமா வேதனைப்பட்டிருக்காங்க. இப்ப கருணாநிதிக்கு உள்ளூர - அவர் வந்து தமிழ்ல ஒரு பெரிய ஸ்காலரா - ரொம்பப் பாராட்டத்தகுந்த விஷயங்கள் உள்ளவர் அவர். ரொம்ப பாசிட்டிவான சைட்ஸ் உள்ளவர். இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே கிடையாது.

துக்காராம்: அவருக்கு என்ன பாசிட்டிவான சைட்ஸ் இருக்கு? அப்போ இந்த அம்மாவையும் அப்படிப் பார்க்கலாம் இல்லையா? இந்த அம்மாவுக்கும் குவாலிபிகேஷன்ஸ் இருக்கே.

சு.ரா.: கருணாநிதியின் நெகட்டிவ் சைட்ஸ் ஒண்ணுமே நான் மறுக்கலை. ஆனா - அவருக்குப் பாசிட்டிவ் சைட்ஸ் நிறைய உண்டு. இந்த அம்மாவுக்கு ஒண்ணுமே கிடையாது.

ராஜாராம்: (துக்காராமைப் பார்த்து) இல்ல, இல்ல. Political-ஆ she has not been in any political activity before MGR christined her.

சு.ரா.: ரொம்பப் பச்சையா சொல்லும்படி என்னை வற்புறுத்தாதீங்க. (சிரிக்கிறார்.) நீங்களே யோசிச்சுப் பார்த்துக்குங்க அந்த அம்மாவோட குவாலிபிகேஷன்ஸ் என்னன்னு.

ராஜாராம்: MGR இல்லைன்னா, அந்தம்மாவுக்கு லைப்பே கிடையாது - பொலிடிகல் லைப்பே கிடையாது.

சு.ரா.: MGR இல்லைன்னானு இல்லை. MGRக்கு இந்த அம்மாமேல ஒரு madness. இல்லையானால் தமிழ் ஹிஸ்டரியே வேற மாதிரி. ஒரு சினிமா ஆக்டருக்கு ஒரு பொண்ணுமேல madness - கிறுக்கு. லவ்வும் ஒண்ணுமே கிடையாது. கிறுக்கு. இந்தக் கிறுக்கு தமிழ் ஹிஸ்டரியை எந்த அளவுக்கு influence பண்ணுது பாருங்க. அப்ப, நீங்க எந்த இடத்திலே இருக்கீங்கன்னு யோசியுங்க.

துக்காராம்: இல்ல, நீங்க சொல்றதை நான் ஒத்துக்க முடியாது.

சு.ரா.: சரி, நீங்க சொல்லுங்க. (சிரிக்கிறார்.)

துக்காராம்: அந்த period-ல வந்து MGR செத்துப்போனப்புறம், ADMK ரெண்டா உடைஞ்சது. ஒண்ணுல ஜானகி சி.எம்.மா இருந்தாங்க. இன்னொன்னுக்கு ஜெயலலிதா லீட் பண்ணாங்க. வோட்டு ரெண்டு பக்கமும் ஈக்வலாத்தான் split ஆச்சி. கொஞ்சம் slight majority ஜெயலலிதாவுக்குக் கிடைச்சது.

பி.கே. சிவகுமார் & ராஜாராம்: இல்ல இல்ல.

பி.கே. சிவகுமார்: ஜானகி ஜெயிக்கவே இல்லை. She was completely washed out.

துக்காராம்: why?

ராஜாராம்: because ஜெயலலிதா அதுக்கு முன்னாடியே தன்னோட political base-ஐ பில்ட்-அப் பண்ணிட்டாங்க.

துக்காராம்: so, she did something on her own. right?

ராஜாராம்: No no. She did not do anything socially. Let me explain. Jayalalitha built her political career based on some attributes.

சு.ரா.: ஆமா.

துக்காராம்: அப்போ நீங்க கருணாநிதியையும் அப்படித்தானே பார்க்கணும். Karunanidhi did not build all on his own. He took over from Annadurai. அண்ணாதுரை சாவை வைத்துதானே அவர் முன்னுக்கு வந்தார்.

அண்ணாமலை: கருணாநிதி அரசியலை எடுத்தால் that is based on some ideology - அதை நீங்க ஒத்துக்கறீங்களோ இல்லையோ - it is based on ideology. தனிப்பட்ட முறையில அவர்கிட்ட எவ்வளவோ குறைகள் இருக்கு. தமிழ்நாட்டுக்குக் கவர்ச்சி அரசியலைக் கொண்டு வந்ததில் அவருக்கு முக்கியமான பங்கிருக்கு. ஆனால், இந்தம்மாவுக்கு ideology-னே ஒண்ணும் கிடையாது.

துக்காராம்: அப்படியெல்லாம் கிடையாது. MGR-வோட legacy என்பதைத் தமிழ் மக்கள் ரொம்ப நல்லாவே புரிஞ்சிக்கறாங்க. MGR-வோட கொள்கை என்ன என்பதை நல்லா புரிஞ்சிக்கறாங்க.

அண்ணாமலை: MGR-வோட கொள்கை என்ன? சொல்லுங்க.

துக்காராம்: நான் சீரியஸா சொல்றேன். நாம வந்து இங்கே elitist-ஆ பேசறோமான்னு எனக்குத் தெரியலை. ஆனா, நான் வந்து ஒரு சாதாரண ஆசாமிகிட்ட போய் பேசினால், அவங்க சொல்றாங்க. "MGR-க்கா ஓட்டு விழுது. MGR டான்ஸ் ஆடியதற்காக ஓட்டு விழுதுனு நீங்க நினைச்சால் அது தப்பு என்கிறாங்க. ஏன்னு கேட்டால், கருணாநிதி இருந்திருந்தால் தமிழ்நாட்டைத் தனியாப் பிரிச்சிருப்பார். நிறைய பேருக்கு வந்து - அந்த மாதிரியான ஒரு ஒபினியன் கிடையாது. அதனாலதான் முன்னாடி காங்கிரசுக்கு ஒட்டுப் போட்டவங்ககூட - எல்லாரும் அந்தப் பக்கம்போய் MGR-க்கு ஓட்டு குத்தினாங்க" என்கிறார்.

அண்ணாமலை: கிடையாது. DMK has become a party of upper-caste non-brahmins. So for the lower caste they were looking for a political platform and MGR provided it.

துக்காராம்: இது எல்லாம் இன்னும் நிறைய ரீசன்ஸ். But, MGR-க்குக் கொள்கையே இல்லைன்னு சொன்னால், வேற நான் என்ன சொல்ல முடியும்? He represented something.

அண்ணாமலை: The question was - evaluating Jayalalitha as a politician.

சு.ரா.: ஆமா

துக்காராம்: அதான், MGRவோட legacy-ஐத்தான் அவங்க திரும்பி பில்ட்-அப் பண்ணிக்கிட்டாங்க.

அண்ணாமலை: The point is that she used it for personal gain.

துக்காராம்: ஏன் கருணாநிதி personal gain-க்குச் செய்யலையா?

அண்ணாமலை: Karunanidhi also did that.

ராஜாராம்: ஜெயலலிதாவின் கொள்கை கருணாநிதிக்கு எதிரான கொள்கை. அவ்வளவுதான்.

துக்காராம்: இல்லை இல்லை. Thats what you think it is. It is not. கருணாநிதியை எதிர்க்கிற கொள்கை உண்மைதான். ஆனால், அதையும் தாண்டி....

ராஜாராம்: You are wrong. I dont agree. கருணாநிதி வந்து பார்ட்டியை பார்ட்டியா பில்ட்-அப் பண்ணார். இப்பவும்கூட வந்து, கருணாநிதியைத் தலைவரா தேர்ந்தெடுக்கறது தவிர மத்தபடி - there is some inner-party democracy in DMK. They hold their elections. துணைச் செயலாளர், வட்டச் செயலாளர் போஸ்ட்டுக்கு எலெக்ஷன் நடத்தறாங்க. ஜெயலலிதா கட்சியிலே ஒண்ணுமே கிடையாது. ஜெயலலிதாதான் கட்சி.

துக்காராம்: அதிலயும் ஓரளவு நடக்குது.

சு.ரா.: ஒண்ணுமே நடக்காது. இந்தியாவிலேயே பார்ட்டிக்குள்ள ஓரளவாவது டெமாக்ரஸி உள்ள ஒரே கட்சி DMK-தான்.

துக்காராம்: பி.ஜே.பி.கூட கிடையாதா?

சு.ரா.: பி.ஜே.பி.கூட கிடையாது. பி.ஜே.பி. முன்னாடி இருந்திருக்கு. ஒரு பீரியடுல பி.ஜே.பி.யும். டி.எம்.கே.வும் இதுல ஒரே மாதிரி இருந்திருக்கு. இப்ப இல்லை.

ராஜாராம்: இதுல இன்னொரு கேள்வி. சுந்தர ராமசாமி கிட்ட என்னோட கேள்வி என்னன்னா - நாம பேசறது எல்லாம் அடிப்படையா வெச்சி ஒரு கேள்வி என்னன்னா - ஒரு ஐம்பது வருஷமா தி.மு.க நம்ம வாழ்க்கையை வந்து பாதிச்சிருக்கு. திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் அப்படீன்னு. இதை வந்து இலக்கியப்படுத்தறதுக்கு ஏன் யாருமே பண்ணலை.

சு.ரா.: (தாடியைத் தடவிக் கொண்டே யோசிக்கிறார்.)

சாமிநாதன்: அதை நீங்க glorify பண்ணிக் காமிக்கலைன்னா அடிதான் விழும். நெகட்டிவ்வா காட்டினா அடிவிழும். (கூட்டத்தில் சிரிப்பு)

ராஜாராம்: அது எல்லாம் ரீசன் இல்லை.

ராஜாராம்: (சு.ரா.வைப் பார்த்து) நீங்க சொன்னீங்க இல்லையா disconnect. அந்த மாதிரி ஒரு disconnect நம்ம எழுத்தாளர்களுக்கும் இந்தச் சமூக இயக்கத்துக்கும் நடுவுல இருக்கா... அப்படீன்னு நான் கேட்கிறேன்.

சு.ரா.: இருக்கு. நிச்சயமா இருக்கு. முக்கியமா - இந்த - commercial magazines இருக்காங்க இல்லையா - அவங்களைவிட இந்த மாதிரியான போதை சிறுபத்திரிகைகாரங்களுக்கு ஜாஸ்தி to be frank.

ராஜாராம்: ஏன் அதைவந்து, ஒரு பாசிடிவ்வாவோ, நெகட்டிவ்வாவோ அது இலக்கியப்படுத்தப்படலை.

சு.ரா.: அவங்க வந்து - பாருங்க - இந்தச் சிறுபத்திரிகைக்காரன் இருக்கானே - அவன் வந்து நிறைய விஷயங்களைக் கண்டுக்கறதே இல்லை.

ராஜாராம்: அதான் சொல்றேன். ஏன்?

(தொடரும்)

No comments: