Thursday, November 03, 2005

குறிப்பெழுதும் அறிஞர் தம் கவனத்துக்கு

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தமிழோவியம் தீபாவளி மலருக்கு ஒரு நேர்காணல் அளித்துள்ளார். நேர்காணல் செய்தவர் பாஸ்டன் பாலாஜி என்றும் அழைக்கப்படுகிற நம்ம பாபா. மின்னஞ்சல் மூலம் செய்யப்பட்ட நேர்காணல் என்று நினைக்கிறேன். "இணையம் பெருக்கெடுத்து ஓடும் ஆறு போன்றது. உயிர் கொடுக்கும் தண்ணீரும் பன்றி விட்டையும் சேர்ந்து செல்வது" உள்ளிட்டப் பல கருத்துகளைப் பி.ஏ.கே. சொல்லியுள்ளார். மார்க்ஸிஸ்ட்டான பி.ஏ.கே. சொல்லியுள்ள இன்னொரு முக்கியமான கருத்து. "ஜெயமோகன் தமிழகத்தின் சொத்து என்று கருதுகிறவன் நான்."

நேர்காணல்கள் கலந்துரையாடல்கள் பற்றிக் குறிப்பெழுதுகிறவர்கள் யாரும் இதைப் பற்றிக் குறிப்பெழுதுகிறார்களா என்று கவனிக்க வேண்டும். அதுவும், ஜெயமோகனைப் பற்றி ஏதும் சொன்னாலே (அல்லது சொல்லாமலே இருந்தாலும்கூட) மற்றவர்களை ஜெயமோகன் அடிவருடிகள் என்றும், இந்துத்துவா என்றும் அழைத்து மகிழ்கிற அறிவுஜீவி அறிஞர்(கள்) என்ன சொல்கிறார்(கள்) என்று பார்க்க வேண்டும். பி.ஏ.கே. சொன்னால் தப்பில்லை. அற்பன் பி.கே.எஸ். சொன்னால்தான் தப்பு என்று கண்டும் காணாமல் போய்விடப் போகிறார்களா அறிஞர்(கள்)? என்னை ஏமாற்றத்துக்கு உள்ளாக்காமல் இதுபற்றியும் வழவழ கொழகொழ என்று ஒரு குறிப்பு வரையுமாறு அன்புடன் வேண்டுகிறேன். :-)

PS: Please note that I have no issues/problems in opinions expressed by PAK. He has a right to say what he feels as right. Infact I agree with his opinion on Jeyamohan especially. :-)

No comments: