Sunday, June 11, 2006

சென்னையில் சி.வி. இராமன் விவரணப் படம்

நார்த்சவுத் பவுண்டேஷனின் பிரின்ஸ்டன், நியூ ஜெர்ஸி கிளையின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இந்த ஆண்டு பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இது ஒரு தன்னார்வப் பணி. அமெரிக்கா, கனடாவில் இந்த அமைப்புக்கு 67 கிளைகள் உள்ளன. வருடம்தோறும் இங்கிருக்கிற இந்திய வம்சாவளி குழந்தைகளுக்குப் பல போட்டிகளை நடத்தி, அதில் வருகிற பணம் அனைத்தையும் இந்தியாவில் நன்கு படிக்கிற ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு ஸ்காலர்ஷிப்பாகத் தருகிறார்கள். இந்த அமைப்பு, அதனுடனான என் அனுபவம் ஆகியவற்றைப் பற்றி ஒரு தனிப்பதிவாகப் பின்னர் எழுதுகிறேன்.

ஏப்ரல் 8, 9 - 2006 அன்று புகழ்பெற்ற நியூ ஜெர்ஸியின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக இயற்பியல் துறை அரங்குகளில் மாணவர்களுக்கு Essay Bee, Math Bee, Vocabulary Bee, Public Speaking Bee, Geography Bee, Spelling Bee ஆகிய போட்டிகளை நார்த் சவுத் பவுண்டேஷனின் பிரின்ஸ்டன் கிளை நடத்தியது. ஒவ்வொரு போட்டியிலும் ஜூனியர், இன்டர்மீடியட், சீனியர் என்று பிரிவுகளும் இருந்தன. ஏறக்குறைய 198 முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்த இப்போட்டிகளில் வசூலான ஏறக்குறைய 5000 டாலர்கள் இந்தியாவில் நன்கு படிக்கிற ஏழைக் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க உபயோகிக்கப்படும் என்பது நற்செய்தி.

பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறையுடன் ,இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற 16 பேர் தொடர்புடையவர்கள். இவர்களில் தன்னுடைய காம்ப்டன் எபக்ட் மூலம் ராமனை ஆகர்ஷித்த A.H Compton-ம் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாகவே ராமன் எபக்ட்டை ராமன் கண்டுபிடித்தார். இயற்பியல் துறையில் சுவர்களை இயற்பியல் விஞ்ஞானிகள் புகைப்படங்கள் அணி செய்கின்றன. அவற்றில் சி.வி. இராமனும் இருக்கின்றார். இந்த இயற்பியல் துறையில் அரங்கில், ஏப்ரல் 9 ஆம் தேதி மாலை நார்த்சவுத் பவுண்டேஷனின் பிரின்ஸ்டன் கிளையின் பரிசளிப்பு மற்றும் பங்குபெற்றவர்களுக்கான சான்றிதழ் அளிப்பு விழாவில் சிந்தனை வட்டம் சார்பாக திரு. ந. முருகானந்தம் தயாரித்து, அம்ஷன் குமார் இயக்கிய சி.வி. இராமனைப் பற்றிய டாக்குமென்டரி (ஆங்கில வடிவம்) திரையிடப்பட்டது மிகவும் பொருத்தமானது. குழந்தைகளும் பெற்றோர்களுமாக ஏறக்குறைய 200 பேர் இந்த டாக்குமென்டரியை ஆர்வத்துடனும் அமைதியாகவும் கண்டுகளித்துக் கரகோஷம் எழுப்பிப் பாராட்டினர். திரையிடலுக்கு முன் முருகானந்தம் அவர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைத் தரும் வாய்ப்பை நான் பெற்றேன். அடுத்ததாக, முருகானந்தம் இந்தப் படத்தைப் பற்றிப் பேசினார். பின்னர், படம் திரையிடப் பட்டது.

இந்த டாக்குமென்டரி (Tamil Version) இப்போது தமிழ்நாட்டில் முதன்முதலாகத் திரையிடப்பட உள்ளது. விவரங்கள் பின்வருமாறு. சென்னையில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Cindhanai Vattam New Jersey USA
and
BGM Chennai

cordially invite you

to the premier show of the documentary film on
Sir C.V.RAMAN the Nobel Laureate Scientist

Directed by AMSHAN KUMAR

on 14th June 2006 Wednesday at 6:30pm


at
Russian Cultural Centre
No.74 Kasturi Ranga Road Alwarpet Chennai-600018.

Dr.M.S.Swaminathan
Chairman-Indian National Commission For Farmers
will preside over and release the DVD of the documentary.

Dr.R.Jayachandra Singh
Principal In Charge - Presidency College Chennai
Will offer felicitations


படத்தைப் பற்றிய விவரங்கள்:

C.V. RAMAN was the first Asian scientist to win the Nobel Prize in physics in 1930 for his discovery 'The Raman Effect`. Born in 1888 in Tiruvanaikkaval in South India in a family of modest background, he developed a strong passion for science quite early in his life. After completing his studies he joined the Government Service under British rule as an Assistant Accountant General in Calcutta. However, seizing upon an opportunity, he gave up his lucrative Government job to pursue research in Science. For nearly six decades, Raman relentlessly worked on a variety of subjects-from acoustics of musical instruments to the pioneering study of light scattering, color, vision, and crystals. He was responsible for the establishment of many institutions to foster the spirit of science and for encouraging several outstanding students in the study of science. The Raman Effect continues to find applications in several fields of science -from biology to nanotechnology. Raman died in 1970 at the age of 82.

This biographical documentary is a tribute to the extraordinary life and career of C.V.Raman.

Duration : 35 Minutes
Camera : P.S.Dharan and Seenu
Music : Sadhanandam
Editing : Goutam
Produced by : N.Muruganandam
Written and
Directed by : Amshan Kumar

No comments: