Thursday, November 02, 2006

மரண தண்டனை - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

மரண தண்டனை குறித்து எனக்கொரு பார்வை இருக்கிறது. அதைக் கட்டுரையாக எழுதுவதற்கான முனைப்பும் ஆர்வமும் எனக்கு இப்போது இல்லை. சுருக்கமாகச் சொன்னால், rarest of rare கேஸ்களில் மரணதண்டனையை இப்போது ஆதரிக்கிற சிந்தனை எனக்கு இருக்கிறது. பயங்கரவாதம், சிறார்கள் கொலை, பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்கள் அந்த rarest of rare வகையில் அடங்கும் என்று நம்புகிறேன். 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களையும், அதில் நண்பர் ஒருவரை இழந்ததையும் பார்த்தபின் ஏற்பட்ட மாற்றம் இது. அதற்கு முன்வரை நானும் மரணதண்டனையே கூடாது என்றுதான் இருந்தேன். எனவே, அந்த விவரங்களுக்குள் போகாமல் இதை மட்டும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். சில வாக்கியங்களை அழுத்தமாக (boldஇல்) தந்திருக்கிறேன். அழுத்தம் மட்டும் என்னுடையது.- பி.கே. சிவகுமார்

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

(தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, பட்னா, ஜெய்பூர், லக்னோவில் ஏ.சி. நீல்சன் - ஓ.ஆர்.ஜி. மார்க் மேற்கொண்ட 1,105 தெருமுனை நேர்காணல்களின்படி. இந்தியா டுடே நவம்பர் 1, 2006 இதழில் வெளியானது).

நாடாளுமன்றத்தின் மீது 2001 டிசம்பர் 13ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்ரதாரியாக இருந்ததாக நிரூபிக்கப்பட்ட முகமது அ·ப்சல் குருவுக்குத் திஹார் சிறையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. அவன் ஜனாதிபதியிடன் கருணை மனு விண்ணப்பிக்கவில்லை. ஆனால், அவனின் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்து கருணை காட்டுமாறு கோரியிருக்கிறார்கள். அ·ப்சலின் சொந்த ஊரான ஸ்ரீநகரிலும் நாட்டின் வேறு பல இடங்களிலும் பிரிவினைவாத குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், வாக்கு வங்கியைக் குறி வைக்கும் அரசியல்வாதிகள் அ·ப்சலைத் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அவன் செய்த குற்றத்தின் தீவிரத்தைவிட, அவனுக்குத் தரப்படும் தண்டனையின் தீவிரமே கவனத்திற்குரியது என்பதுபோல ஆகிவிட்டது. அன்று தாக்கப்பட்டது இந்தியா. அந்தக் குற்றத்தைச் செய்தவனை என்ன செய்யலாம் என நகர்ப்புற இந்தியா நினைக்கிறது. இந்தியா டுடே - ஏ.சி. நீல்சன் - ஓ.ஆர்.ஜி. மார்க் கருத்துக் கணிப்பில் பெருவாரியானவர்கள் அ·ப்சலுக்கு மரணதண்டனைதான் சரி என்கிறார்கள். தாராள எண்ணம் கொண்டவர்களின் முழக்கத்திற்கும் வெகுஜன சிந்தனைக்குமான பெருஇடைவெளி இதன்மூலம் அம்பலமாகிறது. இந்தியா பயங்கரவாதிகளின் வேட்டைக்களமாகும்போது, இந்தியர்கள் தங்கள் தேசத்தின் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். பயங்கரவாதியின் உயிரை அல்ல.

(பி.கே. சிவகுமார் குறிப்பு: நகர்ப்புறங்களில் கல்வி பெற்றோர் விகிதம் அதிகம். மேலும் நடுத்தர வகுப்பினரும் நகர்ப்புறங்களில் அதிகம். இவர்களே ஒரு நாட்டின் சிந்தனையில் பெருமளவு தாக்கம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அதனால், நகர்ப்புறத்தில் கிடைத்த விழுக்காடுகள் அளவுக்கோ அல்லது அதிகமாகவோதான் கிராமப்புறத்தில் சர்வே எடுக்கப்பட்டால் அதன் முடிவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.)

நாடாளுமன்ற தாக்குதலில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அ·ப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டுமா?

ஆமாம்: 78%
இல்லை: 21%
தெரியாது/சொல்ல முடியாது: 1%

அ·ப்சலுக்கு ஆயுள் தண்டனை தர வேண்டுமா?
ஆமாம்: 26%
இல்லை: 73%
தெரியாது/சொல்ல முடியாது: 1%

எந்தெந்த குற்றங்களுக்கு மரண தண்டனை?

பயங்கரவாதம்: 81% ஆமாம் - 19% இல்லை
சிறார் கொலை/பாலியல் பலாத்காரம்: 84% ஆமாம் - 16% இல்லை
ஆள் கடத்தல், விமானக் கடத்தல்: 42% ஆமாம் - 58% இல்லை
கொலை: 71% ஆமாம் - 29% இல்லை
ஊழல்: 30% ஆமாம் - 70% இல்லை

நீதித்துறை தீர்ப்புகளை அரசு மாற்ற, திருத்த அனுமதிக்கலாமா?
ஆமாம்: 40%
இல்லை: 58%

நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மன்னிப்பு தர ஜனாதிபதி, பிரதமர், கவர்னருக்கு உரிமை உள்ளதா?
ஆமாம்: 55%
இல்லை: 44%

நன்றி: இந்தியா டுடே.

என் குறிப்புகள்:

அமெரிக்காவில் பல மாநிலங்களில் மரண தண்டனை அமுலில் உள்ளது. உதாரணமாக, டெக்ஸாஸ் மாநிலம். தற்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டெக்ஸாஸின் ஆளுநராக இருந்தபோது, மிக அதிகமாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, அ·ப்சலுக்கு ஆதரவாக மரணதண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்கிற தாராளவாதிகளும் மனிதநேயக் காவலர்களும், அமெரிக்காவிலும் மரணதண்டனையை எதிர்த்து இதே மாதிரி கடுமையானக் குரல் கொடுத்திருப்பார்கள், தெருவில் இறங்கிப் போராடியிருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் செய்யாமல் இருந்து இந்தியாவில் மட்டும் - அதுவும் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட அ·ப்சலின் மரணதண்டனையை மட்டும் எதிர்த்து மார் தட்டிக் கொண்டிருந்தால் - மரணதண்டனையை எதிர்க்கிறவர்கள் பட்டியலில் பிரிவினைவாதக் குழுக்கள் என்ற வகையில் அவர்கள் அடங்குவார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இந்த இடத்தில் யாரையும் பெயர் சொல்லாமல் பொதுவாகத்தான் எழுதியிருக்கிறேன். "எங்கப்பா குதிருக்குள் இல்லை" என்று யாரும் ஓடிவர வேண்டாம். :-) பொதுவாக எழுதக் காரணம், தனிமனிதர்களைச் சொல்வதில் பயமென்று இல்லை. தனிமனிதர்களைச் சொல்லும்போது சொல்லும் விஷயம் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது என்பதால்.

இந்தப் பதிவுக்கு மட்டும் அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டா. சிரமத்திற்கு மன்னிக்கவும். அனானியாக என்னைத் தாக்க வசதி ஏற்படுத்தித் தரும் பல பதிவுகள் இருக்கின்றன. அங்கே செல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன். :-)

12 comments:

Haranprasanna said...

01. பயங்கரவாதம் - ஆமாம்
02. சிறார் கொலை - ஆமாம்
03. சிறார் பாலியல் பலாத்காரம் - ஆமாம்
04. பாலியல் பலாத்காரம் - இல்லை
05. அப்சலுக்கு - ஆமாம்
06. ஆள்கடத்தல், கொலை, ஊழல் - இல்லை
07. விமானக்கடத்தல் - தீவிரத்தைப் பொருத்து.

Varadhan said...

பி கே எஸ்

உங்களுக்கு நளினி, முருகன் என்ற பெயர்கள் எல்லாம் நினைவில் உள்ளதா என்ன ? அதைப் போல் அப்சலையும் மறந்து போவீர்கள்.

வரப் போகும் உ பி தேர்தலில் 25% முஸ்லீம் ஓட்டுக்களைப் பொறுக்குவதற்காக காங்கிரஸ் கைக்கூலிகள் நாட்டைக் கூட விலை பேச தயங்க மாட்டார்கள். நளினி, முருகன் வரிசையில் அப்சலையும் சேர்த்து எப்பொழுதோ விஷயத்துக்கு பால் ஊற்றி விட்ட பின் இப்பதான் சாவகாசமாக வந்து அப்சலை தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள்.

நம்ம மு க அவர சக்திக்கு ஜெயிலில் இருந்து குண்டர்களை திறந்து விடுகிறார், தாடிக்காரரோ, அப்சலை பத்திரப் படுத்துகிறார். இதில அப்சலுக்கு ஆதரவாக எழுதும் தீவீரவாதிகளை நொந்து என்ன பயன் ? யாராவது அடுத்த முறை இப்படி எழுதும் தீவீரவாதிகளை நேரில் பார்த்தால், காறி மூஞ்சியில் துப்பி பிஞ்ச செருப்பால் நாலு போடும் போட்டாலோ அல்லது அடுத்த முறை வெடிக்கும் குண்டு இவனூங்க வீட்டில் வெடித்தாலோ அன்றி இது போல எழுதுவதை இந்த பிறவிகள் நிறுத்தப் போவதில்லை. நீங்க என்னத்த சொல்லி என்னத்தப் பண்ண ?

அப்சலோட சேர்ந்து இன்னும் மூணு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்திருங்காங்க அத எதிர்த்து எவனாவது எழுதுனானா ? ஏன் ? இவனுங்க எல்லாம் அப்சலை மாதிரியே தீவீர்வாதிகள். எனக்கு என்னமோ அப்சலை விட்டு இது போன்ற ஆட்களை தூக்கில் போட வேண்டும். இது போல எழுதும் ஆசாமிகளை தயவு செய்து பிரிவினைவாதிகள் என்ற மென்மையான சொல்லை எல்லாம் பயன்படுத்தி ஒப்பிடாதீர்கள். இதுகள் எல்லாம் ரத்த வெறி பிடித்து அலையும் விஷ ஜந்துக்கள்.

மதுமிதா said...

இதையும் பாருங்கள்

http://madhumithaa.blogspot.com/2006/10/2_30.html

ROSAVASANTH said...

//நாடாளுமன்றத்தின் மீது 2001 டிசம்பர் 13ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்ரதாரியாக இருந்ததாக நிரூபிக்கப்பட்ட முகமது அ·ப்சல் குருவுக்குத் திஹார் சிறையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. //

இந்தியா டுடே கட்டுரையின் துவக்கமே ஒரு முழு புளுகில் துவங்குகிறது. பாரளுமன்ற தாக்குதலின் சூத்ரதாரி அஃப்சல் இல்லை; நீதிமன்றமும் அப்படி சொல்லி தீர்பளிக்கவில்லை. இது எல்லோருக்கும் தெரியும். அஃபசலுக்கு அந்த தாக்குதலுக்கான திட்டங்களில் தொடர்பு இருப்பதாக மட்டுமே நீதிமன்றமே கருதுகிறது. அதற்கான நேரடி சாட்சியம் எதுவுமில்லை. சந்தர்ப்ப சாட்சியங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறு ஒரு நேரடியான அப்பட்டமான புளுகுடன் ஒரு கருத்துக்கணிப்பு கட்டுரை துவங்குகிரது. அதன் நம்பகத் தன்மையும், கருத்து கணிப்பு நடத்திய விதத்தையும் (உதாரணமாய் என்ன விதத்தில் கேள்வி கேட்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பதில் வரும்). இங்கிருந்து புரிந்து கொள்ள தொடங்கலாம். பொதுப்புத்தி என்று நான் எழுதிய கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதாகவே இவை அனைத்தும் இருக்கின்றன.

PKS said...

நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி.

பிரசன்னாவின் கமெண்ட்டைப் பார்த்ததும் rarest of rare உதாரணத்தில் பாலியல் பலாத்காரம் என்பதை நான் சரியாக வரையறுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. கற்பழிப்பு மட்டுமே என்றால் அதில் நான் மரண தண்டனையைச் சேர்க்க மாட்டேன். வயது வந்தவர்களில் கொலையில் முடிகிற (டில்லி பிரியதர்சினி வழக்கு போல) பாலியல் பலாத்காரத்திற்கும், சிறார்களில் கொலையில் முடியாவிட்டாலும் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கும் மரண தண்டனை என்பது எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது. நன்றி.

- பி.கே. சிவகுமார்

PKS said...

//(உதாரணமாய் என்ன விதத்தில் கேள்வி கேட்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பதில் வரும்). //

ரோசா, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களை இதே மாதிரியான கேள்விகளைக் கேட்கச் சொன்னால், அதை எப்படிப்பட்ட வார்த்தைகளில் - எந்த மாதிரியான பதில் வரும்படியான வார்த்தைகளில் - அமைப்பீர்கள். அறிய துருதுருப்பாக உள்ளது.

மற்றபடிக்கு மேற்கண்ட வரிகள் பற்றி. "குறியறுப்பது" என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டு, அதில் தவறில்லை, அதை symbolic ஆகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வாதத்தைப் பலமுறை வைத்துள்ளீர்கள். இப்படிப் பல வார்த்தைகளை உங்களிடமிருந்து உதாரணமாகக் காட்டலாம். இந்த வார்த்தை ஒன்று போதுமே. விளக்கங்களுக்கான பலனை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்காவிட்டால் உரையாடல்களில் எப்படி முன்னோக்கி நகர்வது :-) அதனால் நானும் symbolic தான் என்று எடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வந்து என்ன விதத்தில் கேட்கப்படுகிறதோ அதற்கு ஏற்ப பதில் வரும் என்கிறீர்கள். அப்படியென்றால், என்ன வார்த்தை பயன்படுத்தப்படுகிறதோ அதற்கேற்பத்தான் புரிந்து கொள்ளப்படும் என்பதும் உங்களின் மேற்கண்ட வாதப்படி சரிதானே. இப்படிப் பல வார்த்தைகளைப் பயன்படுத்தியது/தொடர்ந்து பயன்படுத்தி வருவது அதிகபட்சமானது, எதிராளியை பயமுறுத்தத் தெரிந்தே செய்த/செய்கிற அத்துமீறல்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டால் என்ன தவறு இருக்க முடியும்! :-)

மரணதண்டனையை எதிர்ப்பவர் குறியறுப்பை ஆதரிக்கிறார் என்று சொல்லி, மரண தண்டனையைவிட குறியறுப்பு சித்ரவதையானது. அதைக் குறியீடாகக் கூட உபயோகிக்கிற மனதின் வன்முறை எப்படிப்பட்டது என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டால் உங்கள் பதில் என்னவென்று அறிய ஆவலாக உள்ளேன்.

இந்தியா டுடே தெரிந்தே புளுகியிருக்கும் என்று நான் நம்பவில்லை. தினத்தந்தியும் தினமலரும் வெகுஜன வாசகர்களுக்குப் புரியும்படி செய்தி தரும்போது செய்கிற எளிமைப்படுத்தலை செய்யும்போது சறுக்கியிருக்கும் என்று நம்புகிறேன். அதை நியாயப்படுத்தவில்லை. அதை வைத்து, இது அண்டப் புளுகு என்று குற்றம் சாட்டுவதும் அதன் அடிப்படையில் - அறிவியல்ரீதியாக - கருத்துக் கணிப்பு செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பு செய்த கருத்துக் கணிப்பை ஒதுக்குவதும் சரியில்லை என்று கருதுகிறேன். உதாரணமாக, ஒருமுறை உங்கள் பதிவில் (நினைவிலிருந்து எழுதுகிறேன். தவறிருந்தால் திருத்தவும்) ஜெர்மனியோ வேறு எந்த நாடோ காலனியாதிக்க நாடாக இருந்ததில்லை என்று எழுதினீர்கள். ஒருவர் அது தவறு என்று எடுத்துக் காட்டினார். அதை வைத்து உங்கள் உதாரணமே புளுகில் தொடங்குகிறது என்று கருத்தைத் தூக்கிப் போட்டுவிடலாமா! அப்படித்தான் இந்த விஷயத்தையும் நான் பார்க்கிறேன். (சம்பந்தமில்லாமல் இந்த வரிகள்: :-)அப்போதும்கூட நீங்கள் ஒரு சப்பைக்கட்டுத்தான் கட்டினீர்கள். வேறு ஏதோ ஒரு நாட்டை ஒப்பிடும்போது நீங்கள் சொன்ன நாடு பரவாயில்லை என்று. :-) சரி, அரசியலில் சப்பைக்கட்டு கட்டுவது சகஜம்தான். அது எனக்குப் பிரச்னையில்லை. :-))

திட்டங்களில் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுபவரை சூத்ரதாரி என்று அழைக்காமல் வேறு என்ன பெயரில் அழைப்பது. கொஞ்சம் தமிழும் கற்றுக் கொள்கிறேன். சொல்லித் தாருங்கள். No Kidding. திட்டம் என்பதைச் சூத்திரம் என்றால், திட்டத்தை வகுப்பவர் அல்லது திட்டத்துடன் தொடர்புடையவர் சூத்ரதாரிதானே ஆவார்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

ravi srinivas said...

நாடாளுமன்றத்தின் மீது 2001 டிசம்பர் 13ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்ரதாரியாக இருந்ததாக நிரூபிக்கப்பட்ட முகமது அ·ப்சல் குருவுக்குத்

I think this is not a fair and accurate description.Is there a
problem in translating from
English to Tamil.He was convicted
based on circumstantial evidence.

ravi srinivas said...

அப்சலோட சேர்ந்து இன்னும் மூணு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்திருங்காங்க

No.Geelani was acquitted by the SC.The SC awarded death sentence
to Afzal only.

ravi srinivas said...

The divide between public opinion and the opinion of the so called
intellectuals and human rights
activists is
understandable.Perceptions about threat, punishment and justice vary. For some USA and Israel
may be enemies but the public
may perceive the threat from
terrorism as a real menace to
the peace and lives of citizens
of the country.
They know that USA
and Israel will not attack India.
For them terrorism is a 800 pound
gurellia sitting in the drawing
room but 'intellectuals' refuse to
see this reality.These 'intellectuals' nurture
a hatred from USA and Hindutva
and this results in a distorted
perception.Hence there is a divide in the opinions.One cannot dismiss this as merely due to irrational
common sense.If at all anything
these 'intellectuals' are more
irrational and indifferent to
concerns of citizens.

செல்வன் said...

சிவகுமார்,

நல்ல நிதானமான பதிவு,வலுவான வாதங்கள் .நன்றி.

ரோசா சொல்லும் பொதுப்புத்தி சில சமயங்களில் தேவை, சில சமயங்களில் தேவை இல்லை. ஒட்டுமொத்தமாக 'பொதுபுத்தி என்பதே தப்பு' என்பதும் ஒரு பொதுபுத்தி தான்.(னொடெ:அப்சலுக்கு தரப்பட்ட மரணதண்டனை பொதுப்புத்தியில் விளைந்தது அல்ல)

காரண காரியம், சூழல், சமூகத்தின் நிலை, மக்கள் பாதுகாப்பு இது அனைத்தையும் பொறுத்துதான் ஒரு சமூகத்தில் மரண தண்டனை சரி, அல்லது தவறு என்று சொல்ல முடியும். ஒரு அரசின் தலையாய கடமை மக்கள் நலனை பாதுகாப்பது தான். தீவிரவாதியை அழிப்பதன்மூலம் அதை செய்ய முடியும் என்றால் அதை செய்வதில் தப்பில்லை. ஆனால் இதை எல்லாம் மறந்துவிட்டு "மரனதண்டனை தப்பு" எனும் இடதுசாரி ஜல்லியை(ரஷ்யாவில் ஸ்டாலின் கொன்றவர்களின் எண்ணீக்கை எத்தனை மில்லியன்கள் என யாராவது சொன்னால் தாவலை:-)டிராட்ஸ்கி அசாசினேஷன் கதை எல்லாம் இன்னும் யாரும் மறக்கவில்லை:-)) ரோசாவும் அடிப்பது வியப்பை அளிக்கிறது

ஒட்டுமொத்தமாக மரணதண்டனை கூடாது என்பது இடதுசாரி அறிவுசீவிகளின் பொதுப்புத்தி. அதை ரோசாவும் பின்பற்றுகிறார்.

எப்படியோ அவரது சர்க்கிளில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தால் சரி.

நாடு???

அது எக்கேடு கெட்டால் என்ன? நமக்கு நல்ல பெயர் கிடைத்தால் போதாதா?

--

அப்சலை 10 வருஷம் ஜெயிலில் வைத்திருந்த பின் "10 வருஷத்துக்கு மேல் ஜெயிலில் வைத்திருப்பது மனித உரிமை மீறல். விடுதலை செய்யுங்கள்" என இதே அறிவுசீவிகள் குரல் எழுப்புவர். இப்போது அப்சலை பகத்சிங்குடன் ஒப்பிடுபவர்கள் அப்போது நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவார்கள். அந்த கூத்தை எல்லாம் நாம் வேடிக்கை பார்க்கத்தானே போகிறோம்?

அடுத்து மும்பையிலோ, சென்னையிலோ குண்டுவெடிப்பில் சாகப்போகிறவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதைத்தவிர வேறென்ன செய்ய நம்மால் முடியும்?

-
இனி இம்மாதிரி ஆட்களை பிடிக்கும் ராணுவவீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்காமல் என்கவுண்டர் செய்வார்கள். இப்போதே நீதித்துறையில் நம்பிக்கை இழந்த போலிஸும், ராணுவமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

--

இந்த மரணதண்டனை எதிர்ப்பு ஊர்வலங்களில் எந்த தீவிரவாதியாவது குண்டு வைத்தால் அவனுக்கு மரணதண்டனை தரக்கூடாது என முதல் ஆளாக குரல் எழுப்ப நான் தயார்:-))

செல்வன் said...

சிவகுமார்,

நல்ல நிதானமான பதிவு,வலுவான வாதங்கள் .நன்றி.

ரோசா சொல்லும் பொதுப்புத்தி சில சமயங்களில் தேவை, சில சமயங்களில் தேவை இல்லை. ஒட்டுமொத்தமாக 'பொதுபுத்தி என்பதே தப்பு' என்பதும் ஒரு பொதுபுத்தி தான்.(னொடெ:அப்சலுக்கு தரப்பட்ட மரணதண்டனை பொதுப்புத்தியில் விளைந்தது அல்ல)

காரண காரியம், சூழல், சமூகத்தின் நிலை, மக்கள் பாதுகாப்பு இது அனைத்தையும் பொறுத்துதான் ஒரு சமூகத்தில் மரண தண்டனை சரி, அல்லது தவறு என்று சொல்ல முடியும். ஒரு அரசின் தலையாய கடமை மக்கள் நலனை பாதுகாப்பது தான். தீவிரவாதியை அழிப்பதன்மூலம் அதை செய்ய முடியும் என்றால் அதை செய்வதில் தப்பில்லை. ஆனால் இதை எல்லாம் மறந்துவிட்டு "மரனதண்டனை தப்பு" எனும் இடதுசாரி ஜல்லியை(ரஷ்யாவில் ஸ்டாலின் கொன்றவர்களின் எண்ணீக்கை எத்தனை மில்லியன்கள் என யாராவது சொன்னால் தாவலை:-)டிராட்ஸ்கி அசாசினேஷன் கதை எல்லாம் இன்னும் யாரும் மறக்கவில்லை:-)) ரோசாவும் அடிப்பது வியப்பை அளிக்கிறது

ஒட்டுமொத்தமாக மரணதண்டனை கூடாது என்பது இடதுசாரி அறிவுசீவிகளின் பொதுப்புத்தி. அதை ரோசாவும் பின்பற்றுகிறார்.

எப்படியோ அவரது சர்க்கிளில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தால் சரி.

நாடு???

அது எக்கேடு கெட்டால் என்ன? நமக்கு நல்ல பெயர் கிடைத்தால் போதாதா?

--

அப்சலை 10 வருஷம் ஜெயிலில் வைத்திருந்த பின் "10 வருஷத்துக்கு மேல் ஜெயிலில் வைத்திருப்பது மனித உரிமை மீறல். விடுதலை செய்யுங்கள்" என இதே அறிவுசீவிகள் குரல் எழுப்புவர். இப்போது அப்சலை பகத்சிங்குடன் ஒப்பிடுபவர்கள் அப்போது நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவார்கள். அந்த கூத்தை எல்லாம் நாம் வேடிக்கை பார்க்கத்தானே போகிறோம்?

அடுத்து மும்பையிலோ, சென்னையிலோ குண்டுவெடிப்பில் சாகப்போகிறவர்களுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதைத்தவிர வேறென்ன செய்ய நம்மால் முடியும்?

-
இனி இம்மாதிரி ஆட்களை பிடிக்கும் ராணுவவீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்காமல் என்கவுண்டர் செய்வார்கள். இப்போதே நீதித்துறையில் நம்பிக்கை இழந்த போலிஸும், ராணுவமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

--

இந்த மரணதண்டனை எதிர்ப்பு ஊர்வலங்களில் எந்த தீவிரவாதியாவது குண்டு வைத்தால் அவனுக்கு மரணதண்டனை தரக்கூடாது என முதல் ஆளாக குரல் எழுப்ப நான் தயார்:-))

ஓகை said...

பயங்கரவாதம் - ஆமாம்
சிறார் கொலை - வேண்டாம்
சிறார் பாலியல் பலாத்காரம்-வேண்டாம்
பாலியல் பலாத்காரம் - வேண்டாம்
அப்சலுக்கு - ஆமாம்
ஆள்கடத்தல், கொலை, ஊழல் - வேண்டாம்
விமானக்கடத்தல் - ஆமாம்