முன்குறிப்பு:
[http://imohandoss.blogspot.com/2007/12/blog-post_18.html என்ற தன் பதிவில் என்னுடைய சில பின்னூட்டங்களை அனுமதித்த மோகன்தாஸ் பின்வரும் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. அது அவர் உரிமை. அதற்கு அவர் காரணமே சொல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், சில ஜல்லிக் காரணங்களைச் சொல்லியிருக்கிறார். 1. ஏற்கனவே நான் சொல்லியுள்ளதையே திரும்பச் சொல்லியிருக்கிறேன் என்கிறார். தேன்கூடு பற்றி நான் எழுதியதற்கு புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர் எழுதிய பதிலை இதிலே உடைத்துக் காட்டியிருக்கிறேன். அது ஏற்கனவே பேசியது இல்லை. 2. சில புனித பிம்பங்களுக்குப் பயந்து கொண்டு (வேறென்ன?), அடுத்தவர் சொன்ன வசனங்களை நான் பயன்படுத்துவதையும் மேற்கோள் காட்டுவதையும்கூட அவர்கள் மீதான விமர்சனம் என்று பயந்து நடுங்கி அனுமதிக்க இயலாது என்று சொல்லியிருக்கிறார். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், மோகன்தாஸ் நான் வசை எழுதியதாகச் சொல்லவில்லை. விமர்சனம் எழுதியதாகவே சொல்கிறார். ஆனால், சிலபேரைப் பற்றிய விமர்சனங்களை அவர் பதிவில் அனுமதிக்க மாட்டாராம். சரி, இதற்கெல்லாம் சிரித்துவிட்டே செல்கிறேன். ஆனாலும் அவரின் நகைமுரண்களை எடுத்துக் காட்ட வேண்டாமா, அதற்காகவே இதை எழுதுகிறேன்.அதனாலும் நான் என்ன சொன்னேன் என்பது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இதை இங்கே சேமித்து வைக்கிறேன். மோகன்தாஸ் போன்ற (எனக்கு மிகவும் நெருக்கமான சகோதரர்தான் அவர்) பின்நவீனத்துவ, கலகக்கார, அறிவுஜீவிப் போலிகளின் முகமூடிகள் இப்படி இவ்வளவு சீக்கிரம் கிழிந்து தொங்குவது சந்தோஷமே. இவர் பேசுகிற நியாயங்கள் இப்படிப்பட்டவையே என்பதை இப்போது புதியதாக இவருக்கு நான் சொல்லவில்லை. பதிவர் பட்டறை என்று ஒன்று நடந்தது, அப்போது பெயரிலியைப் பற்றி மாலன் தேவையில்லாமல் பேசினார் என்று அறச்சீற்றம் செய்தாரே அப்போதே சொல்லியிருக்கிறேன். தேவையில்லாமல் பெயரிலி பலபேரை இழுத்துத் தாக்கியபோது எங்கே போயிருந்தீர்கள் என்று. உதாரணமாக, அதற்குச் சிலநாட்கள் முன்னர்தான் தன்னுடைய ஏதோ ஒரு பதிவில் பெயரிலி என் பெயரை இழுத்துத் தாக்கியிருந்தார். அதை நான் கண்டுகொள்ளவில்லை. மோகன்தாஸ் தானாகவே வந்து "பெயரிலி அந்தப் பதிவில் உங்கள் பெயரை இழுத்திருக்க வேண்டாம் என்றார்" என்னிடம். தான் நினைத்த நியாயத்தைக் கூடப் பெயரிலியை எதிர்த்துப் பொதுவில் எழுதுகிற தைரியமில்லாதவராக இருந்த மோகன்தாஸ்தான் மாலனை எதிர்த்துப் பதிவெழுதினார். எதை எழுதினால், எதை எழுதாவிட்டால் வலைப்பதிவில் பிழைக்கலாம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது என்றே நான் நினைத்து வருகிறேன். அவரிடமும் சொல்லி வருகிறேன். மாலன் Vs பெயரிலி பற்றி எனக்குக் கருத்திருக்கிறது. ஆனால் அதில் நுழைய எனக்கு விருப்பமில்லை. மாலன் சிலமுறை செய்திருக்கலாம் என்பதைத் தன் வலைப்பதிவு வாழ்நாள் முழுவதும் பெயரிலி செய்து வந்திருக்கிறார் - அது என்னவென்றால் தேவையற்ற இடங்களில் தேவையற்றவர்களை இழுத்துத் தாக்குவது. உதாரணமாக, ஒருமுறை என்னைத் தாக்க வேண்டியிருந்தபோது என் குடும்ப நண்பரும் இணைய அரசியல்களுக்கு அப்பாற்பட்டு இணையத்தில் எழுதிக் கொண்டு மட்டுமே இருக்கிறவரான சபாநாயகம் அவர்களை இழுத்து விமர்சித்தவர் பெயரிலி. இணைய வரலாற்றை நான் எழுதுகிற வேலையில் இல்லை. அதனால் இவையெல்லாம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதையெல்லாம் சொன்னபோது "இதெல்லாம் எனக்குத் தெரியாது பி.கே.எஸ். தெரிந்திருந்தால் நான் கேட்டிருப்பேன்" என்றார் மோகன்தாஸ். ஆனால், அவரே வந்து என்னிடம் சொன்ன, பெயரிலி உங்கள் பெயரை இழுத்திருக்கத் தேவையில்லை என்பதை அவர் எங்கும் பொதுவில் கேட்கவில்லை. அதனால் மோகன்தாஸ் இடம், பொருள், ஆட்கள், ஏவலறிந்து கேள்வி கேட்பதில் வல்லவர். அதனாலேயே, அவர் இப்போது திடீரென்று ஓவராக மற்றவர்கள்மீது துள்ளிக் குதிக்கும்போது அதன் பின்னிருக்கிற அரசியல் என்னவென்று அறிய வேண்டிய தேவையிருக்கிறது. கடைசியாக, இங்கே பெயரிலியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிற எதற்கும் எனக்கும் பலருக்கும் புரியாத மாதிரி பெயரிலியோ அடிப்பொடிகளோ எழுதப்போகிறவற்றுக்குப் பதில் எழுதுகிற உத்தேசம் இல்லை. ]
மோகன்தாஸ் பிரசுரிக்காத பின்னூட்டம்:
மோகனா, நீங்கள் ஆதரவாகப் பேசுகிற திரட்டியின் அதிகாரபூர்வமான பேச்சாளராகவோ நிர்வாகக் குழு உறுப்பினராகவோ நீங்கள் இல்லை. நான் ஆதரவாகப் பேசுகிறவற்றுக்கும் நான் அப்படி இல்லை. ஆனால் இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் ஆதரிக்கிற திரட்டி நிர்வாகிகளே இதுவரை இந்த மாதிரி விளம்பரம்கூடாது, மற்றவர்கள் பரிசளிக்கக் கூடாது என்று எதுவும் கட்டளைகள் இட்டதாகத் தெரியவில்லை. (அப்படி இட்டிருந்தால், மன்னிக்கவும். அதை என் பார்வைக்குக் கொண்டுவரவும். ஏனென்றால், நான் இப்போது வலைப்பதிவுகளில் மிகவும் தேர்ந்தெடுத்தே வாசிக்கிறேன்.) எனவே, அவர்களுக்கே இதுவரை பிரச்னை இல்லாதபோது விசலடிச்சான்குஞ்சுக்கு என்ன பிரச்னை என்று ஒரு கேள்வி எழுகிறது. இன்னமும் சொல்லப்போனால் ஒரு திரட்டி மட்டும் இருந்து அப்போது கேள்விகள் வந்தபோது, நிறைய திரட்டிகள் வரவேண்டும், இத்தகைய வசதிகள் தரவேண்டும் என்று திரட்டி எழுதி திவசதானியம் வாங்கியவர் வஜனம் பேசியதுண்டு. அப்படியிருக்க இப்போதா பேச்சை மாற்றி நிறைய பேர் பரிசளிக்கக் கூடாது என்று சொல்லிவிடப் போகிறார்கள்? திண்ணைக்கு உங்கள் காதலியின் பிறந்தநாள் விழா என்று அறிவிப்பு அனுப்புங்கள். இலவசமாக வெளியிடுவார்கள். ஆதலால், இந்த விளம்பரங்களால் என்ன பாதிப்பு என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. திரட்டியில் சேர்க்கும்போது போட்டி திரட்டி பற்றிய அறிவிப்புகள் அவர்கள் நடத்துகிற நிகழ்ச்சி கொடுக்கிற பரிசுகள் பற்றிய அறிவிப்புகள் திரட்டப்பட மாட்டாது என்று சொல்லியிருந்தால் நீங்கள் சொல்வது சரி. இல்லையென்றால், அனாவசியமாக நீங்கள் உணர்ச்சிவசப்படுவதாகவே தெரிகிறது. உங்கள் அபிமான திரட்டிக்கு நெருக்கமானவர்களே, பி.கே.எஸ் தம்பி மோகனாவை அடிக்கிற மாதிரி அடிக்க, மோகனா கிறுக்குத்தனமான வாதங்களை நம் திரட்டி சார்பாக வைத்து நம் திரட்டியின் பேரைக் கெடுக்கிறார் என்று உங்களைக் காய்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. :-) தேன்கூடு போட்டிக்கு வருவோம். தேன்கூடு போட்டிக்கு என்று இடுகையின் தலைப்பில் வைத்து எழுதியவற்றையும், அப்படி வைக்காமல் தேன்கூடு போட்டிக்கென்று எழுதப்பட்டவையையும்கூட உங்கள் அபிமான திரட்டி அன்றைக்குத் திரட்டிக் கொண்டுதானே இருந்தது. அப்போதெல்லாம் தேன்கூடு என்கிற புதிய எந்தத் தகுதியுமில்லாத திரட்டி உங்கள் அபிமான திரட்டியின் வசதியைப் பயன்படுத்திக் கொள்வதாக நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. ஏனென்றால், அப்போது உங்களுக்கு எந்த நுண்ணரசியலும் இல்லை. இப்போது இருக்கிறது. அந்த அரசியலுக்கான காரணங்கள் நான் நினைப்பதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நியாயத்தின் அடிப்படையில் நீங்கள் பேசவில்லை. "என் தத்துவ/அரசியலின் அடிப்படையில் பேசி லெக்பீஸ் பிரியாணி வாங்கிச் சாப்பிடுவதில் தயக்கமில்லை" என்று சொன்ன உண்மைக்கு நன்றி. நான் நியாயத்தின் அடிப்படையில் பேசினேன். தன் அரசியல்படி செயல்பட உங்களுக்கு உரிமை உண்டு. அங்கே பேசுவதைவிட எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. - பி.கே. சிவகுமார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Last feedback I posted at Mohandoss blog:
மோகனா,
என் பதிவில் எழுதிவிட்டேன். என்ன முதலிலேயே, என் பதிவில் எழுதும்படி என்னைச் சொல்லியிருக்கலாம். உங்களை அடிக்க உங்கள் பதிவாயிருந்தால் என்ன, என் பதிவாயிருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். "உங்கள் கருத்துச் சுதந்திரம் என்பது என்ன" என்பது எனக்குத் திட்டவட்டமாகப் புரியவில்லை என்பதால், இனிமேல் உங்களைத் தொந்திரவு செய்து எந்தப் பதிவிலும் என் பின்னூட்டங்கள் இருக்காது. ஏதும் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தால், என் பதிவின் மூலமே சொல்கிறேன். இந்தக் கடைசிப் பின்னூட்டத்தை வெளியிடுவதும் இடாததும் உங்கள் விருப்பம். - பி.கே. சிவகுமார்
அவர் பதிவில வெளியிடலைன்னா நீங்க பதிவா போடுவீங்களோ? இது எந்த ஊர் நியாயம்?
Post a Comment