Wednesday, December 15, 2004

டிசம்பர் 16, 2004 - வியாழன்

இன்றைய வார்த்தை: காந்தல். பொருள்: 1. காந்துகை (Burning), 2. உமி, ஓலை ஆகியவற்றின் எரிந்த கருகல் (burning flakes of straw, palm leaves, paper, chaff etc), 3. காய்ந்த பயிர் (Growing crop scorched by the sun), 4. சினம் (Anger). உதாரணம்: சமைக்கும்போது அடிபிடித்துத் தீய்ந்துபோன உணவைக் காந்தல் என்றும் அழைப்பர்.

வல்லின ஒற்று மிகும் இடம்: அதற்கு, இதற்கு, எதற்கு ஆகிய வார்த்தைகளுக்குப் பின்னால் வல்லின ஒற்று மிகும்.

உதாரணம்: அதற்குக் கொடுத்தான், இதற்குக் கொடுத்தான், எதற்குக் கொடுத்தான், அதற்குச் செய்தான், இதற்குச் செய்தான், எதற்குச் செய்தான், அதற்குத் தரவேண்டும், இதற்குத் தரவேண்டும், எதற்குத் தரவேண்டும், அதற்குப் படி, இதற்குப் படி, எதற்குப் படி.

No comments: