Showing posts with label சோதிப்பிரகாசம். Show all posts
Showing posts with label சோதிப்பிரகாசம். Show all posts
Friday, October 05, 2007
சோதிப்பிரகாசம் அவர்களுக்கு அஞ்சலி
இந்த வாரத் திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அஞ்சலி: சிரிக்கத் தெரிந்த மார்க்ஸியர்: சோதிப்பிரகாசம் என்ற கட்டுரையின் மூலமாகவே சோதிப்பிரகாசம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்தேன். அதிர்ச்சியாக இருந்தது. திண்ணையில் சோதிப்பிரகாசம் அவர்களின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். அன்னாருடன் சிலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். ஜெயமோகன் கட்டுரை சொல்கிற சுபாவங்கள் நிறைந்தவர். இனிமையாகவும் நட்புடனும் உற்சாகமாகவும் பேசுவார். தனிப்பட்ட முறையில் எனக்குப் படிக்க வேண்டிய புத்தகங்களைப் பரிந்துரைத்தவர். அவருடைய மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய இழப்பால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள்.
Subscribe to:
Posts (Atom)