வார்த்தை: கக்கக்கொடுத்தல். பொருள்: உணவை மிதமிஞ்சியூட்டுதல். To pamper, feet to surfeit, used in reporach. உதாரணம்: செல்லம் கக்கக்கொடுக்கப்படுகிற குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன.
திரும்பப் படிக்க வசதியாக:
வேற்றுமைத் தொடர்கள் - ஓர் அறிமுகம்-1
வேற்றுமைத் தொடர்கள் - ஓர் அறிமுகம்-2
ஒற்று மிகும் இடம்: இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்குப் பின் வல்லின ஒற்று மிகும். உதாரணம்: நீர்க்குடம் (நீர் + ஐ + உடைய + குடம்), தேர்ப்பாகன் (தேர் + ஐ+ செலுத்தும் + பாகன்_), பூத்தலை (பூ + ஐ + சூடிய + தலை), புகார்க்காண்டம் (புகார் + ஐ + பற்றிய + காண்டம்)
பி.கு.: இரண்டாம் வேற்றுமைத் தொகையில் (இரண்டாம் வேற்றுமை தொகைநிலைத் தொடரில்) வல்லின ஒற்று மிகாது. இதைப் பற்றி விரிவாக ஒற்று மிகா இடங்களுக்கு வரும்போது பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment