Wednesday, August 23, 2006

கண்டுணர்ந்த காந்தி - 2

http://tamil.sify.com/fullstory.php?id=14275464

4 comments:

Boston Bala said...

இந்த வாரம் படித்தேன். சிறப்பாக வந்திருக்கிறது. சில எண்ணங்கள்:

* காந்தி இறந்த்போது சர்ச்சில் என்ன சொன்னார். 'கூகிள் செய்து அறியலாம்' என்றாலும், பலர் படிக்கும் கட்டுரையில் விடுபடல் வேண்டாம் என்பதற்காக(வும்) அறிய விருபுகிறேன்

* ஜெனரல் ஸ்மட்ஸ் சம்பவம் காந்தியைப் புரிந்து கொள்ள உதவும். காலணிப் பரிசை நினைத்தால் பல அதிர்வுகள் தோன்றுகிறது. (இங்கு ஒரு எழுத்துப் பிழை? தென்னாப்பிரிக்கப் போராட்டம் வெற்றி பெற்றுக் காந்தி)

* மீரட் வழக்கில் உள்ளேயிருந்தவர்களை சந்தித்தார் போன்றவை படிக்கும்போது 'எங்கே சென்று யாரைப் பார்த்தாலும், என்ன செய்தாலும், நாம் இருக்கும் நிலையில் தப்பித்து விடலாம் (விடுதலை வேள்வி மேல் கவனிப்பையும் தரவைக்கலாம்)' என்னும் எண்ணம் பின்னூட்டமாக உதயமாவதைத் தவிர்க்க முடியவில்லை.

* இதே செய்கையை ஏன் நேரு, படேல், கோகலே போன்றவர்கள் செய்யாதபோது காந்தி மட்டும்தானே சிரத்தை எடுத்து, குறைந்த பயண வசதிகள் கொண்ட அந்தக் காலத்தில் தெற்கு, மேற்கு என்று கிரிக்கெட் வீரர்கள் போல் கால்நடை மேற்கொண்டு, தொடர்பு கொண்டதற்காக சிறையில் தள்ளப்படலாம் என்று அறிந்திருந்தும் 'கம்யூனிஸ்ட்களையும்' இன்ன பிறரையும் சந்தித்திருக்கிறார் என்று இன்னொரு மனது வக்காலத்தும் வாங்குகிறது.

* மறந்து போனவை, தெரியாதவை, என்று அரிய தகவல்களைக் கோர்வையாகக் கொடுத்து devil's advocate கேட்கும் கேள்விகளுக்கும் பொருத்தமான பதில்களை முன்னிறுத்தும் தொடரின் அடுத்த பகுதிகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கவைக்கும் நடையுடன் கொடுப்பதற்கு நன்றி.

PKS said...

பாபா,

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

தோழி மதுமிதா அவர்களும் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதைச் சொல்ல வேண்டும் என்று சொன்னதோடு, எழுத்துப் பிழைகளையும் தனிப்பட்ட பார்வைக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.

சர்ச்சில் என்ன சொன்னார் என்பது மிகவும் புகழ்பெற்ற மேற்கோள். அதை வாசகர் அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அறிந்திருக்காவிட்டால், இதைப் படித்துவிட்டாவது அறிந்து கொள்கிற ஆர்வத்தில் படிப்பவர் தேட வேண்டும் என்று விரும்பினேன். எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் அப்புறம் சுவாரஸ்யம் ஏது. ஒரு வாசகனாக, படிக்கக் கிடைக்கிற மிகக் குறைந்த தகவல்களோடு, விளக்கங்களையும் உண்மைகளையும் நானாகத் தேடி அலைகிறவனாகவே என் அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவம் சவாலாகவும் ஆர்வம் ஊட்டுவதாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் வாசகர்களும் என்னைப் போல இருப்பார்கள் என்று நினைத்தால், வாழைப்பழத்தை உரித்து ஊட்டிவிடச் சொல்ல, உங்களைப் போன்ற "google search" நிபுணர்களே இருக்கிறீர்களே. மேலும், காந்தி இறந்தபோது அப்படிச் சொன்ன சர்ச்சில் வேறொரு சமயத்தில் என்ன சொன்னார் என்பதும் சுவாரஸ்யமானது. கொஞ்சம் பொறுமை காத்தால், எழுதிவிடுகிற எண்ணத்தில் இருக்கிறேன். எல்லாவற்றையும் ஒரே வாரத்தில் கலந்து கட்டி அடிக்க வேண்டாமே என்றும் எண்ணம் எழுகிறது. காந்தியைப் பற்றி எழுதுவதற்கா விஷயங்கள் இல்லை. சும்மாவா அந்த மனுஷன் சொன்னார். "என்னுடைய செய்தி என் வாழ்க்கைதான்" என்று.

எழுத்துப் பிழைகள். ஒத்துக் கொண்டு கைதூக்கி விடுகிறேன். என் இலக்கண அறிவின் பலவீனமும், அவசரமாகத் தட்டச்சு செய்வதும் காரணங்கள். தவிர்க்கப் பார்க்கிறேன். தவிர்க்க இயலாவிட்டாலும் பொறுத்துக் கொண்டு, கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும். தட்டச்சுப் பிழைகளைத் தவிர்க்கலாம். இலக்கண அறிவீனம் தவிர்க்க முடியாதது. பொறுத்துக் கொள்ளவும்.

தான் இருக்கும் நிலையில் எதைச் செய்தாலும் அது தவறில்லை என்று நம்புகிற புனித பிம்பமாக காந்தி இருந்ததில்லை. அடுத்தவர் கேட்டபோதும், கேட்பதற்கு முன்னும் தன் தவறுகளைத் தானாகவே ஒத்துக் கொள்கிறவராகவே அவர் இருந்திருக்கிறார். எனவே, மீரட் வழக்கைப் பற்றிய உங்கள் கருத்து, காந்தியை நீங்கள் உங்களைப் போன்ற சக மனிதராக நினைப்பதை மட்டும் சொல்கிறது என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

devils advocate ஆக என்ன, devil ஆகக் கேள்வி கேட்பதையே நானும் விரும்புகிறேன். காந்தியும் அதைத்தான் விரும்புவார். எனக்குத் தெரிந்ததைப் பதிலாகச் சொல்ல முயல்கிறேன்.

என்னுடைய நடையால் அல்ல, காந்தியைப் பற்றியது என்பதால் ஆர்வமூட்டுவதாக இருப்பதாக நம்புகிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

Badri Seshadri said...

சிவா: காந்தி தொடர் இரண்டு பாகங்களையும் இன்றுதான் படித்தேன். சிஃபியின் வருகிறது என்றாலும் கொஞ்ச நாளுக்குப் பிறகாவது யூனிகோடில் மாற்றி வலைப்பதிவில் சேர்த்தால் நல்லது. சிஃபியின் தற்போதைய எழுத்துக்குறியீட்டில் இருப்பதால் உலகுக்கு நன்மை குறைவு. கூகிள் தேடலில் வராது. பலரால் படிக்கமுடியாது.

நன்றி.

PKS said...

பத்ரி: நன்றி. சி·பியில் பிரசுரமாகி சிலவாரங்கள் கழித்து யூனிகோடில் என்னுடைய யாஹ¥ 360 வலைப்பதிவில் சேமித்து வருகிறேன். இரண்டாவது வாரத்தை விரைவில் 360 வலைப்பதிவில் இடுகிறேன்.