இந்த வாரம் திண்ணையில் வெளியான இந்தக் கடிதம் http://www.thinnai.com/?module=displaystory&story_id=20701251&format=html என்ன சொல்வது என்று தெரியாத உணர்வை எழுப்பியிருக்கிறது. வயிற்றையும் மனதையும் ஏதோ பிசைகிறது. தினமணியில் அவருடைய வேடந்தாங்கல் தொடராக வந்தபோது நான் ஒரு மாணவன். ஆச்சரியத்தோடும் விருப்பத்தோடும் அதைத் தொடர்ந்து படித்தது நினைவுக்கு வருகிறது. அவருக்குத் திண்ணை குழு எழுதிய பதிலுடன் ஒத்துப் போகிறேன். ம.வே. சிவகுமார் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மட்டுமே வேண்டுகோள் வைக்கிறேன். எழுத்திலும் வாழ்க்கையிலும் ம.வே. சிவகுமார் பல வெற்றிகளுக்குத் தகுதியானவர். அவற்றைக் கிடைக்காமல் செய்த சமூகச் சூழலை எதிர்த்து அவர் செய்கிற போராட்டத்தில் நியாயம் உள்ளது. ஆனால், உயிரைப் பணயம் வைக்கத் தகுந்த போராட்டம் இல்லை அது. எழுத்திலும் வாழ்க்கையிலும் பெற வேண்டிய வெற்றிகளைத் தாண்டி இந்த வாழ்க்கை வாழத்தக்கது முழுமையாக. பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும் அச்சமில்லை என்று சொன்ன பாரதி அதைத்தான் சொல்கிறார். சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் நிலை இப்படியாக இன்னும் இருக்க, வசதியாக வாழ்க்கை அமைத்துக் கொண்டு, வலைப்பதிவில்/இணையத்தில் நாலு வரி எழுதிவிட்டு, இலக்கியம்/அரசியல் என்று பம்மாத்து பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. ஒரு இந்தியனாக, தமிழனாக வெட்கமும் வேதனையும் உண்டாகிறது. லௌகீக உலகின் வெற்றிகளைத் தாண்டி இலக்கியவாதிக்குத் தன்னையே தாண்டிச் செல்கிற வெற்றி அவசியம் என்று நான் உணர்ந்ததுண்டு. அதை ம.வே. சிவகுமார் அவர்கள் உணரும்போது, அவரின் லௌகீக வாழ்வின் தோல்விகள் அனைத்தும் ஒரு நியாயமான எழுத்தாளனின் வெற்றிகளே என்பதைப் புரிந்து கொள்வார். அது தன்னை அவர் வெல்கிற ஆன்மீகச் சோதனைக்கும் உதவும்.
பி.கு.: இதை எழுதிவிட்டு, போஸ்ட் செய்வதற்கு முன் திண்ணையில் இருந்த ம.வே. சிவகுமார் அவர்களின் சென்னை தொலைபேசி எண்ணுக்கு அழைத்தேன். அவரிடமே பேச முடிந்தது. எஸ்.வி. சேகர் உள்ளிட்டவர்கள் அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிந்து அவரை வந்து சந்தித்தார்களாம். அவர்களில் எழுத்தாளர்களும் அடக்கம். அனைவரும் சேர்ந்து ஏதேனும் செய்யலாம். இப்போதைக்கு உண்ணாவிரதம் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை நிறுத்தி வைத்திருக்கிறாராம். நல்ல முடிவு. அவரிடம் என்னுடைய இந்தப் பதிவையும் படித்துக் காட்டினேன். அங்கீகாரம், அங்கீகார மறுப்பு ஆகியவற்றைத் தாண்டி அவர் தொடர்ந்து எழுத வேண்டும். எப்போதோ ஒருமுறை மாணவப் பருவத்தில் அவருடைய வேடந்தாங்கலை மட்டும் படித்துவிட்டு, இன்றைக்கு அவரை மதித்து அழைத்துப் பேசுகிற வாசகர்களைவிட ஒரு எழுத்தாளருக்கு வேறெந்த அங்கீகாரமும் பரிசும் வேண்டும். ம.வே. சிவகுமார், தொடர்ந்து எழுதுங்கள். பணியாற்றுங்கள். மற்றவை ஒரு உண்மையான கலைஞனுக்கு பெரிய பொருட்டில்லை என்பதை அறிவீர்கள். அங்கீகாரமும் புகழும் மகிழ்ச்சியை நிச்சயம் கொணர்கிறது. அதற்காக ஆசைப்பட எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால், நியாயமான அங்கீகாரம் மறுக்கப்படும்போது அதற்காக உயிரைப் பணயம் வைப்பது சரியில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
Friday, January 26, 2007
Monday, January 22, 2007
சென்னை புத்தகக் கண்காட்சி - கடைசி நாள்
ஜனவரி 21, 2007 ஞாயிறு. இன்று கண்காட்சியின் கடைசி நாள். புத்தகக் கண்காட்சி நடந்த 12 நாட்களிலும் எனிஇந்தியன்.காம் சார்பாக தினசரி புகைப்பட விவரங்களும் பிற தகவல்களையும் சென்னைக்கு வெளியே வாழ்கிற தமிழர்களோடு - சென்ற ஆண்டைப் போலவே - பகிர்ந்து கொள்ள முயன்றோம். என் வலைப்பதிவின் வழியாக விவரமாகவும், திண்ணை.காம் வழியாக முக்கியமானவற்றையும் பகிர்ந்து கொண்டோம்.
எனிஇந்தியன்.காம் தொடர்புடையவை மட்டுமல்லாமல் புத்தகக் கண்காட்சியில் இருந்த பிற பதிப்பகங்கள், பத்திரிகைகள், பற்றிய புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றையும் எங்களால் இயன்ற அளவு பகிர்ந்து கொண்டோம். தீம்தரிகிடவின் தினசரி வாக்குப்பதிவு கேள்விகளை எல்லா நாட்களிலும் தர முயன்றோம். அப்படியே நக்கீரன், தமிழினி, மருதா, உயிர்மை, காலச்சுவடு உள்ளிட்ட பிற கடைகளின் புகைப்படங்களையும் தந்தோம். எங்களால் இயன்ற அளவு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த எழுத்தாளர்கள், முக்கியஸ்தர்கள், வருகையாளர்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டோம். தினமும் ஒருமுறை ஹரன் பிரசன்னாவுடன் தொலைபேசியின் மூலம் பேசிப் புத்தகக் கண்காட்சி விவரங்களை உடனுக்குடன் அறிய முடிந்தது உதவியாக இருந்தது. தினசரி புகைப்படங்களை எடுத்து அவற்றை உடனுக்குடன் அனுப்பி வைத்து உதவியர் நண்பர் சாமிநாதன். அவருக்கு எனிஇந்தியன் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள். அவர் இல்லாவிட்டால், நேரில் சென்று வந்தது போன்ற அனுபவத்தைத் தந்த அளவுக்கான புகைப்படங்கள் சாத்தியாகி இருக்கா.
எனிஇந்தியன் புத்தகங்களுக்கும், வாசகர் சேவைக்கும் கிடைத்திருக்கிற அங்கீகாரம் மகிழ்ச்சியளிக்கிறது.கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் கடைக்கு வருகை தந்த வாசகர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். எங்கள் கடைக்கு வருகை தருகிற நேரம் இல்லாவிட்டாலும், புத்தகக் கண்காட்சியின் மீதான ஆர்வத்தில் கண்காட்சிக்குள் நுழைந்த அத்தனை பேருக்கும் நன்றிகள். புத்தகக் கண்காட்சியை நடத்திய பபாஸிக்கு நன்றிகள். எனிஇந்தியனில் தினசரி புத்தகக் பரிசுகளை வென்றவர்களுக்கு, அவர்களின் பிப்ரவரி 15க்குள் புத்தகங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். சென்னையில் இருக்கிற வெற்றியாளர்கள் எங்கள் தி. நகர் கடையிலும் புத்தகங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
எனிஇந்தியன் புத்தகங்களை வெளியிடும், பெற்றுக் கொள்ளும் முகமாகவும், கடையைப் பார்வையிடும் முகமாகவும் எங்கள் கடைக்கு வந்திருந்த அனைத்துக் கலைஞர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். ஹரன் பிரசன்னாவின் தலைமையில் எனிஇந்தியனின் சென்னை ஊழியர்கள், புத்தகக் கண்காட்சியில் எங்கள் கடை பெற்ற கவனத்திற்குக் காரணமாவார்கள். அவர்களுக்கு எங்களின் பாராட்டுதல்கள்! அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சியில் "தரமான உள்ளடக்கம்" என்று எனிஇந்தியன் பெற்றிருக்கிற பெயருக்கேற்ற புத்தகங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம். அதுவரை நன்றி, வணக்கம்.
கடைசி நாள் காட்சிகள்:
Science Gallery - Demo:
Science Gallery - Magic Well:
Science Gallery - Magic Tunnel:
Blood Donor Registration:
Visitors 1:
Visitors 2:
Dheemtharikida - Dial a Book:
Dheemtharikida Poll:
Infant Visitor:
AnyIndian Winners:
Book Fair Power Source:
Photographer Saminathan:

Saturday, January 20, 2007
சென்னை புத்தகக் கண்காட்சி - பதினோறாம் நாள்
ஜனவரி 20, 2007 (சனி) - இன்று காலை புத்தகக் கண்காட்சி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுவதற்கு முன் தமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் பேட்டரி கார் மூலம் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டார். கண்காட்சியில் இருந்த அனைத்துக் கடைகள் வழியாகவும் முதல்வரின் பேட்டரி கார் சென்றது. ஒவ்வொரு கடையின் முன்னும் நின்று, பதிப்பாளர்களிடம் சில நிமிடங்கள் பேசி, அவர்கள் தருகிற புத்தகங்களை முதல்வர் பெற்றுக் கொண்டார். எனிஇந்தியன்.காம் கடை எண்:326-க்கு முன்னே எனிஇந்தியன்.காம் சார்பாக ஹரன் பிரசன்னா முதல்வரை வரவேற்று, எனிஇந்தியன்.காம் இணையதளம், அதன் செயல்பாடுகள், பதிப்பகப் பிரிவு, ஆகியவை பற்றிச் சொன்னார். பின்னர், எனிஇந்தியன் பதிப்பித்த புத்தகங்களை முதல்வரிடம் அளித்தார். பபாஸி சார்பாக முதல்வரின் வருகையின்போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றை பபாஸி நிர்வாகிகள் பகிர்ந்து கொள்ளும்போது, அவை பபாஸி இணையதளத்தில் பதிப்பிக்கப்படும்.
முதல்வர் பதவியேற்றபின் அரசு விழாக்களில் புத்தகங்கள் மட்டுமே பரிசளிக்கப்பட வேண்டும் என்ற ஆணை, நூலக ஆர்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தியமை, தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் ஒரு கோடியை பபாஸிக்கு வைப்பு நிதியாகக் கொடுத்தது, அதிலிருந்து வருடம்தோறும் ஐந்து லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்க வழி செய்தமை, புத்தகங்களின் மீதும் தமிழின் மீதும் இருக்கிற ஆர்வத்தால் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்ததோடு மட்டுமில்லாமல், அனைத்துக் கடைகளையும் நேரமும் ஆர்வமும் எடுத்துப் பார்வையிட்டமை ஆகியவற்றுக்காக தமிழக முதல்வருக்கு ஒரு வாசகனாகவும், பதிப்பாளனாகவும், என் பாராட்டுகளையும் நன்றிகளையும் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்.
இன்று புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நாளை கடைசி நாள் என்பதாலோ என்னவோ கூட்டம் அலைமோதியது. இயக்குனர் பாலா, எழுத்தாளர் ஜெயமோகன், உதவி இயக்குனரும் எனதருமை நண்பருமான சுரேஷ் கண்ணன் (இவர் நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வர். ஒருமுறை உயிர்மையில் இளையராஜாவைப் பற்றிய கட்டுரையை எழுதியவர்.), சொக்கன், "அங்கிங்கெனாதபடி" வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இன்று எனிஇந்தியன்.காம் கடைக்கு விஜயம் செய்தனர்.
இனி இன்றைய காட்சிகள்:
Buyers at AnyIndian Stall
Director Bala & Writer Jeyamohan
Blogger Siddharth Venkatesh
Night View
Ticket Counter
Dheemtharikida Logo Sale
Dheemtharikida Poll
Suresh Kannan, Jeyamohan & Director Bala
Poet Vikramathithyan & 'Marutha' Balaguru
Christian Convention Alongside
(expect Hindu & Muslim conventions alongside Book Fair next year :-) )
N.Chokkan
Friday, January 19, 2007
சென்னை புத்தகக் கண்காட்சி - பத்தாம் நாள்
Thursday, January 18, 2007
சென்னை புத்தகக் கண்காட்சி - ஒன்பதாம் நாள்
மார்வின் ஹாரிஸ் எழுதி துகாராம் கோபால்ராவ் மொழிபெயர்த்த "பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் - பாகம் 2"-ன் வெளியீட்டு விழா ஜனவரி 18, 2007 (வியாழன்) மாலை எனிஇந்தியன் கடை எண் 326-ல் நடைபெற்றது. பி.ஏ. கிருஷ்ணன் வெளியிட கல்வெட்டியல் ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் பிரவாஹன், வலைப்பதிவர்கள் சுரேஷ் கண்ணன், பிரதீப் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பி.ஏ. கிருஷ்ணன், எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் புத்தகம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஹரன் பிரசன்னா நன்றி சொல்லக் கூட்டம் நிறைவுற்றது.
ஒன்பதாம் நாள் காட்சிகள்: (Please click on the pictures to enlarge them)
Dinamani Review of the book by Pravaahan:
P.A. Krishnan releases S. Ramachandran receives:
P.A. Krishnan, S. Ramachandran & Pravaahan:
Pradeep & Suresh Kannan:
Suresh Kannan & P.A. Krishnan:

Wednesday, January 17, 2007
சென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்
எனிஇந்தியன்.காம் கடை எண் 326-ல் இரண்டு புத்தக வெளியீடுகள் இன்று (ஜனவரி 17, 2007 - புதன்) நடைபெற்றன. பிரதாப சந்திர விலாசம் புத்தகத்தை இந்திரா பார்த்தசாரதி வெளியிட வெளி ரங்கராஜன் பெற்றுக் கொண்டார். இ.பா, ரங்கராஜன் இருவரும் புத்தகத்தைப் பற்றிப் பேசினர்.
ஜெயமோகனின் விசும்பு (அறிவியல் புனைகதைகள்) தொகுப்பை யுவன் வெளியிட ஷாஜி பெற்றுக் கொண்டார். யுவன், ஷாஜி இருவரும் பேசினர். வெளியிட்ட, பெற்றுக் கொண்ட விருந்தினர்கள் எனிஇந்தியன் புத்தகங்கள் பதிப்பு குறித்தத் தங்கள் மேலான ஆலோசனைகளையும் பின்னர் வழங்கினர். எனிஇந்தியன் மீதும் பதிப்புத் தொழில் மீதும் அவர்களுக்கு இருக்கிற அக்கறைக்கு எனிஇந்தியன் நன்றி சொல்கிறது. எங்களால் இயன்ற அளவு அந்த ஆலோசனைகளை செயல்படுத்துவோம். ஹரன் பிரசன்னா நன்றி சொல்லக் கூட்டங்கள் நிறைவுற்றன.
ஜனவரி 17, 2007 (புதன்) காட்சிகள்:
Haran Prasanna speaks:
Indra Parthasarathi releases Veli Rangarajan receives:
Yuvan releases Shaji receives:
A. Ganesan:
Professor Bakthavatchala Bharathi (Right):
I.Pa - Narmadha Srinivasan - R. Venkatesh:

Subscribe to:
Posts (Atom)